For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடையில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற தொடையைப் பெற செய்ய வேண்டிய செயல்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

|

உடலில் அடிவயிற்றுக்கு அடுத்தப்படியாக தொடைப்பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கத் தான் பலரும் பாடுபடுவார்கள். தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.

Follow These Easy Steps to Lose Inner Thigh Fat For Good

தினமும் சரியான டயட்டுடன், ஒருசில எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தாலே போதும். சரி, இப்போது தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற தொடையைப் பெற செய்ய வேண்டிய செயல்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான டயட்

ஆரோக்கியமான டயட்

தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதற்காக சர்க்கரை, க்ளூட்டன் போன்றவை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. சரிவிகிதமாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இனிப்பு பானங்கள் மற்றும் கலோரிகள் நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

சாப்பிடும் முறை

சாப்பிடும் முறை

ஒரு நாளைக்கு பலமுறை உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் 2-3 மணிநேரத்திற்கு ஒருமுறை சிறு அளவிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் சூப், பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன சாலட், ஜூஸ் போன்றவை இருந்தால் இன்னும் நல்லது.

MOST READ: கர்ப்பம் தரித்து இருப்பதை அறிந்து கொள்ள உதவும் வழிமுறைகள் என்னென்ன?

கார்டியோ

கார்டியோ

சரியான டயட்டுடன், தினமும் கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்து வர வேண்டும். உங்களுக்கு ரன்னிங் மேற்கொள்ள விருப்பமில்லை என்றால், அருகில் எங்காவது ஜும்பா வகுப்பு இருந்தால், அங்கு சேர்ந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அருகில் உள்ள ஜிம்மில் தினமும் 30 நிமிடம் கார்டியோ பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள். இதனால் தொடைகளில் உள்ள தசைகள் நல்ல வடிவமைப்பைப் பெறும்.

Side Lunges Exercise

Side Lunges Exercise

இந்த உடற்பயிற்சிகள் தொடையில் உள்ள தசைகளுக்கு நல்லது. தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க எடையுடனான லாஞ்சஸ் பயிற்சியை செய்யுங்கள். அதிலும் படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு செட்டிற்கு 10 எண்ணிக்கை என மூன்று செட் செய்து வந்தால், தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, தொடைத் தசைகள் வடிவமைப்பைப் பெறும்.

Leg Lift

Leg Lift

இந்த பயிற்சியும் கால்களுக்கு நல்லது. அதற்கு படத்தில் காட்டப்பட்டவாறு தரையில் படுத்துக் கொண்டு, முதலில் ஒரு காலை மேலே தூக்க வேண்டும். பின் அதை இறக்கி, மறுகாலை மேலே தூக்க வேண்டும். இப்படி 10 எண்ணிக்கையில் 3 செட் செய்ய வேண்டும். பின்பு சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் மேலே தூக்க வேண்டும். இப்படி 5 எண்ணிக்கையில் 3 செட் செய்ய வேண்டும்.

Fire Hydrants Workout

Fire Hydrants Workout

படத்தில் காட்டப்பட்டவாறு தவழும் குழந்தைப் போன்ற நிலையில் இருந்து, ஒரு காலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்க வேண்டும். பின் மறுகாலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்கவும். இப்படி தினமும் செய்ய தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.

MOST READ: இந்த 9 பானங்களில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க... உங்கள எந்த நோயும் அண்டாது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Follow These Easy Steps to Lose Inner Thigh Fat For Good

Here are some tips and simple exercises to improve your diet and eliminate your thigh fat.
Desktop Bottom Promotion