For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு கிலோ எடையைக் குறைக்க இந்த லெமன் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

By Maha
|

வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட நிறைய பேர் ஜிம்மில் மணிக்கணக்கில் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி வெறுமனே ஜிம்மில் உடற்பயிற்சியை செய்து வந்தால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது.

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க...

உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டும்படியான பானங்கள், உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் தினமும் ஒரு கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் பானம் குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் இதை லெமன் டயட் என்று அழைப்பார்கள்.

நாளுக்கு நாள் உங்க தொப்பை பெருசாகுதா? அதைத் தடுக்க இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெமன் டயட்

லெமன் டயட்

லெமன் டயட்டை மேற்கொண்டால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் போன்றவை முற்றிலும் நீக்கப்படும். உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருக்கச் செய்யும்.

பியான்ஸ் டயட்

பியான்ஸ் டயட்

இந்த லெமன் டயட்டை பியான்ஸ் டயட் என்றும் அழைப்பார்கள். ஏனெனில் பியான்ஸ் என்னும் பாப் பாடகி, பிரசவம் முடிந்த பின் இந்த டயட்டை மேற்கொண்டு 38 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 8 கப்

எலுமிச்சை - 6

தேன் - 1/2 கப்

புதினா - 10 இலைகள்

ஐஸ் கட்டிகள் - சிறிது

செய்முறை

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடானதும், அதில் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் புதினா சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கி, குளிர வைத்து, ஃப்ரிட்ஜில் பல மணிநேரம் வைக்க வேண்டும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

இந்த பானத்தை ஒவ்வொரு முறை பருகும் போதும், ஒவ்வொரு கப்புடனும் 1 ஐஸ் கட்டி துண்டுகளை சேர்த்து குடிக்க வேண்டும். ஏனெனில் குளிர்ச்சியான பானங்கள் அல்லது உணவுப் பொருட்கள் உடலினுள் செல்லும் போது, அதை வெதுவெதுப்பாக்குவதற்கு உடல் அதிகப்படியான சக்தியை பயன்படுத்தும்.

காலை நேரம்

காலை நேரம்

இந்த பானத்தை காலை உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் பருக வேண்டும். மேலும் காலை உணவு ஃபுரூட் சாலட் ஆக தான் இருக்க வேண்டும். பின் 11 மணிக்கு, 2 ஆவது டம்ளரைப் பருகி, சிறிது பாதாமை ஸ்நாக்ஸாக உட்கொள்ள வேண்டும்.

 மதிய நேரம்

மதிய நேரம்

அடுத்து மதிய வேளையில் 2 வேக வைத்த முட்டையுடன் சிறிது லெட்யூஸ் சாலட் சாப்பிட வேண்டும். அந்த லெட்யூஸ் சாலட்டில் மசாலாப் பொடிகள், ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்திருக்க வேண்டும்.

மாலையில்...

மாலையில்...

பின் 4 மணியளவில் மற்றொரு டம்ளர் எலுமிச்சை பானத்தைப் பருக வேண்டும். அப்போது சிறிது பழங்களை உட்கொள்ள வேண்டும்.

இரவு நேரம்

இரவு நேரம்

இரவில் க்ரில் மீன் அல்லது க்ரில் சிக்கனை உட்கொள்ள வேண்டும். பின் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் எலுமிச்சை பானத்தைப் பருக வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த முறையை 5 நாட்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இந்த காலத்தில் ஆரோக்கியமற்ற அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

திருநெல்வலி இருட்டு கடை அல்வா..!!

English summary

Fast Weight Loss: One Kilogram A Day With The Lemon-Diet!

Do you want to reduce your weight? With this incredible and amazing diet you will lose weight very quickly, 1 kilogram every day!
Desktop Bottom Promotion