For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் உடல் மற்றும் வயிற்றைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் பானங்கள்!

By Maha
|

கொளுத்தும் கோடை வெப்பத்தினால் உடலில் உள்ள நீர்ச்சத்து வறட்சி அடைய ஆரம்பித்து, சருமம் பொலிவின்றி சோர்வுடன் காட்சியளிக்கும். உடல் வறட்சி அடையும் போது, நீர்ச்சத்து மட்டும் குறைவதில்லை, நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவற்றை இழந்து,. அதனால் உடல் பலவீனம், வாந்தி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் தசைப்பிடிப்புக்கள் போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.

கோடையில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும் பானங்கள்!

எனவே கோடையில் வெறும் குடிக்கும் நீரின் அளவை மட்டும் அதிகரிக்காமல், சற்று அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் படியான பானங்களையும் பருக வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, கோடையில் சந்திக்கும் உடல் வெப்பம், வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!

இங்கு கோடையில் வயிறு மற்றும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து குடித்து, கோடையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்

தயிர்

வயிறு மற்றும் உடலைக் குளிர்ச்சியுடனும், உடலுக்கு வேண்டிய சத்துக்களை உள்ளடக்கியும் இருக்கும் ஓர் உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரை கோடையில் தினமும் பருகி வந்தால், அதனால் அதில் உள்ள இயற்கையான புரோபயோடிக்குகள் பல்வேறு நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் பேராடும். அத்தகைய தயிரை இரண்டு வகையில் தயாரித்து கோடையில் குடிக்கலாம்.

தயிர் ஜூஸ்

தயிர் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

குளிர்ந்த நீர் - 1 1/2 கப்

இஞ்சிப் பொடி - 1 சிட்டிகை

உப்பு - சிறிது

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை

செய்முறை

ஒரு பாட்டிலில் தயிர், குளிர்ந்த நீர், கொத்தமல்லி, இஞ்சிப் பொடி, உப்பு சேர்த்து, பாட்டிலை மூடி சிறிது நேரம் நன்கு குலுக்கி, பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, மேலே சீரகப் பொடி தூவி பருகவும்.

லஸ்ஸி

லஸ்ஸி

தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் - 5 டேபிள் ஸ்பூன்

குளிர்ந்த நீர் - 1 பெரிய கப்

சர்க்கரை - தேவையான அளவு

துருவிய தேங்காய் - 1/4 கப்

முந்திரி, உலர் திராட்சை - சிறிது

செய்முறை

செய்முறை

முதலில் ஒரு மூடி கொண்ட டப்பாவில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் தயிர், துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து, டப்பாவை மூடி நன்கு குலுக்கி, டம்ளரில் ஊற்றி முந்திரி மற்றும் உலர் திராட்சை தூவி பருகவும்.

புதினா

புதினா

புதினா குளிர்ச்சிமிக்க ஓர் மூலிகைப் பொருள். மேலும் இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் ஓர் அற்புத பொருளும் கூட. புதினாவில் உள்ள மென்தால் உடலை குளிர்ச்சியுடன் உணர வைக்கும்.

புதினா எலுமிச்சை ஜூஸ்

புதினா எலுமிச்சை ஜூஸ்

தேவையான பொருட்கள்:

புதினா - 1/4 கப்

கொத்தமல்லி - 1/4 கப்

குளிர்ந்த நீர் - 1 பெரிய கப்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை - 1/2

செய்முறை

செய்முறை

புதினா மற்றும் கொத்தமல்லியை நன்கு நீரில் அலசி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

தர்பூசணி

தர்பூசணி

கோடைக்கால பழமான தர்பூசணி உடலை குளிர்ச்சியுடனும், நீர்ச்சத்துடனும் வைத்துக் கொள்ளும். இப்பழத்தில் கலோரிகள் குறைவு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், லைகோபைன் போன்றவை அதிகம். இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை அதிகம் உட்கொள்ள உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். முக்கியமாக தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலின் ஆற்றலை நிலைக்கச் செய்து, சோர்வு, தலைச்சுற்றல் போன்றவற்றைத் தடுக்கும்.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி ஜூஸ்

தேவையான பொருட்கள்:

தர்பூசணி - 2 கப்

தேன் - தேவையான அளவு

குளிர்ந்த நீர் - 1/4 கப்

ஐஸ் கட்டிகள் - சிறிது

செய்முறை

செய்முறை

மிக்ஸியில் தர்பூசணி, குளிர்ந்த நீர், தேன் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, டம்ளரில் அப்படியே ஊற்றி ஐஸ் கட்டிகளைச் சேர்ந்து பருக வேண்டும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயும் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் ஒன்று. இதில் கலோரிகள் குறைவு, ஆனால் நீர்ச்சத்து ஏராளமாக உள்ளது. இதனை கோடையில் அதிகம் உட்கொண்டால், நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் இதில் சத்துக்களும் அதிகம் உள்ளதால், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1/2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

புதினா - 1 டேபிள் ஸ்பூன்

குளிர்ந்த நீர் - 1 கப்

எலுமிச்சை - 1/2

உப்பு - தேவையான அளவு

செய்முறை

செய்முறை

மிக்ஸியில் வெள்ளரிக்காய் துண்டுகளைப் போட்டு, குளிர்ந்த நீர், புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளரில் ஊற்றி எலுமிச்சையை பிழிந்து, உப்பு சிறிது சேர்த்து கலந்து பருக, வயிற்று எரிச்சல் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கோவில்பட்டி கடலை மிட்டாய் இப்போது ஆன்லைனில்!!

English summary

Delicious Juice to Keep Body And Stomach Cool in Summer

Here are some delicious juice to keep stomach cool in summer and for glowing skin. Read on to know more...
Desktop Bottom Promotion