For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் பிரச்சனைகளைப் போக்கும் பத்த கோணாசனம் -தினம் ஒரு யோகா

By Hemalatha
|

யோகாவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இந்த யோகா எளிதாக இருக்கும். அமர்வது போன்று செய்யப்படும் இந்த யோகா அடிவயிற்றில் உள்ள ஹார்மோன்களை தூண்டி, அங்கு உள்ள உறுப்புக்களுக்கு ரத்த ஓட்டம் அதிகம் பாயச் செய்கிறது.

இந்த காலகட்டத்தில் 5 லிருந்து 10 சதவீத பெண்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் உருவாகிறது. இந்த யோகா செய்வதனால் கருப்பையில் நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கும்.

Baddha koanasana to cure ovarian cyst

பெரும்பாலும் இப்போதுள்ள பெண்கள் உடலுக்கு அதிக வேலைகள் கொடுப்பது கிடையாது. உட்கார்ந்தபடியே வேலை செய்வதனாலும், சரியான உடற்பயிற்சி இல்லாததாலும், அடிவயிற்றில் ரத்த ஓட்டம் குறைவாகவே காணப்படும். இது கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பொதுவாக ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் போது, அந்த உறுப்புகள் உள்ள பகுதிகளில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் நோய்கள் தடுக்கப்படும்.

இந்த பத்த கோணாசணம் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க காரனமாகின்றன. ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். நீர்ப்பைகள் கருப்பையில் உருவாவதை தடுக்கச் செய்யும்.

பத்த கோணாசனம் செய்யும் முறை :

முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும்.

இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை மேலே படத்தில் உள்ளவாறு மடக்குங்கள். இரு கால்களும் மடக்கி சம நிலையில் வைத்திருங்கள். இருபாதங்களும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்கவேண்டும். கைகளால் பாதங்களை பொத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

முட்டிகள் தரையை தொடக் கூடாது. தொடைகளை மட்டும் சிறிது தரையில் தாழ்த்தினால் முட்டிகள் சம நிலையில் சரியாக இருக்கும்.. அந்த நிலையில் 1- 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் முட்டிகளை உயர்த்தி, கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்

பலன்கள் :

மன அழுத்தம், தேவையில்லாத குழப்பங்கள், கருப்பை நீர்கர்ட்டி ஆகியவைகள் வராமல் தடுக்கும். அது போலவே முறையற்ற மாதவிலக்கு சீராகும். முடிஉதிர்தல், முகப்பரு, உடல் பருமன் ஆகியவைகளும் சீராகும்.
தினமும் இரு வேளைகள் செய்யுங்கள்.

English summary

Baddha koanasana to cure ovarian cyst

Baddha koanasana to cure ovarian cyst
Desktop Bottom Promotion