For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க உதவும் எளிமையான சிறந்த 6 உணவுகள் !!

உடல் எடையை குறைக்க உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில வகை உணவுகள் வயிறையும் நிறையச் செய்யும். குறைவான கலோரிகளையும் பெற்றிருக்கும்.சில கொழுப்பை குறைக்கும். சில வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும்

|

உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறதா? அப்படியெனில் நோய்களை நீங்கள் தாம்பூலம் கொடுத்து வரவழைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள், யோகாவைப் போல் முக்கியம் சாப்பிடும் உணவு மற்றும் நேரம். இரவுகளில் அதிக பட்சம் 9.30 மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

 Amazing foods to reduce body weight

இல்லையென்றால் வயிற்றுத் தொப்பையை தவிர்க்க இயலாது. குறைக்கவும் முடியாது. காலையிலும் இரவுகளிலும் தாமதமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

உடல் எடையை குறைக்க உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறைவான கலோரி, கொழுப்பை குறைக்க, அதிக வளர்சிதை மாற்றத்தை உண்டு பண்ண என உடல் எடை குறைய முக்கியம் உங்கள் உணவை தேர்ந்தெடுப்பதுதான். அப்படியான உணவுகளை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூசணிக்காய் :

பூசணிக்காய் :

பூசணிக்காய் பார்க்கதான் குண்டு. ஆனா குறைவான கலோரியை பெற்றுள்ளது. பீட்டா கரோடின் மிக அதிக அளவில் உள்ளது.

அதிக நீர் சத்தும் கொண்டது. பூசணிக்காயை சாலட் , பொறியல், குழம்பு என வாரம் 3 நாட்கள் உபயோகித்து பாருங்கள்.

பட்டை :

பட்டை :

பட்டை நிஜமாகவே ஒரு அரிய மூலிகைதான். அதிலுள்ள பாலிஃபீனால் இன்சுலின் ஹார்மோனை தூண்டுகிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்கும்.

தினமும் பட்டையை உணவில் சேர்த்திடுங்கள். உங்கள் எடை குறைப்பில் மாற்றம் உண்டாகும்.

பெக்கான் :

பெக்கான் :

பெக்கான் என்னும் நட்ஸ் பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும். இதன் சுவையும் அருமையாக இருக்கும்.

இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றவை.

நொறுக்குத் தீனிக்கு கண்ட சிப்ஸ் எல்லாம் சாப்பிடாமல் இது போன்ற நட்ஸ் சாப்பிட்டு பாருங்கள். உடல் எடை சற்றும் ஏறாது.

காலிஃப்ளவர் :

காலிஃப்ளவர் :

காலிஃப்ளவர் சுவை போலவே சத்தும் அபாரம். அதிலுள்ள அன்டி ஆக்ஸிடென்ட் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றும். இதனால் உடல் எடை கணிசமாக குறையும்.

கொழுப்பை எரிக்க உதவும். குறைவாகவே கலோரி பெற்றுள்ள உணவு. வயிற்றையும் நிரப்பும். ஒரே விஷயம் நீங்கள் அதனை எண்ணெயில் பொரிக்காமல் வேக வைத்து அல்லது சாலட் போல் சாப்பிடுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள் :

எளிமையானது. எல்லா இடங்கலிலும் கிடைக்கக் கூடியது. அத்தனை சத்துக்களை உள்ளடக்கியது. அதிக நார்சத்து கொண்டது. வயிற்றை நிரப்பும்.

அதிலுள்ள பாலிஃபீனால் நல்ல பேக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். இதனால் ஜீரணம் விரைவில் நடைபெறும்.

 பாலில்லா தேநீர் :

பாலில்லா தேநீர் :

பால் கலக்காத வரத் தேநீரை குடித்தான் உடல் எடை குறையும் என பல ஆய்வுகள் சொல்கிறது. இதிலுள்ள ஃப்ளேவினாய்டு உடல் உடையை குறைக்கச் செய்கிறது. இரு வேளை வரத் தே நீரை குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing foods to reduce body weight

6 Best foods to reduce body weight. They increase the metabolic functions and reduce the cholesterol level
Story first published: Friday, October 21, 2016, 12:10 [IST]
Desktop Bottom Promotion