For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை குறைக்கும் முன் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை - டயட்டிஷியன் அறிவுரைகள்!

|

இன்றைய சூழலில் மார்ஸுக்கு ராக்கெட் கூட அனுப்பிவிடலாம் போல, ஆனால் உடல் எடை குறைப்பது அதைவிட கடினம் என்ற ஓர் பிம்பம் உருவாகியுள்ளது. இரண்டு சுற்று உடல் எடை அதிகமானால் கூட அவ்வளவு மன அழுத்தம், வருத்தம் அதிகரித்துவிடுகிறது.

உடல் எடை ஒன்றும் ஒரே நாளில் ஏறிவிடுதில்லை. அதே போல ஒரே நாளில் உடல் எடையை குறைத்துவிடவும் முடியாது. இதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உணவில் கடினமான டயட்டை பின்பற்றினாலும் கூட உடல் எடை குறையாது.

இதையும் படிங்க: உங்கள் ஜிம் பயிற்சியாளர் உங்களிடம் சொல்லாமல் மறைக்கும் சில விஷயங்கள்!!!

ஏனெனில், உணவு உண்பதால் மட்டும் உடல் எடை அதிகரிப்பதில்லை. உணவு சரியாக செரிக்காமல், கலோரிகள் கரைக்காமல் விட்டதால் தான் உடல் பருமன் உண்டாகிறது. எனவே, உணவில் மட்டும் மாற்றம் கொண்டு வருவதால் உடல் எடையை குறைத்துவிட முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட் வழிமுறைகள்!

டயட் வழிமுறைகள்!

உடல் எடை குறைப்பதற்கு என்று எடுத்துக் கொண்டால் ஒரு லட்சத்திற்கும் மேலான வழிமுறைகள் இருக்கும். டயட்டிஷியன்கள் கூறுபவை, தானாக செயல்படுத்தி சிலர் கூறுபவை, அரைகுறை மேதாவிகள் கூறுபவை என இவை எண்ணிலடங்காமல் நீள்கிறது.

இது மட்டும் போதுமா?

இது மட்டும் போதுமா?

டயட்டில் இறைச்சி உணவுகள், கார்ப்ஸ் உணவுகள், சர்க்கரை போன்றவற்றை குறைத்துவிட்டால் உடல் எடை குறைந்துவிடுமா? இப்படியானால் அமெரிக்காவில் இருந்து உலகெங்கிலும் உடல் பருமன் என்ற வார்த்தையே இல்லாமல் போயிருக்க வேண்டும்.

உண்மையில் உடல் எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

உண்மையில் உடல் எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

நிஜமாகவே உடல் எடை குறைக்க என்ன செய்ய வேண்டும் என கிம்பர்லி கோமேர் எனும் டயட்டிஷியன் சில குறிப்புக்கள் கூறியுள்ளார். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு முறைகள் மட்டுமின்றி, உறக்கம், உடற்பயிற்சி, வாழ்வியல் முறை மாற்றங்கள் என பலவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

ஆர்வம்!

ஆர்வம்!

பலருக்கும் உடல் எடை குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் தான் இருக்கிறதே தவிர, செயலில் பெரிதாய் காட்டுவதில்லை. நீங்கள் உணவு முறையில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, உடல் எடை குறைத்துவிடலாம் என்பது முட்டாள்தனம். இதை முதலில் மறந்துவிடுங்கள்.

செயலில் வெளிப்படுத்துங்கள்!

செயலில் வெளிப்படுத்துங்கள்!

உணவுமுறையோடு சேர்த்து, நல்ல உடற்பயிற்சி, நேரத்திற்கு உறங்கும் பண்பு, மந்தமாக உட்கார்ந்தே இருப்பதை தவிர்த்து நடப்பது, ஜாக்கிங் செய்வது போன்றவற்றில் ஈடுபடுதல், லிபிட்டை தவிர்த்து படிகளை பயன்படுத்துவது என பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை!

தவிர்க்க வேண்டியவை!

கார் ஒட்டிக் கொண்டே சாப்பிடுவது, மொபைலில் பேசிக் கொண்டே சாப்பிடுவது, வேலை செய்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை யாவும் உங்களுக்கே தெரியாமல் உடலில் அதிக கலோரிகள் அதிகரிக்க காரணிகளாய் இருக்கின்றன.

மகிழ்ச்சியான வாழ்க்கை!

மகிழ்ச்சியான வாழ்க்கை!

உடல் எடை குறைப்பது உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கவும் காரணியாக இருக்கும். எனவே, ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், அதே நேரம் உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி மற்றும் நேரத்திற்கு உறங்கும் பண்பையும் உண்டாக்கிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Dietitian Explains Why You Should Stop Dieting

A Dietitian Explains Why You Should Stop Dieting, If You Actually Want To Lose Weight.
Desktop Bottom Promotion