For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...

By Maha
|

இன்றைய காலத்தில் பலருக்கு இளமையிலேயே மூட்டு வலிகள் ஏற்படுகிறது. பொதுவாக மூட்டு வலிகள் 40 வயதிற்கு மேல் தான் ஆரம்பமாகும். ஆனால் தற்போது சீக்கிரமாகவே மூட்டுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு மூட்டுகளுக்கு அதிகப்படியான வேலைகளைக் கொடுத்துவிட்டு, மூட்டுகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் செய்வது தான் முக்கிய காரணம்.

ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தினமும் போதிய உடற்பயிற்சியை செய்து வந்தால், மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் உடற்பயிற்சி செய்யும் போது தளர்ந்த மூட்டுகள் வலிமை அடைந்து, சீராக செயல்படவும் ஆரம்பிக்கும்.

ஒருவேளை உங்கள் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் அதிகம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், அது பிற்காலத்தில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இங்கு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Tips To Keep Your Joints Healthy

* உடல் எடை அதிகம் இருந்தால், அது மூட்டுகளில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்து, அதுவே மூட்டுகளில் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகவே சீரான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். இதனால் மூட்டுகளில் கொடுக்கப்படும் அழுத்தத்தின் அளவு குறையும்.

* நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், தினமும் ஏரோபிக்ஸ், ரன்னிங் போன்றவற்றை செய்து வந்தால், மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

* காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். மேலும் பால் பொருட்களை சேர்த்து வந்தால், எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைத்து எலும்புகள் வலிமையாக இருக்கும். குறிப்பாக உடலில் யூரிக் ஆசிட்டின் அளவைக் குறைக்கவும். ஏனெனில் அது தான் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தி, அதன் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.

* எப்போதும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். நீண்ட நேரம் மூட்டுகளுக்கு தொந்தரவு தரும் வகையில் இருந்தால், அதுவே அதன் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

English summary

Tips To Keep Your Joints Healthy

Here we may discuss some health tips to keep joints healthy. 
Story first published: Friday, January 23, 2015, 18:56 [IST]
Desktop Bottom Promotion