For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ஜிம் பயிற்சியாளர் உங்களிடம் சொல்லாமல் மறைக்கும் சில விஷயங்கள்!!!

By Super
|

நீங்கள் சில காலமாக ஜிம்மிற்கு சென்று வந்து கொண்டிருந்தாலும், எந்த ஒரு பலனையும் காணாமல் இருப்பீர்கள். ஆம், பல நேரங்களில் அது பயிற்சியாளரின் சோம்பேறித்தனத்தால் ஏற்படும் விளைவாகும். மீண்டும் ட்ரெட்மில்லில் ஓடுங்கள் என உங்கள் பின்னால் வந்து உங்களை விரட்ட மாட்டார்.

ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

ஆனால் அதிர்ச்சியான விஷயங்கள் மேலும் உள்ளன. சில விஷயங்களை உங்கள் ஜிம் பயிற்சியாளர் உங்களிடம் சொல்லமாட்டார். இந்த அறிவு உங்களுக்கு கிடைக்காமல் போவதால், உங்களுக்கு இழப்பு அதிகமே!

நேரத்தை வீணாக்கும் 6 வகையான ஜிம் உடற்பயிற்சிகள்!!!

உங்கள் உடல் கட்டமைப்பைப் பற்றி உண்மையிலேயே நீங்கள் அக்கறை கொண்டிருந்து, உங்கள் உழைப்பு வீணாக போக வேண்டாமென்றால், சோம்பேறியான உங்கள் ஜிம் பயிற்சியாளர் உங்களிடம் கூறாத விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்நலம் சரியில்லாத போது உடற்பயிற்சி செய்யாதீர்கள்

உடல்நலம் சரியில்லாத போது உடற்பயிற்சி செய்யாதீர்கள்

புதிதாக தொடங்கியவர்களுக்கு இது சற்று கடினமானதாக தான் இருக்கும். ஆனால் உங்களுக்கு நீங்கள் நேர்மையாக நடந்து கொண்டு, உடல்நலம் சரியில்லாமல் போவதற்கும் வெறுமனே சளி போன்ற சிறிய விஷயங்களும் இடையே உள்ள வேறுப்பாட்டை ஒத்துக் கொள்ளுங்கள். இந்நேரத்தில் உங்கள் வீரத்தை காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. இந்நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் இன்னும் சில நாட்களுக்கு மேலும் உடல் சுகவீனத்தைப் பெறுவீர்கள்.

அனைத்து கருவிகளும் தேவையில்லை

அனைத்து கருவிகளும் தேவையில்லை

உங்கள் ஜிம் பயிற்சியாளர் உங்களை அங்கே இருக்கும் ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்த கூறினார் என்றால், அவர் நல்ல பயிற்சியாளராக இருக்க வாய்ப்பில்லை. உங்களை உங்கள் பயிற்சியாளர் ஒவ்வொரு கட்டமாக எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு பளு தூக்கல், ஸ்ட்ரெச்சஸ் மற்றும் கலவை இயக்கங்கள். மாறாக அனைத்து கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது.

எரிச்சலுக்கும் வலிக்கும் உள்ள வேறுபாடு

எரிச்சலுக்கும் வலிக்கும் உள்ள வேறுபாடு

மீண்டும், இதற்கு தேவைப்படுவது சிறியளவிலான உங்கள் பொது அறிவு. ஆனாலும் ஏதேனும் ஆபத்து வருவதை நீங்கள் எதிர்நோக்க வேண்டும். சொல்லப்போனால் இது உங்கள் உடம்பு... அதைப் பற்றி உங்களைத் தவிர வேறு யாருக்கு நன்றாக தெரியும். வலிக்கும் எரிச்சலும் இடையே வேறுபாடு உள்ளது. நல்ல பயிற்சியாளருக்கு அதைப் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இருப்பினும், உங்கள் கணுக்கால் முதல் நுரையீரல் வரை எப்போது எரிச்சல் ஏற்படுகிறது என்பதையும், எப்போது வலி ஏற்படுகிறது என்பதையும் கூற வேண்டியது உங்களுடைய பொறுப்பாகும்.

பிற்சேர்க்கைப் பொருட்களை வேண்டாம் என சொல்லுங்கள்

பிற்சேர்க்கைப் பொருட்களை வேண்டாம் என சொல்லுங்கள்

நம்மில் பலரும் புரதம் மற்றும் டையட்டரி பிற்சேர்க்கை பொருட்களுக்கு (Supplements) ஜிம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இரையாகி இருப்பீர்கள். ஜிம் பயிற்சியாளர்களோ எதுவும் செய்யாமல் உங்களை தூண்டியும் விடுவார்கள். தசை வளர்ச்சிக்கு நல்லது என நம்பப்படுவதால், அமினோ அமில பொடிகள் தான் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இருப்பினும் நீர்த்த தூள் பொருட்களை சார்ந்திருப்பதற்கு பதிலாக, வேறு சிறந்த அமினோ அமில மூல உணவை நாடுங்கள். அன்றாட உணவுகளில் உள்ள டையட்டரி குறைபாடுகளை எவ்வளவு பிற்சேர்க்கை பொருட்களை பயன்படுத்தினாலும் சரிகட்ட முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் தோரணையும் முக்கியம்

உங்கள் தோரணையும் முக்கியம்

ஆம், கூடுதலாக ஷாப்பிங் செய்வதற்கு இது ஒரு சாக்காகும்! தூங்குவதற்காக நீங்கள் அணிந்திருக்கும் பழைய சட்டை மற்றும் இத்துப்போன ஷூவை கொண்டு உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிகபட்ச பலனை எதிர்ப்பார்க்காதீர்கள். நல்லதொரு ஆடை அணிவது நல்ல உணர்வை அளிப்பதோடு, உங்களை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கவும் தூண்டும்.

தொப்பையை எண்ணி நீங்கள் வருத்தப்பட தேவையில்லை

தொப்பையை எண்ணி நீங்கள் வருத்தப்பட தேவையில்லை

உங்கள் வயிற்றை சுற்றியுள்ள கூடுதல் கொழுப்பை கரைக்க சிட்-அப்ஸ் மற்றும் க்ரஞ்சஸ் போன்ற உடற்பயிற்சிகள் தான் தேவையான ஒன்று என்ற கட்டுக்கதைகள் உள்ளது. பல பயிற்சியாளர்கள் இதனை ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருப்பார்கள். ஒருவேளை, அவருக்கு போதிய அனுபவம் இல்லையென்றால் இதை கவனியுங்கள்: உங்கள் வயிற்றை நல்ல வடிவத்திற்கு கொண்டு வர அனைத்து உடல் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். முக்கால்வாசி வயிற்று கொழுப்பு உணவில் இருந்து வருபவை. சரியான உணவு பழக்கம் மற்றும் சீரான உடற்பயிற்சிகள் (தீவிர வயிற்று உடற்பயிற்சியால் மட்டுமல்ல) மூலம் நீங்கள் பலனை அடையலாம்.

அது செஸ்ட்-அப், சின்-அப் அல்ல

அது செஸ்ட்-அப், சின்-அப் அல்ல

புஷ்-அப் மற்றும் சின்-அப் ஆகிய இரண்டுமே வலு-வளர்ச்சிக்கான பொதுவான இரண்டு உடற்பயிற்சிகள் ஆகும். இருப்பினும் இந்த இரண்டை தான் பெரும்பாலும் ஆண்கள் தவறாக செய்வார்கள். சின்ஸ்-அப் என்பதை செஸ்ட்-அப் என்றே அழைக்க வேண்டும். அதற்கு காரணம் அதிகப்படியான உடல் வலு பலனை அடைய, கம்பியின் மேல் நீங்கள் நெஞ்சை தூக்க வேண்டும் (தாடையை அல்ல).

உங்கள் புஷ்-அப்பை சரி செய்யுங்கள்

உங்கள் புஷ்-அப்பை சரி செய்யுங்கள்

புஷ்-அப் செய்வதிலும் கூட தவறுகள் நடக்கக்கூடும் தரையில் வைத்துள்ள பாரின் கைப்பிடி அல்லது டம்ப்பெல்ஸை நீங்கள் பிடித்து செய்யும் போது புஷ்-அப்ஸ் நன்றாக செய்யப்படுகிறது. மாறாக தரையில் உள்ளங்கையை வைத்து செய்வது சரியல்ல. அப்படி செய்வதால் உங்கள் மணிக்கட்டுக்களில் வலி எடுக்க தொடங்கி விடும். உள்ளங்கையை வேறு எங்காவது வைப்பதால், உங்கள் மணிக்கட்டுகளை நீட்டிக் கொள்வீர்கள். இது அழுத்தத்தை குறைத்து, நல்ல பலனை அளிக்கும்.

நீண்ட நேரத்திற்கு பதிலாக குறைந்த நேர உடற்பயிற்சியே போதும்

நீண்ட நேரத்திற்கு பதிலாக குறைந்த நேர உடற்பயிற்சியே போதும்

உங்கள் பயிற்சியாளர் உங்களிடம் பெரும்பாலும் சொல்லாத மற்றொரு விஷயம் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. குறிப்பாக ஓய்வெடுக்க, இடைவேளை எடுக்க, அரட்டை எடுக்க பயன்படுத்தும் நேரங்களை தவிர்த்து விடலாம். நீண்ட நேரத்திற்கு செய்யும் உடற்பயிற்சிகளை விட, குறுகிய மற்றும் செறிவான உடற்பயிற்சிகள் நன்மையை அளிக்கும். இவ்வகையான உடற்பயிற்சிகள் தான் உங்களை நீண்ட காலத்திற்கு கட்டமைப்புடன் வைக்க உதவும் என பல ஆய்வுகள் கூறியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Your Gym Trainer Will Never Tell You

If you are serious about your fitness level and dont want your efforts to go waste, heed these oft-ignored tips your lazy gym trainer will never tell you.
Desktop Bottom Promotion