For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலை வேளையில் தானியங்களை உணவாக எடுத்து வருவதன் முக்கியத்துவம்!!!

By Ashok CR
|

முழு தானியங்களை பற்றி குறிப்பிடாமல் எந்த ஒரு ஆரோக்கியமான உணவு அறிவுரைகளும் முழுமை பெறாது. சரி நம் உணவுகளில் முழு தானியங்களின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் என வரும் போது நமக்கு அதற்கான குறைந்தபட்ச அறிவு இருக்கிறதா?

முழு தானியங்கள் என்பது ஆரோக்கியமானது மட்டுமல்லாது மீண்டும் மீண்டும் வாங்கி உண்ண வைக்கும் ருசியையும் ஆரோக்கியத்தையும் கூட உணவிற்கு அது அளித்திடும். அப்படி எல்லாம் இருந்தும் கூட நம்மில் பலருக்கும் முழு தானியங்கள் என்றாலே தெரிவது பழுப்பு ரொட்டியும் பழுப்பு அரிசியும் மட்டுமே.

ஆனால் அதையும் மீறி முழு தானியங்களை பற்றி தெரிந்து கொள்ள பல உள்ளது என புது டெல்லியில் உள்ள ராக்லாண்ட் மருத்துவமனையில் மூத்த உணவு நிபுணரான சுனிதா ராய் சௌத்ரி கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு தானிய உணவுகள் என்றால் என்ன?

முழு தானிய உணவுகள் என்றால் என்ன?

தவிடு நீக்கப்படாத தானியங்களையே முழு தானியம் என்கிறார்கள். பல தானியங்களின் ஊட்டச்சத்துக்களே அவைகளை மூடியுள்ள தவிட்டில் தான் உள்ளது. தானியங்களை சுத்தரிக்கும் போது தவிட்டை நீக்கிவிட்டால் பல ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்.

முதன்மையான 10 முழு தானிய உணவுகள்

முதன்மையான 10 முழு தானிய உணவுகள்

1. கோதுமை

2. பழுப்பு அரிசி

3. ஓட்ஸ்

4. பார்லி

5. சோளம்

6. கம்பு

7. சோளப் பயிர் வகை

8. கம்பு வகை

9. கேழ்வரகு

10. தினை

ரீஃபைன் அல்லது பதப்படுத்தப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் எவ்வகையில் சிறந்தது?

ரீஃபைன் அல்லது பதப்படுத்தப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் எவ்வகையில் சிறந்தது?

ரீஃபைன் செய்யப்பட்ட அல்லது சுத்தரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்களில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அவைகளில் தான் அதிகமான நார்ச்சத்தும் உள்ளது. இதனால் நம் செரிமான அமைப்புக்கும் அது நல்லதாக அமைகிறது. முழு தானியங்கள் சுலபமாக செரிமானமாகும். அவைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் அதிகமாக உள்ளது. மேலும் புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல நோய்களையும் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

அன்றாட உணவுகளில் அதிக முழு தானியங்களை சேர்த்துக் கொள்வது எப்படி?

அன்றாட உணவுகளில் அதிக முழு தானியங்களை சேர்த்துக் கொள்வது எப்படி?

ஒன்று அல்லது இரண்டு சப்பாத்திகள் இல்லாமல் எந்த ஒரு இந்திய உணவும் முழுமை பெறாது. அதனால் முழு தானியங்களை உங்கள் சப்பாத்திகளில் இருந்து தொடங்குங்கள். சாதாரண மாவுக்கு பதிலாக முழு கோதுமை, சோளம், கம்பு அல்லது கேழ்வரகு போன்ற அதிகப்படியான பயனை அளிக்கூடிய முழு தானியங்களை பயன்படுத்தி இனி சப்பாத்திகளை தயார் செய்யுங்கள்.

 தானியங்கள் ஆரோக்கியமான காலை உணவுகள்

தானியங்கள் ஆரோக்கியமான காலை உணவுகள்

முழு கோதுமை ரொட்டிகள், ஓட்ஸ், கோதுமை ஃப்ளேக்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் மற்றும் தினை போன்றவற்றை ஆரோக்கியமான காலை உணவு தானியங்களாக பயன்படுத்தலாம். கம்பு தானியத்தில் செய்யப்பட ரொட்டிகளையும் கூட உண்ணலாம். முழு கோதுமை பிட்சா கூட இப்போது கிடைக்கிறது. ஆனால் அவைகளை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை நன்றாக படித்து விட்டு பின் வாங்கவும்.

இட்லி

இட்லி

பழுப்பு அரிசி மற்றும் கேழ்வரகை கொதிக்க வைத்தோ அல்லது அவித்தோ அதிலிருந்து இட்லி ஊட செய்யலாம்.

பாப்கார்ன்

பாப்கார்ன்

முழு கோதுமையில் செய்யப்பட்ட பாப்கார்ன் கூட ருசிமிக்க, ஆரோக்கியமான உணவாக அமையும். இருப்பினும், அதில் உப்பு, சர்க்கரை அல்லது பிற கொழுப்பு பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 கோதுமை ஓட்ஸ்

கோதுமை ஓட்ஸ்

இப்போதெல்லாம் கோதுமையில் கலக்கப்பட்ட ஓட்ஸ் அல்லது பிற முழு தானியங்களை கொண்டு கூட கேக், பேஸ்ட்ரி போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

கோதுமை பாஸ்தா

கோதுமை பாஸ்தா

முடிந்தால் முழு கொழுமை பாஸ்தாவை கூட தேர்ந்தெடுங்கள். இருப்பினும் அவைகள் உங்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றால் முழு கோதுமையுடன் ரீஃபைன் செய்யப்பட்ட பாஸ்தாவை முயற்சி செய்யவும். எந்த ஒரு உடல் எடை குறைப்பு திட்டத்தையும் கையில் எடுக்காமல் ஆரோக்கியமான பாஸ்தா சாப்பிடுவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Importance Of Whole Grains In Our Diet

No healthy diet advice seems to be complete without a mention of whole grains. But do we really have a decent amount of knowledge when it comes to understanding the importance of whole grains in our diet?
Desktop Bottom Promotion