For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா?

By Babu
|

உலகிலேயே ஜப்பானியர்கள் தான் மிகவும் பிட்டாக, தொப்பையின்றி இருப்பவர்கள். மேலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இவர்களே! இவர்கள் எப்போதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். இதற்கு காரணம், அவர்களின் டயட் மற்றும் வாழ்க்கை முறை தான் காரணம்.

உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

அதுமட்டுமின்றி, பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவைத் தான் உண்பார்கள். ஆனால் நம் இந்தியாவில் தற்போது பாஸ்ட் மற்றும் ஜங்க் உணவுகளின் மீது அதிகம் கவனம் செலுத்தி, நம் பாரம்பரிய உணவையே மறந்துவிட்டோம். இதனால் தான் நம் நாட்டில் பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...

சரி, இப்போது ஜப்பானிய மக்களின் பிட்னஸ் மற்றும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதன் ரகசியத்தைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன், சோயா, சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள்

மீன், சோயா, சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள்

ஜப்பானியர்கள் பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுவார்கள். அவர்களின் பாரம்பரிய உணவுகளாவன: க்ரில் மீன், அளவான சாதம், வேக வைத்த காய்கறிகள், ஒரு பௌல் மிசோ சூப் மற்றும் க்ரீன் டீ போன்றவை தான். மேலும் ஜப்பானியர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவது மிகவும் அரிது.

மிதமான தீயில் சமையல்

மிதமான தீயில் சமையல்

ஜப்பானியர்கள் சமைக்கும் போது மிதமான தீயில் தான் உணவை சமைப்பார்கள். இதனால் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு குறையாமல் அப்படியே கிடைக்கும். மேலும் இவர்களும் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களான ஆலிவ் ஆயிலைத் தான் சமையலில் பயன்படுத்துவார்கள்.

அளவான உணவு மற்றும் பரிமாறும் விதம்

அளவான உணவு மற்றும் பரிமாறும் விதம்

ஜப்பானிய ஹோட்டல்களுக்கு சென்றால், அங்கு அவர்கள் சிறிய பௌலில் உணவைக் கொடுப்பதோடு, அந்த அளவான உணவிலேயே வயிறு நிரம்பிவிடும். இதற்கு அவர்கள் உணவை அலங்கரித்து பரிமாறுவது தான். மேலும் ஜப்பானியர்கள் உணவை மெதுவாக சாப்பிடுவார்கள். இதனால் செரிமான மண்டலம் சீராகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு, பிட்டாக இருக்க உதவுகிறது.

காலை உணவு அவசியம்

காலை உணவு அவசியம்

ஜப்பானில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. காலை வேளையில் தான் பல வெரைட்டியான உணவுகள் பரிமாறப்படும். முக்கியமாக மிசோ சூப்பை காலை வேளையில் கண்டிப்பாக சாப்பிடுவார்கள். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரோபயோடிக்ஸ் அதிகம் உள்ளது.

டயட் என்பதே இல்லை

டயட் என்பதே இல்லை

ஜப்பானிய பெண்கள் டயட் என்பதையே மேற்கொள்ளமாட்டார்கள். இவர்கள் அனைத்து வகையான உணவையும் அச்சமின்றி வாங்கி சாப்பிடுவார்கள். அதே சமயம், அவர்கள் எந்த ஒரு இடத்திற்கும் நடந்தே செல்வார்கள். இது தான் அவர்களின் பிட்டான உடலுக்கு காரணமும் கூட.

பிரட் சாப்பிடமாட்டார்கள்.

பிரட் சாப்பிடமாட்டார்கள்.

ஜப்பானிய உணவில் சாதத்தைத் தவிர, பிரட் போன்ற வேறு எதுவும் இருக்காது. பிரட் என்பது சுத்திகரிக்கப்பட்ட மாவின் மூலம் செய்யப்படுவதால், அதனை உட்கொள்ளும் போது பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதில் நார்ச்சத்தும் தரமற்றதாக இருக்கும்.

காய்கறிகள்

காய்கறிகள்

ஜப்பானியர்கள் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், முளைக்கட்டிய பயிர்கள், கேல் போன்றவற்றைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.

கடற்பாசி

கடற்பாசி

ஜப்பானியர்கள் கடற்பாசியை அதிகம் சாப்பிடுவார்கள். கடற்பாசியில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால், பெரும்பாலான ஜப்பானிய உணவுகளில் கடற்பாசி இருக்கும்.

ஆரோக்கியமான நூடுல்ஸ்

ஆரோக்கியமான நூடுல்ஸ்

ஜப்பான் நூடுல்ஸில் கொழுப்பு குறைவாக உள்ளது மற்றும் இது பல்வேறு வெரைட்டிகளில் கிடைக்கிறது. இந்த நூடுல்ஸானது பீன்ஸ் மற்றும் பக்வீட் கொண்டு செய்யப்படுபவை என்பதால் இதுவும் ஜாப்பானியர்களின் பிட்டான உடலுக்கான ரகசியமாகும்.

சோயா பீன்ஸ் மற்றும் க்ரீன் டீ

சோயா பீன்ஸ் மற்றும் க்ரீன் டீ

ஜாப்பானியர்கள் சோயாவை அதிகம் சாப்பிடுவார்கள். அதிலும் ஒரு நாளைக்கு 50 கிராம் சோயாவை பல உணவுகளில் சேர்த்து எடுத்துக் கொள்வார்களாம். அதுமட்டுமின்றி, உணவிற்கு பின் ஒரு கப் க்ரீன் டீ குடிப்பார்களாம். இதனால் இதயம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, நீண்ட நாட்கள் இளமையுடனும் வாழ முடிகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets Revealed: How Japanese Live Longer And Don't Get Fat

Japanese live a healthy and long life and the secret is their diet and lifestyle. Ther eat healthy foods and their eating habits are good.
Story first published: Saturday, July 4, 2015, 12:40 [IST]
Desktop Bottom Promotion