For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்: உடல் எடை குறைப்பிற்கு எது சிறந்தது?

By Super
|

உடற்பயிற்சி என்பது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு சொல்ல தேவையில்லை. நம் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சியை ஒரு அங்கமாக ஏற்படுத்தவில்லை என்றால், நம் உடல் ஆரோக்கியமாக இருப்பது எப்படி? இயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.

சரி, இவையிரண்டும் எதற்கு செய்கிறோம் என உங்களுக்கு தெரியுமா? ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

உடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.

உடல் எடை குறைப்பிற்கு எந்த நடவடிக்கை திறம்பட செயல்படும் என்பதை தீர்மானிக்கும் சில காரணிகளைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை

உடல் எடை

உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.

தீவிரம்

தீவிரம்

உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிப்பதால், அதிக கலோரிகள் எரிக்கப்படும். அதனால் மலை மீது ஓடவோ அல்லது சைக்கிள் ஓட்டவோ உங்களுக்கு நீங்களே சவாலிட்டு கொள்ளுங்கள். மலை மீது ஓடுவதற்கு அதிக பளு வேண்டும். இப்படி செய்வதால் உட்புற தொடைகள், குளுட்டியஸ், பின் தொடையில் இருக்கும் தசை நார், ட்ரைசெப்ஸ் மற்றும் தோள்களின் தசைகளும் பயிற்சியில் ஈடுபடும். ஓடுவதற்கு தசைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதிகளவிலான கலோரிகள் எரிக்கப்படும். மலை மீது சைக்கிள் ஓட்டும் போது, உடலின் கீழ்பகுதிகளுக்கு பயிற்சியளிப்பதோடு மட்டுமல்லாது, வயிறு, ட்ரைசெப்ஸ் மற்றும் தோள்களின் தசைகளும் பயிற்சியளிக்கிறீர்கள்.

கொழுப்பை எரிக்க...

கொழுப்பை எரிக்க...

சைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும். மிக தீவிரமான நடவடிக்கை என்பதால் உங்கள் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்தும். இதனால் கூடுதலாக கொழுப்பு எரியும்.

வேகம் மற்றும் நேரம்

வேகம் மற்றும் நேரம்

நீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.

பரிசீலனைகள்

பரிசீலனைகள்

நீங்கள் முட்டி அல்லது முதுகு வலியால் அவதிப்பட்டு வந்து, பெருவாரியான உடல் எடையை குறைக்க வேண்டுமானால், சைக்கிள் ஓட்டுவது தான் சிறந்தது. அதற்கு காரணம் மூட்டுகளின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாதது. நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் அல்லது புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்கினால், குறைவான தாக்கத்தை உடைய சைக்கிள் உடற்பயிற்சியை செய்யுங்கள். இருப்பினும் உங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Running vs. Cycling — Which is better for weight loss?

Cycling and running are the two most highly recommended aerobic activities for weight loss. Here are some of the factors that will determine which activity is most effective for weight loss.
Desktop Bottom Promotion