For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிட்டாக இருக்க ஜிம் போக நேரமில்லையா? வீட்டு வேலையை செய்யுங்க அதுவே போதும்...!

By Maha
|

ஃபிட்டாக இருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அதற்காக பலரும் தினமும் ஜிம் செல்ல அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இருப்பினும் என்ன தான் முயன்றாலும் சிலரால் முடியாது.

ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...

ஆனால் ஜிம் செல்ல முடியவில்லை என்று யாரும் கவலைக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அன்றாட வீட்டு வேலைகளை செய்து வந்தாலேயே உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதோடு, உடலையும் ஃபிட்டாக பராமரிக்க முடியும். சொல்லப்போனால் உடற்பயிற்சிகளானது வீட்டில் செய்யும் வேலைகளில் இருந்தே வந்தது எனலாம்.

ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா?

எனவே ஃபிட்டாக இருக்க நினைத்தால், வீட்டைப் பராமரிக்க மிஷின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, நீங்களே களத்தில் இறங்குங்கள். இதனால் உடலில் உள்ள கலோரிகள் குறைந்து, உடல் ஃபிட்டாக இருக்கும்.

தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோட்டப் பராமரிப்பு

தோட்டப் பராமரிப்பு

வீட்டில் உள்ள வறாண்டாவில் சிறு தொட்டிகளில் செடிகளை வளர்த்து வருவதோடு, அதற்கு அன்றாடம் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருவதும் ஓர் உடற்பயிற்சியே. இப்படி செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும்.

பாத்திரம் கழுவுவது

பாத்திரம் கழுவுவது

பாத்திரங்களைக் கழுவ ஆள் வைப்பதற்கு பதிலாக, நீங்களே கழுவ ஆரம்பியுங்கள். இதனால் பாத்திரங்களைக் கழுவுவதன் மூலம், கைகளுக்கு சிறந்த உடற்பயிற்சி கிடைக்கும். மேலும் இதன் மூலம் கைகள் வலிமையடையும்.

வீட்டைத் துடைப்பது

வீட்டைத் துடைப்பது

வீட்டைத் துடைப்பதற்கு வாக்யூம் க்ளீனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, மாப் அல்லது துணியைக் கொண்டு நீங்களே குனிந்து துடைக்க ஆரம்பியுங்கள். இப்படி செய்வதன் மூலம் உடற்பயிற்சி செய்த உணர்வு கிடைப்பதோடு, அதன் பலனையும் பெறலாம்.

அம்மிக் கல்லில் அரைப்பது

அம்மிக் கல்லில் அரைப்பது

மசாலாக்கள் அல்லது தேங்காய் போன்றவற்றை அரைப்பதற்கு மிக்ஸியைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, அம்மிக் கல்லைப் பயன்படுத்துங்கள். இதனால் தொடை, முதுகு தண்டுவடத்திற்கு மட்டுமின்றி, கைகளுக்கும் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும்.

Image Courtesy

நாயை வெளியே அழைத்து செல்வது

நாயை வெளியே அழைத்து செல்வது

வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாயை தினமும் 20 நிமிடம் வெளியே வாக்கிங் அழைத்துச் செல்வதன் மூலம், உடலில் இருந்து பல கலோரிகளை எரிக்கலாம்.

தண்ணீர் தூக்குவது

தண்ணீர் தூக்குவது

இப்போதெல்லாம் தண்ணீர் தூக்கும் பழக்கமே இல்லை. ஆனால் அதைத் தவிர்த்து, குடம் அல்லது வாளியில் நீரை நிரப்பி, தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்து செல்வது, இடுப்பு மற்றும் கைகளுக்கான சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும்.

கடைகளுக்கு செல்வது

கடைகளுக்கு செல்வது

அருகில் உள்ள கடைகளுக்கு பைக்கில் செல்வதற்கு பதிலாக, நடந்து செல்லுங்கள். இதனால் நல்ல நடைப்பயிற்சி மேற்கொண்டது போல் இருப்பதோடு, மளிகைப் பொருட்களைத் தூக்கிக் கொண்டு வருவது கைகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும்.

துணி துவைப்பது

துணி துவைப்பது

வாஷிங் மிஷின் மூலம் துணிகளை துவைக்காமல், கைகளால் துணியைத் துவைத்தால், உடல் முழுவதற்கும் ஏற்ற நல்ல உடற்பயிற்சி இருக்கும். குறிப்பாக துணி துவைப்பதன் மூலம் நிறைய கலோரிகளை எரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Household Activities That Burn Calories

There are some simple activities that burn calories. If you hate going to the gym, try them.
Desktop Bottom Promotion