எப்போதும் ஃபிட்டாக இருப்பதற்கு அமீர் கான் பின்பற்றும் டயட் இது தாங்க...!

By:
Subscribe to Boldsky

பாலிவுட்டில் உடலை எப்போதுமே ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் நடிகர்களுள் ஒருவர் தான் அமீர் கான். இவர் தன் கட்டுமஸ்தான உடலைக் கொண்டே நிறைய ரசிகைகளைக் கவர்ந்தவர். மேலும் இவர் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும், தனது 100 சதவீத உழைப்பைப் போட்டு, அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால், இவரது படங்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கும்.

ரித்திக் ரோஷன் தன் தொப்பையைக் குறைத்து எப்படி சிக்ஸ் பேக் வைத்தார் தெரியுமா?

சொல்லப்போனால் இவர் படத்திற்காக, தான் எவ்வாறு மாற வேண்டுமோ அவ்வாறெல்லாம் மாறுவார். அத்தகைய குணம் கொண்ட அமீர்கான் தன் உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் டயட்டை மேற்கொள்வதோடு, உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வார். உங்களுக்கு அவர் மேற்கொள்ளும் டயட் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பி.எம்.ஐ சோதனை

நடிகர் அமீர் கான் தனது உயரத்திற்கு ஏற்ற எடையை எப்போதும் பராமரிப்பவர். இவர் தினமும் தனது உடல் எடையைப் பரிசோதித்து, எடையைப் பராமரிப்பதற்கு ஏற்றவாறான டயட்டை மேற்கொள்வார்.

சரிவிகித உணவு

அமீர் கான் சைவம் மற்றும் அசைவ உணவுகளை சரிவிகித அளவில் தான் எப்போதும் எடுத்துக் கொள்வாராம்.

பலமுறை உணவு

அமீர் தினமும் சிறு அளவில் பலமுறை உணவுகளை உண்பார். இப்படி உண்பதால் உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்படும்.

உடற்பயிற்சிக்கு முன் பழங்கள்

அமீர் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடும் முன், வாழைப்பழம், ஆப்பிள் அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவார். இப்படி சாப்பிடுவதால் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றல் கிடைக்குமாம்.

நீர்மம்

தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதோடு, உடற்பயிற்சி செய்யும் தருணங்களில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பாராம். உடற்பயிற்சி நேரத்தில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால், தசைகளில் ஏற்படும் உள்காயங்கள் தடுக்கப்பட்டு, தசைகள் வலிமையுடனும், இறுக்கமாகவும் இருக்கும்.

இரவில் கார்ப்ஸ் வேண்டாம்

அமீர் கான் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், இரவில் 8 மணிக்கு மேல் கார்போஹைட்ரேட் எடுப்பதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கிறார்.

காலை உணவு

அமீர் கான் காலையில் ஒரு கப் க்ரீன் டீயுடன், முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு பௌல் செரில் மற்றும் பழங்களை சாப்பிடுவாராம்.

பகல் உணவு

பகலில் 11 மணியளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன ஜூஸ் குடிப்பாராம்.

மதிய உணவு

மதிய வேளையில் பருப்பு கடையல், நவதானிய மாவால் செய்யப்பட்ட சப்பாத்தி, சப்ஜி மற்றும் தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்வாராம்.

மாலை ஸ்நாக்ஸ்

மாலையில் ஒரு கப் டீயுடன், ரஸ்க் அல்லது நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவாராம்.

இரவு உணவு

இரவில் வேக வைத்த காய்கறிகள் அல்லது க்ரில் சிக்கன் மற்றும் மீன் சாப்பிடுவாராம். முக்கியமாக இந்த உணவை இரவில் 8 மணிக்கு முன்பே சாப்பிடுவாராம்.

மற்றொரு கட்டுரையில் இவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் என்னவென்று பார்ப்போம்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Aamir Khan Ultimate Diet Plan

Do you know aamir khan ultimate diet plan? Let’s have a look at his diet plan....
Story first published: Friday, October 16, 2015, 13:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter