For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்...?

By Boopathi Lakshmanan
|

மாதவிடாய் சுழற்சி அல்லது பீரியட் வரும் நாட்கள் பொதுவாகவே பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் மற்றும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், கோபம் மற்றும் பயம் போன்ற உணர்வுகளையும் கூட வரச் செய்யும்.

மாதவிடாய் காலங்களில் வலி, மோசமான உடல்நிலை, துர்நாற்றம் போன்ற விஷயங்களையும் பலரும் எதிர்கொள்கிறார்கள். அதுவும் முதல் இரண்டு நாட்களில் யாருமே தங்களுடைய தினசரி வேலைகளை செய்ய முடியாதவாறு வலியை அனுபவிப்பார்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமானவை: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

நெடுங்காலத்திற்கு உடல்நிலையை ஆரோக்கியமாக பராமரிக்க விரும்பினால் நீங்கள் சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆம், மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் உள்ளன. அவை உங்களுடைய திறனை அதிகப்படுத்துகின்றன, உடல் உறுப்புகளை சரியாக இயங்கச் செய்கின்றன, வலியை குறைக்க உதவுகின்றன.

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகள் உடலுக்குத் தேவையான சக்திகளை உற்பத்தி செய்து தருகின்றன. இதோ மாதவிடாய் காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை உங்களுக்காக வரிசைப்படுத்தியுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள்

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள்

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு உணவுகளை மாதவிடாய் உணவுகளை சாப்பிடவும். இதில் கேரட், பாதாம் பழம், ஆரஞ்சு பழம், ப்ளம்ஸ் போன்றவற்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மாதவிடாய் பருவங்களில் உடல் அதிக சர்க்கரை கேட்பதை, இந்த உணவுகள் குறைக்கும்.

டார்க் சாக்லெட்டும் மனநிலையும்

டார்க் சாக்லெட்டும் மனநிலையும்

உணவில் டார்க் சாக்லெட்டை நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய பருவம் இதுதான். டார்க் சாக்லெட்டில் அதிகளவு உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மனநிலையை நல்ல நிலையில் வைத்திருக்கின்றன. எனவே, மாதவிடாய் காலங்களில் டார்க் சாக்லெட் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வைட்டமின் கொண்ட உணவுகள்

வைட்டமின் கொண்ட உணவுகள்

மாதவிடாய் காலங்களில் வைட்டமின்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டியது அவசியமாகும். வைடட்டமின் ஈ சாப்பிடுவதால் உங்களுக்கு PMS பிரச்சனை குறைகிறது. வேண்ணைய் பழம் மற்றும் முட்டையின் கருவை சாப்பிட்டு வைட்டமினை ஈ பெருமளவு பெறலாம். மேலும் வைட்டமின் பி6 வயிறு உப்புசமடைவதை குறைக்கிறது. வைட்டமின் சி உங்களுடைய இனப்பெருக்க உறுப்புகளின் நலனை மேம்படுத்துகிறது. திராட்சை மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின் பி6 கிடைக்கும்.

காப்ஃபைன் வேண்டாம்

காப்ஃபைன் வேண்டாம்

உங்களுடைய உணவில் காப்ஃபைனை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டிய பருவமாக இது உள்ளது. நீங்கள் காப்ஃபைன் குடிக்கும் போது, அது வலியை ஏற்படுத்தும் அமிலங்களை வயிற்றில் உற்பத்தி செய்கிறது. உங்களால் காபி குடிக்காமல் இருக்க முடியாத பட்சத்தில் டீ குடியுங்கள். காபி குடிப்பதற்கு மாறாக டீ குடித்தால் காபிக்கான ஈடுபாடு குறையும்.

அவசியமான கொழுப்பு அமிலங்கள்

அவசியமான கொழுப்பு அமிலங்கள்

முதன்மையான வயிற்று வலியை அனுபவிக்கும் காலமாக மாதவிடாய் பருவம் உள்ளது. இந்த வலிகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் அவசியமான கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மாதவிடாய் பருவத்தில் உங்களுடைய ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களை கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நிலைப்படுத்த முடியும். இந்த கொழுப்பு அமிலங்களை நீங்கள் பெற விரும்பினால் ஆளி விதை, பரங்கிக்காய் மற்றும் சூரியகாந்தி விதைகளை சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள லைனோலெனிக் அமிலத் தன்மைகள் உங்களுடைய கருப்பை தசைகளை தளரச் செய்து, வலியிலிருந்து நிவாரணம் தருகின்றன.

இரும்புச்சத்துள்ள உணவுகள்

இரும்புச்சத்துள்ள உணவுகள்

மாதவிடாயின் போது உங்களுக்கு பெருமளவு இரத்தப்போக்கு ஏற்படும். எனவே உங்களுடைய உடலுக்கு நீங்கள் புத்துயிர் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்காக இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டு இரத்த சோகை வருவதை தடுக்கவும் மற்றும் இழந்த ஹீமோகுளோபின்களை மீண்டும் பெறவும் முடியும். இதன் மூலம் நீங்கள் பலவீனமடைவதையும் மற்றும் மன அழுத்தமடைவதையும் பெருமளவு குறைத்திட முடியும். இந்த உணவுகளை மன அழுத்தத்தை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இறைச்சி, கோழி, காய்ந்த பீன்ஸ்கள், சர்க்கரை பாகு மற்றும் பசுந்தழைக் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிட்டு போதுமான இரும்புச் சத்தைப் பெற முடியும்.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள்

பழங்கள், காய்கறிகள், தானியங்கள்

முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை உங்களுடைய உணவில் நிறைந்திருக்க வேண்டும். இந்த உணவு சரிவிகிதமாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய உணவுகளில் திரவ உணவுகள் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மாதவிடாய் காலத்தில் நிறைய தண்ணீர் குடியுங்கள். மாதவிடாய் காலத்தில் நல்ல, சத்தான உணவை சாப்பிட்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What to Eat During Your Periods: Diet Tips

If you follow a good menstruation diet, it will help you increase your stamina, allow smooth functioning of your organs and lower the pain that you generally experience. Here's a look at the menstruation diet that will help you gain energy during your periods.
Desktop Bottom Promotion