For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி பசி ஏற்படுவதைத் கட்டுப்படுத்தும் யோகாக்கள்!!!

By Ashok CR
|

உணவுகளின் மீது தீவிர நாட்டம் ஏற்படும் போது மனதுக்கு பிடித்த பல வகையான உணவுகளை அளவு பார்க்காமல் உண்ணுவோம். ஆனால் நாம் அளவோடு உண்ணவில்லை என்றால் நம் அன்றாட உணவு பழக்கத்தை பாதித்து பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். துரதிர்ஷ்டவசமாக, சுயக் கட்டுப்பாடும், ஒழுக்கமும் சுலபம் இல்லை. அதுவும் உணவு விஷயங்களில் மிகவும் அவைகளை கடைப்பிடிப்பது கடினம். ஆனால் உணவுகளின் மீது இப்படி பைத்தியமாக இருப்பதை தவிர்க்க ஒரு வழி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது; ஆம், அது தான் யோகா!

தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!!!

யோகாவால், பசிக்கு அடங்கிவிடும். இந்த தடையால் கிடைக்கும் நன்மைகளை பற்றி யோகாவை சீரான முறையில் செய்பவர்களுக்கு நன்றாக தெரியும். யோகாவை சீரான முறையில் செய்பவர்களுக்கு கட்டுக்கோப்பான உடலமைப்பு, அமைதியான மனது, உடலின் மீது அளவுக்கு அதிகமான திருப்தி மட்டுமல்லாது ஒரு வித சுய ஒழுக்கமும் ஏற்படும். அதனால் பசியை கட்டுப்படுத்த யோகா ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.

How to Curb Food Cravings with Yoga?

பசியை அடக்க யோகாவின் எளிய ஆசனங்கள்:

பல விதமான மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் தியானங்களின் கலவையே யோகா. உங்கள் உடலில் உள்ள தேவதையும் சாத்தானும் சீஸ் கேக்கை நீங்கள் உண்ணலாமா வேண்டாமா என்று பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறதா? இருவரின் பேச்சையும் கேட்காதீர்கள். மாறாக அவர்களை விரட்டியடித்து, கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். பின்வரும் எளிய யோகாசனங்களை செய்திடுங்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை: யோகாசனங்கள் மூலம் குணப்படுத்தக்கூடிய 10 நோய்கள்!!!

நின்று கொண்டு முன் பக்கமாக குனிதல்:

• சுவற்றில் இருந்து ஒரு அடி தள்ளி, எழுந்து நின்று (நீங்கள் ஏற்கனவே அமர்ந்திருந்தால்) காலை விரித்துக் கொள்ளுங்கள். இரண்டு கால்களுக்குள் உள்ள இடைவெளி, உங்கள் இடை அகலத்துக்கு இருக்க வேண்டும்.

• உங்கள் பின்புறத்தை அப்படியே சுவற்றின் மீது சாய்த்துக் கொள்ளுங்கள். பின் மெதுவாக முட்டியை வளையுங்கள். உங்கள் மேல் உடலை முன்பக்கமாக மடக்குங்கள். அதனால் உங்கள் வயிறும் நெஞ்சும் உங்கள் தொடை மீது வளைய வேண்டும்.

• சிறிது முறை மூச்சு விடுங்கள்; உதாரணத்திற்கு, மூச்சை வெளியே விடும் போது 6 முறை மூச்சுப்பயிற்சியில் ஈடுபடலாம். பின் மெதுவாக நிமிர்ந்து, உங்கள் பின்புறத்தை மெதுவாக சுவற்றின் மீது சாய்க்கவும்.

• கண்களை மூடிக்கொண்டு, சிறது மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டு உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடலாற்றலை பொறுத்து இதனை 3-4 முறைகள் செய்திடுங்கள்.

குழந்தைகளின் ஆசனம் (பாலாசனா):

• தரையில் முட்டி போட்டு இடுப்பை குதிகாலின் மீது வையுங்கள். முட்டி இடுப்பு அகலத்தை விரிவு படுத்துங்கள்.

• அடுத்து, ஆழமாக மூச்சிழுத்து பின் மூச்சை வெளியேற்றுங்கள். பின் மெதுவாக உங்கள் நெஞ்சை முன் பக்கமாக வளையுங்கள். முழுவதுமாக வளைந்த பின்பு வயிற்றையும் நெஞ்சையும் தொடைகளின் மேல் படுமாறு செய்யவும். உங்கள் உடல் ஒத்துழைத்தால், நெற்றியை தரையின் மீத்து படுமாறு வளைந்திடுங்கள்.

• மேற்கூறிய நிலையை அடைந்த பிறகு, உங்கள் கைகளை தரையில் மீது வைத்திடுங்கள். உங்கள் உள்ளங்கை தரையை பார்த்தவாறு கைகளை முன்பக்கமாக நீட்டிக் கொள்ளலாம் அல்லது உள்ளங்கை கூரையை பார்த்தவாறு உங்களது கைகளை பின்பக்கமாக கட்டிக்கொள்ளலாம்.

உங்கள் உடல் எந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதோ அத்தனை மணி நேரத்திற்கு மேற்கூறிய ஆசனங்களை செய்திடுங்கள். அதிலும் இந்த ஆசனங்களை 3-4 முறை செய்திடுங்கள்.

அடுத்த முறை உணவுகளின் மீது தீவிரமான நாட்டம் ஏற்படும் போது, உங்கள் மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உடலில் உள்ள ஆற்றலை கொஞ்சம் எரித்திட வேண்டும். மேற்கூறிய இரண்டு ஆசனங்களையும் சீரான முறையில் செய்து சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உணவுகளின் மீது உங்களுக்கு இருக்கும் தீவிரமான ஆர்வம் குறைந்து அளவாக உட்கொண்டு உடலை கட்டமைப்புடன் வைத்திருப்பீர்கள்.

English summary

How to Curb Food Cravings with Yoga?

One of the most effective methods to curb food craving is yoga. Here are some of the easy yoga poses you can do to curb food cravings. Take a look.
Story first published: Sunday, January 12, 2014, 13:12 [IST]
Desktop Bottom Promotion