For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க ஆசையா? இதோ சில டிப்ஸ்...

By Maha
|

உடல் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்க வேண்டுமானால், அதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை காலை வேளையில் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர், காலை வேளையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டால், அதற்கான பலன் விரைவில் கிடைக்கும்.

சுவாரஸ்யமான வேறு: உடல் எடையை குறைக்க உதவும் மாதுளைப்பழம்!

தற்போது உடல் எடையை குறைக்க பல வழிகள் வந்துவிட்டன. இருப்பினும் அவற்றில் சிறந்த வழி என்னவென்று தெரியாமல் பலர் குழப்பத்தில் இருப்பார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், காலை வேளையில் பின்பற்ற வேண்டிய சில செயல்களை பட்டியலிட்டுள்ளது. அவற்றை தவறாமல் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையானது ஆரோக்கியமான வழியில் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ்

தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ்

உடல் எடை அதிகம் இருப்போர், காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிற்றில் தங்கியுள்ள நச்சுக்களுடன், கொழுப்புக்களும் கரைந்து, உடல் எடை குறைவதுடன், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். மேலும் செரிமான பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

1/2 லிட்டர் தண்ணீர்

1/2 லிட்டர் தண்ணீர்

தினமும் காலையில் பல் துலக்கியதும், 1/2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி தண்ணீர் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களானது வெளியேறிவிடும். இப்படி தொடர்ந்து செய்து வர, உடல் எடையில் மாற்றம் தெரியும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

காலையில் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகளில் ஒன்று தான் உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றதும் ஜிம் அல்லது கார்டியோ போன்றவற்றை தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நடனம், ஏரோபிக்ஸ் அல்லது யோகா போன்றவற்றில் எவையேனும் ஒன்றை செய்து வந்தாலும், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, எடை குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, காலையில் இவற்றை மேற்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

காலை உணவை உண்ணவும்

காலை உணவை உண்ணவும்

ஒரு நாளுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. உடல் எடையை குறைக்க ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடாமல் இருக்கலாம். ஆனால் காலையில் அவசியம் சாப்பிட வேண்டும். அதிலும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை காலை வேளையில் நன்கு வயிறு நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.

தியானம்

தியானம்

காலையில் எழுந்ததும், தியானம் மற்றும் மூச்சு பயிற்சிகளை செய்து வந்தால், மனம் அமைதியடைவதுடன், உடலும் ரிலாக்ஸாக இருக்கும். இப்படி மனம் ரிலாக்ஸாக இருந்தால், உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். எனவே தினமும் காலையில் கொஞ்ச நேரமாவது தியானம் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Habits For Weight Loss

Do you want to lose weight in a hurry? Then these are some of the best healthy morning habits to follow to lose those pounds.
Desktop Bottom Promotion