For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் உள்ளவர்கள் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவைகள்!!!

By Boopathi Lakshmanan
|

புற்றுநோய் உள்ளவர்கள் குணமடைவதற்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவும் மிகவும் அவசியமானதாகும். அவர்களின் சிகிச்சை காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணும் போது தான் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வாழ முடியும்.

நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதே ஆகும். இவைகளில் உள்ள திரவங்கள் சீக்கிரம் குணமடைய உதவும். நாம் இவர்களுக்கு கொடுக்கக்கூடிய உணவுகள் பற்றி பின்வரும் பகுதியில் பார்ப்போம்.

ஆண்களை அதிகம் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் 9 வழிகள்!!!

புற்றுநோய்க்கான சிகிச்சையின் பின் விளைவுகளான வாந்தி, முடி உதிர்வு, நாவறட்சி, கீழ் வயிற்று வலி, எடை குறைதல் ஆகிய பல சிக்கல்களின் மத்தியில் நல்ல ஆரோக்கியமான உடலின் சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளது.

அவசியம் படிக்க வேண்டியவை: அடேங்கப்பா... புற்றுநோய்ல இத்தனை வகையா...?

இத்தகைய பின் விளைவுகளை சந்திக்கும் வகையிலான சக்தியையும், விரைவான ஆற்றலையும் பெறுவதற்கு, சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இங்கு புற்றுநோயாளிகள் தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில இயற்கை உணவுகளைப் பட்டியலிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

முட்டையில் உள்ள வைட்டமின் பி, டி, ஈ மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் புற்றுநோய் மருத்துவத்தின் பின் விளைவுகளை குறைக்கக் கூடியதாக உள்ளது. இதனால் வாந்தி, மயக்கம், முடி உதிர்தல், வயிற்று வலி ஆகிய விளைவுகளை குறைக்க முடியும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி ஒரு மூலிகை பொருள். இதன் நன்மைகளோ ஏராளம். ஹீமோதெரபி செய்வதற்கு முன் இஞ்சி சாப்பிட்டால், குமட்டல் உணர்வு குறைவாக இருக்கும். இதனால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை.

அகாய் பெர்ரி

அகாய் பெர்ரி

அகாய் பெர்ரி (Acai Berry) என்பது ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த ஊட்டச்சத்தாகும். இது புற்றுநோய் மட்டுமல்லாமல், இதர நோய்களையும் எதிர்க்கும் சிறந்த உணவாக உள்ளது. ஒரு சிறிய பழத்தில் 11 ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளை விட அதிகமான சத்துக்கள் உள்ளன.

பெப்பர்மின்ட்

பெப்பர்மின்ட்

புற்றுநோயின் பின் விளைவுகளை குறைக்கும் வகையில் பெப்பர்மின்ட் மூலிகை பயன்படுகின்றது. இது நாவறட்சி, குமட்டல், அதிர்ச்சி ஆகிய விளைவுகளை குறைக்கிறது. உடலின் நீர்ம தன்மை குறையாமல் இருக்கவும் உதவுகிறது.

சோயா

சோயா

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரதச்சத்து நிறைந்த சோயா பொருட்கள் மிகுந்த நற்குணங்கள் உடையவையாகும். மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் இதை உண்டால், மார்பகத்தில் ஏற்பட்டுள்ள கட்டிகளை குறைக்க முடியும். புற்றுநோயை உண்டாக்கும் திசுக்களை கொல்லும் சக்தி இதற்கு உள்ளது. சோயாவில் உள்ள கெயின்ஸ்டீன் இந்த வேலையை சரிவர செய்கிறது. இதை உட்கொள்வதால், புற்றுநோயை உண்டாக்கும் திசுக்களை வளர விடாமல் செய்ய முடியும். ஆனால், இந்த உணவு அனைவருக்கும் உகந்தது அல்ல.

பீன்ஸ் மற்றும் பயறு வகைகள்

பீன்ஸ் மற்றும் பயறு வகைகள்

பீன்ஸ், பயிறு, அவரை மற்றும் பட்டாணி வகைகளில் அதிக அளவு வைட்டமின் பி உள்ளது. இவை பழுதடைந்த திசுக்களை குணமாக்க உதவுகின்றது. இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் திறன் கொண்ட உணவுகளாகும். நமது இரத்தச் சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்து உடலை சீக்கிரம் குணமடைய செய்கின்றது.

மோர்

மோர்

மோர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இவற்றில் நூற்றுக்கும் அதிகமாக உள்ள என்ஸைம்கள் உடலில் உள்ள நோய் தொற்றுகளை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன. மோரில் உள்ள எதிர்ப்பு சக்தி சளி மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. இவற்றில் புற்றுநோயை தடுக்கும் சக்தி உள்ளது.

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள்

புதிய பச்சை இலை காய்கறிகளில். ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இந்த உணவு புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகிறது. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள இவை எலும்பு மற்றும் தசைகளில் உள்ள பிரச்சனைகளை குணமாக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Natural Foods To Include In A Cancer Patients Diet

Diet for cancer patients should be enriching and beneficial for health. Cancer treatment is harsh and causes a lot of side effects.
Desktop Bottom Promotion