For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்வளவு தான் டயட்டில் இருந்தாலும் பலன் கிடைக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

உணவை கட்டுப்படுத்தி எடையை குறைக்க நினைக்கும் பலர் உண்டு. ஆனால் நிறைய சமயங்களில் இந்த முயற்சி தோல்வியில் முடிகின்றது. இந்த குறைய தவிர்க்க சில எளிய முறைகளை பின்பற்றினால் போதும். பொதுவாக கார்போஹைட்ரேட்டுகளை குறைத்து தொடர்ந்து சாப்பிட்டால் நிச்சயம் எடை குறையும்.

ஆனால் அதை செய்வதற்கு நமக்கு நேரம் மற்றும் ஊக்கம் இருப்பதில்லை. வாழ்க்கை சூழல், சுற்றுப்புறம் ஆகியவை உங்கள் உணவு முறையை பாதிக்கும் வகையில் இருந்தால், கட்டுப்பாட்டில் இருக்கும் உணவு முறை கட்டுப்பாட்டை இழந்து விடும். இங்கு நாம் செய்யும் முயற்சி ஏன் தோல்வியில் முடிகின்றது என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரமின்மை மற்றும் சோம்பல்

நேரமின்மை மற்றும் சோம்பல்

குறைந்த காலம் உடல் எடை குறைப்பு முறைகளை பின்பற்றும் நீங்கள் தொடர்ந்து அதை பின்பற்றுவதில் சோம்பல் மற்றும் இதர வேலைகளில் கவனம் செலுத்தி அதை விட்டு விடுகிறீர்கள். எடை குறைக்கும் திட்டம், எதுவாக இருந்தாலும் நாம் அதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அப்போது தான் சிறந்த பலனை தரும். நாம் அதை உடனடியாக பெற வேண்டும் என்று எண்ணுவது தவறான கருத்தாகும்.

பசியில் அதிக அளவு உண்ணுவது

பசியில் அதிக அளவு உண்ணுவது

பசித்து உண்ண வேண்டும். மெதுவாக உண்ண வேண்டும். உடலின் தேவையை அறிந்து அதற்கு ஏற்ற உணவை கொடுக்க வேண்டும். இதனால் நல்ல எடையை பராமரிக்க முடியும்.

உறுதி மற்றும் வைராக்கியத்துடன் உணவு முறையை கடைப்பிடித்தல்

உறுதி மற்றும் வைராக்கியத்துடன் உணவு முறையை கடைப்பிடித்தல்

கட்டுப்பாடான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் கடினமான காரியமாகும். ஒரு நாள் அல்லது ஒரு வாரம் இதை செய்ய முடியும். இதை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவது முற்றிலும் நமது மன உறுதிய பொறுத்ததே ஆகும். நாம் சிறிது நாட்கள் இதை கடைப்பிடித்து விட்டு நமது எடை குறைய வேண்டும் என்பது நடைமுறையில் நிகழாத ஒன்று. நாம் இத்தகைய கடினமான முறையை பின்பற்றும் போது தான் எடையை குறைக்க முடியும்.

உள்ளதையும் இழந்து விடக்கூடாது

உள்ளதையும் இழந்து விடக்கூடாது

கட்டுப்பாடான உணவு முறைகளை பின்பற்றுவது என்பது சில சமயங்களில் விபரீதமாகிறது. உதாரணமாக நீங்கள் இரு வாரங்கள் கடினமான உணவு கட்டுப்பாடை மேற்கொண்டு எடையை பெருமளவில் குறைத்த பின்பு, மீண்டும் நாம் உண்ணாத உணவுகளை உண்ண துவங்கும் போது, ஆசையின் காரணமாக தேவையான அளவை விட அதிகம் உட்கொள்ள முற்படுவீர்கள். அப்போது முன்பு இருந்ததை விட அதிக அளவு எடை கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இத்தகைய ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், தொடர்ந்து கட்டுப்பாடுடன் சாப்பிட்டால் இதை தொடர்ந்து மேம்படுத்த முடியும்.

சந்தோஷம் மற்றும் கோபத்தில் அதிகமாக சாப்பிடுதல்

சந்தோஷம் மற்றும் கோபத்தில் அதிகமாக சாப்பிடுதல்

உணர்வுகள் அனைவரையும் ஆட்கொள்ளும் விஷயமாகும். அனைவருக்கும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உணர்வு ஏற்படும். இந்த உணர்வின் காரணமாக அதிக அளவு உண்ணும் நபர்கள் உள்ளனர். சிலர் கோபமாக இருக்கும் போது நிறைய உண்ணுவர். சிலர் மகிழ்ந்து நண்பர்களுடன் இருக்கும் போது நிறைய சாப்பிடுவார்கள். இத்தகைய உணர்வுகள் வரும் போது நல்ல சத்தான மற்றும் சுவையான உணவை சிறிது உண்டு யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது தான் சிறந்தது. விரத்தி மற்றும் கோபமாக இருக்கும் போது உங்கள் கவணத்தை திருப்ப வெளியே செல்லலாம் அல்லது ஏதேனும் சுவாரஸ்சியமாக செய்யலாம். இப்படி செய்வதே சிறந்த வழியாகும்.

ருசியாக சாப்பிடுங்கள்! ஆனால் கவனமாக!

ருசியாக சாப்பிடுங்கள்! ஆனால் கவனமாக!

உணவை ருசித்து உண்ணும் போது நாம் அதிக அளவு சாப்பிட முற்படுகின்றோம். நாம் சுய நினைவுடன் குறைவாக சாப்பிட நினைத்து தான் உண்ண ஆரம்பிக்கின்றோம். ஆனால் சுவையின் காரணமாக நம்மை அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுகின்றோம். இந்த காரியங்களில் கவணமாக இருந்து குறைவாக உண்ண வேண்டும்.

உணவு உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள்

உணவு உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள்

உங்கள் உணவை கவனமாக மற்றும் மகிழ்ந்து உண்ணுங்கள். இதை செய்யும் போது எப்போதும் உணவின் தாக்கம் உங்களை மிஞ்சாத வகையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Reasons Dieting Doesn't Work For Most People

There are many reasons dieting doesn’t work for most people. Some of
 those reasons rest in the basic concepts behind diets. More power to
 you if you can seriously reduce your carb intake on a permanent basis,
 but most of us don’t have the time or the energy. Other reasons
 dieting doesn’t work for most people rest in basic human behavior.
Story first published: Wednesday, April 2, 2014, 17:59 [IST]
Desktop Bottom Promotion