For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மற்றவைகளை விட மிகவும் ஆரோக்கியமான 6 காலை உணவுகள்!!!

By Ashok CR
|

காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அது உங்கள் கலோரியை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதற்கு உண்ணும் உணவு தானியத்தை வாங்குவதற்கு முன்பாக அதன் ஊட்டச்சத்தை பார்க்க பரிந்துரைக்கப்பட்டாலும், அனைத்து உணவு தானியங்களையும் ஆடை நீக்கிய பாலில் கலந்து உட்கொண்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

மேலும் கூடுதல் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டும். இருப்பினும் உங்களுக்கு உங்கள் உணவு தானியங்கள் இனிப்புடன் இருக்க வேண்டுமானால், வெண்ணிற சர்க்கரை பழங்களான வாழைப்பழம், கிஸ்மிஸ் அல்லது ஏதாவது சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். உலர்ந்த பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை உணவை வயிறு நிறைய சாப்பிட்டால், மதிய வேளையில், பசியில் காய்ந்து போகாமல் இருக்கலாம். உடலை கட்டமைப்புடன் வைக்க தீவிர உடற்பயிற்சியில் இருப்பவர்களும் கூட இந்த பழக்கத்தால் அதிக பயனை அடையலாம். அவர்களின் உடல் எடையை குறைக்கச் செய்யவும் இது மிகவும் உதவியாக இருக்கும். இங்கு மிகவும் ஆரோக்கியமான சில காலை உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கஞ்சி

கஞ்சி

கஞ்சி என்பது மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும். வளமையான கனிமங்கள் அடங்கியுள்ள இதில், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். தித்திப்பாக இருப்பதற்கு சிறிது வெல்லத்தை வேண்டுமானால் அதில் கலந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதன் மேல், நற்பதமான பழங்கள் அல்லது கிஸ்மிஸ் மற்றும் பாதாம்களை தூவி விடுங்கள்.

கார்ன் ஃப்ளேக்ஸ்

கார்ன் ஃப்ளேக்ஸ்

அளவுக்கு அதிகமான கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸை கொண்டுள்ள கார்ன் ஃப்ளேக்ஸ், பள்ளிக் குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்குமே சிறப்பான பயனை அளிக்கும். முக்கியமாக மழைக்காலத்தில் இது சிறந்த காலை உணவாக விளங்கும். அதற்கு காரணம், அவற்றில் அதிகளவில் ஈரப்பதம் இருப்பதால், உங்கள் உடல் அதிக அளவிலான நீரை கொண்டிருக்கும்.

கோதுமை ஃப்ளேக்ஸ்

கோதுமை ஃப்ளேக்ஸ்

இது கோதுமை கஞ்சியின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே. எப்போதும் எடுத்துக் கொள்ளும் உணவு தானியங்களுக்கு பதிலாக இதையும் முயற்சி செய்து பார்க்கலாம். இருப்பினும் கூடுதல் கால்சியத்துடன் செறிவூட்டப்படாமல் இருந்தால், அதனை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதில் ஒரு புண்ணியமும் இல்லை,

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்சி

அதிக கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு கிண்ணம் அளவிலான ஓட்ஸ் கஞ்சியை காலையில் உட்கொள்வது அவர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதில் கூடுதல் சர்க்கரையை சேர்க்கக் கூடாது. ஓட்ஸ் கஞ்சியில் உள்ள அதிக நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்கும். அதனால் மன அழுத்தம் ஏற்படாமலும் தடுக்கும்.

ம்யூஸ்லி (Muesli)

ம்யூஸ்லி (Muesli)

ம்யூஸ்லியில் கிஸ்மிஸ், பாதாம் மற்றும் நான்கு வகை தானியங்கள் கலந்திருப்பதால் அது ஒரு சிறந்த காலை உணவாக திகழ்கிறது. மற்றவைகளை காட்டிலும் இதில் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருப்பதால், வளரும் பிள்ளைகளையும், விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களையும் அதிக ஆற்றலுடன் வைத்திருக்கும். அதனை பால் அல்லது தயிருடன் கலந்து உண்ணலாம். அதனை எண்ணம் போல அலங்கரித்து, மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகவும் கொடுக்கலாம்.

அவல்

அவல்

அவல் என்பது இந்தியாவில் பயன்படுத்தும் புகழ்பெற்ற உணவு வகையாகும். இந்த அவல் மிதமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகவும் அமையும். ஆனால் அவல் என்பது லேசாக தான் வதக்கப்பட்டிருக்க வேண்டும்.

எப்போதும் உண்ணுகிற கார்ன் ஃப்ளேக்ஸ் மற்றும் ஓட்ஸ் கஞ்சிக்கு பதில், சாக்லெட், தேன் மற்றும் பழங்கள் நறுஞ்சுவையூட்டப்பட்ட தானியங்களை தேர்ந்தெடுத்தும் உண்ணலாம். இது முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். முயற்சி செய்து பாருங்களேன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Breakfast Cereals Healthier Than Others

Doctors, for sometime now, have debated on the permissible level of sugar in breakfast cereals, especially of the coloured and sugar-frosted varieties.
Story first published: Wednesday, April 2, 2014, 8:13 [IST]
Desktop Bottom Promotion