For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல அழகான உடலமைப்பை பெற சில சிம்பிளான ட்ரிக்ஸ்...

By Boopathi Lakshmanan
|

ஒல்லியாக இருப்பது என்பது ஒரே நாளில் உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுவது என்னும் விஷயம் அல்ல. உண்மையில், சிற்சில, வெளிப்படையான செயல்களை ஒவ்வொன்றாக செய்து வருவதன் மூலம் எடையைக் குறைத்து பெருத்த வேறுபாட்டை உருவாக்க முடியும்.

இங்கு தரப்பட்டிருக்கும் சிறுசிறு யோசனைகளைப் பயன்படுத்தி வெற்றியை நெடுநாட்களுக்கு தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

இதுப்போன்று வேறு: இந்தியர்கள் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான இரகசியங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுறுசுறுப்புடன் இருங்கள்...

சுறுசுறுப்புடன் இருங்கள்...

ஜிம்முக்கோ அல்லது தனிப்பட்ட பயிற்சியாளர்களுக்காகவோ நீங்கள் செலவு செய்ய வேண்டாம். ஒரே முறையில் வேலைகளை செய்து முடிக்கும் வகையில், வேகமாக, அதாவது சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். தினமும் ஒரு படி மேலான சுறுசுறுப்பாக இருந்தால், நாளுக்கு நாள் அதிகரித்து, அது வாரங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

நடந்தால் நடந்து விடும்!

நடந்தால் நடந்து விடும்!

குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு சென்று விடுதல் அல்லது பொருட்களை வாங்க கடைக்கு செல்லுதல் என ஏதாவது ஒரு வித்தையை கடைப்பிடிக்கும் போது நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். இவ்வாறு நடந்து சென்று பயிற்சி செய்யும் போது, உங்களுடைய தினசரி வாழ்க்கை முறை எளிதாவதுடன், உடல் கட்டுக்கோப்பாக இருக்கவும் முடிகிறது.

புதிய பாதை

புதிய பாதை

நெடுநாட்களுக்கு எடையை குறைத்து பராமரித்து வருவதற்கு, மாறுபட்ட உணவு வகைகளை சாப்பிடுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான புதிய உணவுப் பழக்கங்களை மேற்கொண்டு, வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். இந்த பழக்கங்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது, புதிதாக வந்தவை என்றோ அல்லது நாம் அவற்றை பின்பற்றி வருகிறோம் என்றோ கூட நினைப்பதில்லை. இது தான் புதிய பாதை!

சிறிய குறிக்கோள்கள் பெரிய பலன்கள்

சிறிய குறிக்கோள்கள் பெரிய பலன்கள்

எடையைக் குறைப்பது என்பது வாழ்க்கை முறையை மாற்றும் செயல், உடனடி முடிவைக் கொடுக்கும் ஓட்டப் பந்தயம் அல்ல. எனவே, இறுதி முடிவை எண்ணிக் கொண்டு மனதை அலைபாய விட வேண்டாம். எடை குறையுமா அல்லது கூடுமா, இப்பொழுது எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, நீங்கள் செய்யக் கூடிய விஷயங்களை செய்யத் தொடங்கவும். நீங்கள் அதிகமான எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அதனை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து விட்டு, முயற்சியை தொடர்ந்து வாருங்கள். அதாவது, ஒரு வாரத்தில் எவ்வளவு எடையை நீங்கள் குறைக்க வேண்டும் அல்லது ஒரு கிலோ எடையை குறைக்க எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுவதாக இருக்கலாம். விரைவில் நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, எவ்வளவு தூரம், குறிக்கோளை அடைந்து விட்டீர்கள் என்று காண முடியும்.

திட்டமிட்ட உணவு

திட்டமிட்ட உணவு

நீங்கள் சாப்பிடுவதற்கான உணவுகள் எதுவும் குளிர்சாதனப் பெட்டியில் இல்லாத போதும், உணவு வைக்கும் அலமாரிகள் காலியாக இருக்கும் போதும் மற்றும் பசியால் துடித்துக் கொண்டிருக்கும் போதும் வேகமாக சாப்பிடக் கூடிய உணவுகளைத் தேடியே நீங்கள் செல்வது இயற்கையான விஷயம். எனவே, உங்களுடைய சாப்பாட்டைப் பற்றி முன்னதாகவே திட்டமிட்டு விடுதல் மற்றும் முன்கூட்டியே சமையல் செய்து விடுதல் போன்றவற்றை பின்பற்றினால் உணவு அல்லது பணம் அல்லது இரண்டையும் சேமிக்கலாம். சூப்பர் மார்க்கட்களுக்கு செல்லும் முன்னதாக எதை வாங்க வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொள்வது சிறந்த ஐடியாவாக இருக்கும். எனவே, கண்களைக் கவரும் விளம்பரங்கள் மற்றும் சலுகைகளால் பாக்கெட்டைத் துளை போட்டு, வயிற்றை வளர்ப்பது தடை படும்.

தேவை இங்கே கூட்டணி

தேவை இங்கே கூட்டணி

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தனியாக ஈடுபட்டிருப்பவர்களை விட, தங்களைப் போலவே எடையைக் குறைக்க முயற்சி செய்யும் நபர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்பவர்கள் அதிக வெற்றி அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

தனியாக சாப்பிடுவதிலிருந்து குடும்ப உணவுக்கு மாறுதல்

தனியாக சாப்பிடுவதிலிருந்து குடும்ப உணவுக்கு மாறுதல்

நாம் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வரும் வேளைகளில், நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிடுவதில் இருந்து வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அனைவரும் தங்களுக்குப் பிடித்த உணவுகளை சாப்பிட்டு வரும் போது, நீங்கள் மட்டும் ஏன் சாலட்டை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அல்லது நிர்பந்தம் வரலாம். ஆனால், வீட்டில் சமைக்கும் போது சமையில் சிற்சில மாற்றங்களை செய்தால், நீங்களும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ முடியும். குழம்பிற்கு மாற்றாக ஸ்பாகெட்டி போலோக்னீஸை சமைத்தால் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள் அல்லவா!

டிவி முன் சாப்பிடாமல் டேபிளில் சாப்பிடுதல்

டிவி முன் சாப்பிடாமல் டேபிளில் சாப்பிடுதல்

நீங்கள் சாப்பிடுவதில் கவனம் சிதறி இருந்தால், உங்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக சாப்பிட்டு விடும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், நீங்கள் வயிறு நிறைந்து விட்டது என்ற உணர்வை உணர மாட்டீர்கள். எனவே, உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து அமர்ந்து சாப்பாட்டு நேரத்தில் மட்டும் டேபிளில் அமர்ந்து சாப்பிடப் பழகுங்கள்.

ஆசையை ஊக்கமாக்கி விடுதல்

ஆசையை ஊக்கமாக்கி விடுதல்

மற்றவர்களின் வெற்றியை பார்த்துக் கொண்டிருந்தால் பொறாமையே வரும். ஆனால் நமக்குத் தேவையானது என்ன என்று பார்க்கும் போது ஊக்கம் மிகும். எனவே, நேர்மறையாக யோசிக்கத் தொடங்குங்கள், 'இந்த மனிதரைப் போல நான் ஆக வேண்டுமானால், நான் செய்ய வேண்டிய முதல் காரியம் என்ன? அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?' அவர்களுடைய உதவியையும், ஆதரவையும் கூட நீங்கள் கேட்கலாம். ஒரு மைல் தூரத்தை 37 நபர்கள் 4 நிமிடங்களில் கடந்திருந்த போது, ரோஜர் பானிஸ்டர் அந்த சாதனையை அதற்கும் குறைவான நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த ஆண்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?

சுய-சந்தேகத்திலிருந்து தன்னம்பிக்கைக்கு மாறுதல்

சுய-சந்தேகத்திலிருந்து தன்னம்பிக்கைக்கு மாறுதல்

நாம் அனைவருக்கும் சில மோசமான விமர்சனங்களை கொடுத்துக் கொண்டிருப்போம் மற்றும் நம்முடைய தோல்விகளில் நம்மால் எளிதில் ஈர்க்கப்பட்டும் இருப்போம். ஆனால், நமது வெற்றிகளில் கவனம் செலுத்தும் போதும் மற்றும் நமக்கு நாமே ஆதரவாகவும் இருக்கும் போதும், நம்மால் மேலும் சாதிக்க முடியும் என்று நம்பத் தொடங்குவோம். எனவே, ஏதாவது ஒரு விஷயம் சரியாக வராத வேளைகளில் உங்களை நீங்களே நொந்து கொள்வதற்கு பதிலாக, ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசுவது போன்று உங்களிடம் நீங்களே ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். அதில் பரிவும், உறுதியும் இருக்கட்டும்.

பிடித்த உணவகங்கள் மட்டும் போதும்

பிடித்த உணவகங்கள் மட்டும் போதும்

சைனீஸ் உணவு, இந்திய உணவு அல்லது மீன் மற்றும் சிப்ஸ் என எதுவாக இருந்தாலும், உங்களுக்கு பிடித்தமான இடங்களைத் தவிர வேறெங்கும் செல்ல வேண்டாம். கடைக்குச் சென்று வாங்குவதை விட, உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே சமைக்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களுடைய இடுப்பளவு குறையலாமேயொழிய, வங்கி கணக்கின் இருப்பளவு குறைந்து விடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

11 Tricks That'll Change Your Shape

Slimming doesn't have to mean making dramatic changes to your lifestyle overnight. In fact, small — often apparent — changes added together can make a big difference to your weight loss.
Desktop Bottom Promotion