For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைராய்டு உள்ளவர்கள் உடல் எடை குறைய மேற்கொள்ள வேண்டிய டயட்!!!

By Maha
|

இன்றைய காலத்தில் தைராய்டு இல்லாதவர்களை பார்ப்பதே கடினம். அந்த அளவில் தைராய்டானது நிறைய மக்களுக்கு உள்ளது. அதிலும் தைராய்டு வந்தாலே, உடல் எடையில் மாற்றங்கள் நிகழும். இவ்வாறு ஹைப்போ தைராய்டு இருந்து, உடல் எடை அதிகரித்தால், அதனை குறைப்பது என்பது மிகவும் கஷ்டம். அத்தகையவர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்று குறைவாக சாப்பிட்டாலும், உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்.

தைராய்டு நோயாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தான் எடை அதிகரித்தல். இதற்கு முக்கிய காரணம், தைராய்டு பற்றாக்குறையே. உடல் எடை அதிகரிப்பதற்கு உடலில் கொழுப்புக்கள் தங்குவதனால் மட்டும் ஏற்படுவதில்லை. உடலில் தண்ணீர் மற்றும் உப்பு அதிக அளவில் இருந்தாலும், உடல் பருமன் அடையும்.

எனவே தைராய்டு நோயாளிகள் சரியான டயட்டை மேற்கொண்டால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். அதற்கு டயட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இத்தகைய நார்ச்சத்து உணவுகளில் நார்ச்சத்து மட்டுமின்றி, கலோரி குறைவாக இருப்பதால், எளிதில் உணவானது செரிமானமடையும். அதுமட்டுமல்லாமல், இந்த நோயாளிகள் இத்துடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்குவதோடு, எடையும் குறையும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு குடித்து, சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சரி, இப்போது உடல் பருமனால் அவஸ்தைப்படும் தைராய்டு நோயாளிகளுக்கு, உடல் எடை குறைய சில டயட்டை கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றினால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட் சார்ட்

டயட் சார்ட்

உடல் எடை குறைய வேண்டுமெனில், முதலில் டயட் சார்ட்டினை பின்பற்ற வேண்டும். இதனால் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கண்காணிக்க முடியும். மேலும் ஆய்வு ஒன்றிலும், டயட் சார்ட்டினை பின்பற்றி வந்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும் என்றும் சொல்கிறது.

நார்ச்சத்துள்ள காய்கறிகள்

நார்ச்சத்துள்ள காய்கறிகள்

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பச்சை நிற காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைகோசு, கொலார்டு, பீன்ஸ், கேல் மற்றும் டர்னிப் கீரை போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறையும்.

நார்ச்சத்துள்ள பழங்கள்

நார்ச்சத்துள்ள பழங்கள்

அவகேடோ, வாழைப்பழம், கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இத்தகைய பழங்களை தைராய்டு நோயாளிகள் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கும்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரியில் கொழுப்பைக் கரைக்கும் பொருள் இருப்பதோடு, ஊட்டச்சத்துக்களுடன், கலோரியும் குறைவாக உள்ளது. எனவே உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

நீர்வறட்சியானது உடலில் ஏற்பட்டால், அவை உடலின் மெட்டபாலிசத்தை குறைக்கும். எனவே அதிகப்படியான தண்ணீரைக் குடித்து வந்தால், அதிகப்படியான பசியானது கட்டுப்படுவதுடன், வயிறு உப்புசம் குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

தானியங்கள்

தானியங்கள்

தானியங்களில் தான் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டு நோயாளிகள் உடல் எடையை குறைக்க நினைத்தால், நார்ச்சத்துள்ள தானியங்களான கோதுமையை தினமும் டயட்டில் சேர்க்க வேண்டும்.

உலர்ந்த அத்திப்பழம்

உலர்ந்த அத்திப்பழம்

இந்த உலர் பழத்தில் நார்ச்சத்து மட்டுமின்றி, பல ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸாக, இத்தகைய உலர் பழத்தை சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறையும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடல் எடை குறைய ஒரு சிறந்த வழியென்றால், அது உடற்பயிற்சியின் மூலம் தான். தைராய்டு நோயாளிகள் உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்க, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அளவை சீராக வைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், உடல் எடை குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதனை தைராய்டு நோயாளிகளும் பின்பற்றி வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைவதோடு, உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கும்.

அயோடின்

அயோடின்

தைராய்டில் உடல் எடையை அதிகரிக்கும் ஹைப்போ தைராய்டிசத்தை சரிசெய்ய, உணவில் அயோடின் அளவை அதிகரித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, சோர்வு நீங்கி, உடல் எடையும் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight Loss Diet For Thyroid Patients

If you have thyroid and want to lose weight then here are few diet tips to follow.
Story first published: Tuesday, June 18, 2013, 13:01 [IST]
Desktop Bottom Promotion