For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க எலுமிச்சை டயட்டை மேற்கொள்ளலாமே...!!!

By Maha
|

அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனு வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. மேலும் பெரும்பாலான உடல்நல நிபுணர்களும், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்தால், உடல் எடை எளிதில் குறையும் என்றும் கூறுகின்றனர்.

அத்தகைய சிட்ரஸ் பழமான எலுமிச்சை, உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை அழகுறச் செய்யவும் உதவியாக உள்ளது. எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும். இதற்கு எலுமிச்சை டயட் என்று பெயர்.

சொல்லப்போனால், நிறைய திரையுலக நட்சத்திரங்களும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள, இந்த எலுமிச்சை டயட்டை மேற்கொள்கிறார்கள். எனவே எப்போதும் எலுமிச்சை ஜூஸை குடித்து, உடலை ஸ்லிம்மாக்குவதை விட, அத்துடன், சில ஆரோக்கிய வழிகளிலும் எலுமிச்சையைப் பயன்படுத்தி, உடல் எடையைக் குறைப்பதற்கான சரியான டயட்டை மேற்கொள்ளலாமே!!!

இப்போது எலுமிச்சை டயட்டை மேற்கொள்ளும் போது, என்னவெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திட உணவுகள் கூடாது

திட உணவுகள் கூடாது

எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது, திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. இவ்வாறு இருந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.

கார உணவுகளை தவிர்க்கவும்

கார உணவுகளை தவிர்க்கவும்

கார உணவுகள், உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். எனவே எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது அதிகமான கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிகமான நீர்மம்

அதிகமான நீர்மம்

எலுமிச்சை டயட்டில் இருக்கும் போது, கொழுப்புக்களை கரைக்கும் சிட்ரஸ் பழங்களாலான பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிறும் நிறைந்திருக்கும்.

தேன்

தேன்

தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, கொழுப்பைக் குறைக்கும் பொளும் அதிகம் உள்ளது. எனவே லெமன் டயட்டில் இருக்கும் போது, இதனை சாப்பிடுவது இன்னும் நல்ல பலனைத் தரும்.

காலை உணவு

காலை உணவு

எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு. இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு, நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும்.

எலுமிச்சை-தேன்

எலுமிச்சை-தேன்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

லெமன் பை (Lemon Pie)

லெமன் பை (Lemon Pie)

டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும். எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.

எலுமிச்சை சூப்

எலுமிச்சை சூப்

எடையை குறைக்க நினைக்கும் போது, அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும். அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

சாலட்

சாலட்

சாலட் சாப்பிடும் போது, அதை சாப்பிட போர் அடித்தால், அப்போது சாலட்டின் சுவையை அதிகரிப்பதற்கு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இதுவும் எலுமிச்சையை உடலில் சேர்ப்பதற்கான ஒரு வழியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lemon Diet For Weight Loss

Lemon diet is easy to follow and very effective too. Apart from maintaining the slim figure, it also helps get a glowing face. Drinking just a glass of honey and lemon juice is not enough. Here are few healthy ways to eat lemon and follow the proper diet.
Desktop Bottom Promotion