For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுப்புச்சத்து இல்லாத உணவு நன்மையா அல்லது தீமையா?

By Super
|

இன்று நாம் சாப்பிடும் பிட்சா, பர்கர் மற்றும் இதர ஜங்க் உணவு வகைகள் உடல்நலத்தைக் கெடுத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவற்றில் உள்ள அதிக கொழுப்புச்சத்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றது. மேலும் பலவகை கொடிய நோய்களால் ஆபத்தையும் விளைவிக்கின்றது. ஆகவே, நாம் நம் அன்றாட உணவில் அதிக கொழுப்புச்சத்து வாய்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வெளியில் சாப்பிடும் பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும். வீட்டிலேயே ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட்டு வந்தால், உடல்நலம் சீராக இருக்கும்.

கொழுப்புச்சத்து குறைவாக உள்ள உணவு தான் பத்திய உணவு என்பது நாம் அறிந்த ஒன்று. நாம் சாப்பிட விரும்புவதும் இவ்வகை பத்திய உணவு வகை தான். நாம் ஒருபடி மேல் சென்று கொழுப்புச்சத்து அறவே இல்லாத உணவை சாப்பிட ஆசைப்படுகின்றோம். அதுவே நமது விரும்பத்தக்க பழக்கமாக மாறி வருகிறது. கொழுப்புச்சத்தை தவிர்ப்பதற்காக வேக வைப்பது மற்றும் பிரஷர் குக்கரில் சமைப்பது போன்றவற்றை நாம் செய்து வருகிறோம்.

கொழுப்புச்சத்து உள்ள உணவு என்றாலே நம்மிடையே ஒரு கெட்ட மதிப்பையே ஏற்படுத்தி உள்ளது. எல்லோராலும் வெறுக்கப்பட்டு வரும் உணவாகவே உள்ளது. அவை நமக்கு நன்மை அளிக்குமா? கொழுப்புச்சத்து இல்லாத அல்லது குறைவாக உள்ள உணவை சாப்பிடுவதால் என்ன ஆகும் என்பதை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் குறைபாடு

வைட்டமின் குறைபாடு

கரையும் தன்மையுள்ள வைட்டமின்களான ஏ, டி, ஈ மற்றும் கே வகைகளை உடலுக்குள் கொண்டு செல்வதற்கும், உட்கவர்வதற்கும் கொழுப்புச்சத்து மிகவும் அவசியமானது. அதனால், கொழுப்புச்சத்து குறைவாக சாப்பிடும் போது, இவ்வகை வைட்டமின்களின் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

உயர் கொலஸ்ட்ரால்

உயர் கொலஸ்ட்ரால்

உணவில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணும் நமக்கு இந்த செய்தி அதிர்ச்சியாகத் தான் இருக்கும். ஏனென்றால், உணவில் மோனோ அன் சாச்சுரேட்டட் மற்றும் ஒமேகா-3 வகை கொழுப்புச்சத்து குறைவாக இருந்தால், அது நமது HDL எனப்படும் நல்ல கொழுப்புகளை குறையச் செய்யும். இதனால் இதய நோய் மற்றும் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரித்தல் போன்றவை வரும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் இரசாயன பொருட்கள் திறம்பட செயல் புரிவதற்கு பெரிதும் உதவியாக இருப்பது கொழுப்புச்சத்து தான். அது நமது மனநிலையையும் பழக்கவழக்கங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை உடையது. ஒமேகா-3 குறைபாடு இருந்தால், நமக்கு இரு துருவ சீர்கேடு (பைபோலார் டிசாடர்), பேதப்பித்து (சிசோபிரினியா), சாப்பிடும் சீர்குலைவு மற்றும் ADHD போன்ற நோய்கள் வர வாய்ப்பு அதிகரிக்கக்கூடும்.

புற்றுநோய் நோய் வரும் அபாயம்

புற்றுநோய் நோய் வரும் அபாயம்

சில வகையான புற்றுநோய்களான பெருங்குடல், முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் மார்பக புற்றுநோய்கள் வருவதற்கு பெரிதும் காரணமாக இருப்பது தேவையான கொழுப்பு அமிலங்களின் குறைப்பாடு தான்.

அதிக சர்க்கரை உட்கொள்ளுதல்

அதிக சர்க்கரை உட்கொள்ளுதல்

கொழுப்புச்சத்து குறைவாக உள்ள உணவில், அதிக சர்க்கரை மற்றும் இதர கார்போஹைட்ரேட் போன்றவற்றை கொழுப்புச்சத்துக்கு பதிலாக சேர்கின்றார்கள். இதனால் அவற்றில் கலோரிகள் குறைக்கப்படுவதற்கு பதிலாக கொழுப்புச்சத்து குறைக்கப்படுகின்றது. அதனால் கலோரிகள் அளவில் பெரிய மாற்றம் இருப்பதில்லை.

நல்ல கொழுப்புக்களை சேர்க்கவும்

நல்ல கொழுப்புக்களை சேர்க்கவும்

மொத்த கலோரிகளின் அளவில் 20% குறைவான கொழுப்புச்சத்து நமக்கு தேவைப்படுகின்றது. கொழுப்புச்சத்து நமக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். அவற்றை முற்றிலுமாக நீக்குவது நல்லது கிடையாது. ஆகவே மோனோ அன்-சாச்சுரேட்டட் மற்றும் ஒமேகா-3 வகை கொழுப்புச்சத்துக்களை அதிக அளவில் சாப்பிட்டு, சாச்சுரேட்டட் கொழுப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் எவ்வளவு கொழுப்புச்சத்து அவசியம்?

தினமும் எவ்வளவு கொழுப்புச்சத்து அவசியம்?

தினமும் குறைந்தது 4 ஸ்பூன் கொழுப்புச்சத்தானது, நமது உணவில் கட்டாயம் இருக்க வேண்டும். சமையலில் சேர்க்கும் கொழுப்புச்சத்து செரிமான சக்திக்கும், சிறந்த உட்கவர்தலுக்கும் உதவி புரிகின்றது. சிறந்த பத்திய உணவை சாப்பிடுவது, அன்றாடம் உடற்பயிற்சி செய்து வருவது போன்ற பழக்கங்கள், நமக்கு வரும் உடல் கேடுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். அதனால், சிறந்த தேவையான கொழுப்புச்சத்துகளை பத்திய உணவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Zero Fat Diet Good Or Bad?

Low fat diet is the most commonly used term. All of us want to to eat a low fat diet. We have gone a step ahead by totally avoiding fat in our diets. Lets have a look what happens to eating very low or zero fat diets.
Desktop Bottom Promotion