For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க ஆயுர்வேதம் கை கொடுக்குமா?

By Super
|

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சனை உடல் பருமன். அதற்கு காரணம் நம்முடைய சுற்றுச் சூழலும், மோசமான உணவு பழக்கமும் தான். உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், பத்திய உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை சொல்லலாம். ஆனால் ஆயுர்வேதமும் அதற்கு கை கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

உடல் பருமன் பிரச்சனைக்கான ஆயுர்வேத சிகிச்சை, உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதிலிருந்து தொடங்கும். இதனை 'அமா' என்று அழைப்பார்கள். முறையற்ற உணவு பழக்கம், சுற்றுப்புற மாசு, சுமையான வாழ்க்கை முறையால் ஏற்படும் தீவிரமான மன அழுத்தம் போன்றவைகளால் உடலில் நச்சுத்தன்மை குவியும். தண்ணீரில் கரையும் நச்சுப் பொருட்கள் சிறுநீர், மலம் மற்றும் வியர்வை வழியாக சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் மற்றவைகள் எல்லாம் சிரமப்படும். முறையான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இவ்வகை நச்சுப்பொருட்களை நீக்க உதவும். இருப்பினும், கொழுப்பில் கரையும் நச்சுப் பொருட்கள் அவ்வளவு சுலபமாக வெளியேறி விடாது. இவ்வகை அசுத்தம் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளை தான் முதலில் குறி வைக்கும். இப்பகுதிகளில் இவை கொழுப்பாக தேங்கி விடும்.

ஆயுர்வேத நுட்பங்கள் முதலில் 'அமா' வை தான் குறி வைக்கும். அதன் படி உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். அதிலும் கொழுப்பு அணுக்களை சுருக்கி, இதனை சிறப்பாக செயல்படுத்தும். உங்களுக்கு வயது அதிகமாக அதிகமாக கொழுப்பு வெளியேற்றம் குறையும். அதனால் இந்த நுட்பத்தை அடிக்கடி செய்து வந்தால், நச்சுப் பொருட்கள் மற்றும் அசுத்தங்களை சீரான முறையில் உடலில் இருந்து வெளியேற்றலாம். மேலும் இது வருங்காலத்தில் ஏற்படும் தீவிரமான உடல் பருமனையும் தடுக்கும்.

உடல் பருமனை நீக்க செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைக்கு முக்கியமாக விளங்குவது ஆரோக்கியமான வாழ்வு முறை. இது பொதுவான ஒரு வாக்கியமாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை. அதற்கு முதலில் இரவு வேகமாக தூங்கி, காலையில் வேகமாக விழிக்க வேண்டும். நம் உடம்பிலும் ஒரு கடிகாரம் உள்ளது. அது பாதிக்கப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்வு முறை உணவு பழக்கத்தை பொறுத்து அமையும். ஆயுர்வேதத்தை பொருத்தவரை, உடல் எடையை அதிகமாக உள்ளவர்களை பருவகால காய்கறிகளையும், பழங்களையும் உண்ண சொல்கின்றனர் வல்லுனர்கள். மேலும் இவ்வகை இயற்கை உணவு மற்றும் பழங்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைக்க முற்படும் போது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இதோ உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை ஆயுர்வேத முறைப்படி நீக்குவதற்கான சில டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Does Ayurveda Help In Weight Loss?

The Ayurvedic treatment for obesity begins with triggering the toxins inside the body. The toxins in our bodies are accumulation of various impurities taking birth from chaotic dietary habits, environmental pollution, and chronic stress due to hectic lifestyles.
Desktop Bottom Promotion