For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விடுமுறை நாட்களில் அளவாக சாப்பிட்டு, உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டுமா?

By Boopathi Lakshmanan
|

விடுமுறைக் காலம் வந்துவிட்டது. இது மகிழ்ச்சியின் காலம், சந்தோஷத்தை உண்டாக்கும் காலம். அனைவரையும் சந்தித்து மகிழ்ந்திருக்கும் தருணம் இது. இந்த காலத்தில் உணவு கட்டுப்பாடு அல்லது டையடிங் ஆகியவற்றை எவராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க வெகு நாட்களாக செய்து வந்த உணவு கட்டுப்பாடுகள் மற்றும் இதர பயிற்சிகளை இந்த விடுமுறை காலத்தில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த காலத்தில் இச்செயல்களை செய்து தங்கள் சந்தோஷமான நேரங்களை விட்டு விட எவரும் விரும்ப மாட்டார்கள். அனைவரும் வெளியே சென்று அகமகிழ்ந்து, சமூக கூட்டங்களை கொண்டாடுதல் ஆகிய நிகழ்வுகளில் கலந்து களிகூர்ந்திருப்பார்கள்.

உடலை கட்டுக்குள் வைப்பதற்காக உணவு முறையில் பல முயற்சி எடுப்பவர்களுக்கு இது ஒரு சவாலாக விளங்குகிறது. ஏனெனில் நாக்கில் எச்சில் ஊறச் செய்யும் உணவுகள் அதிக அளவு உணவு உங்களைச் சுற்றி இருக்கையில் இந்த முயற்சி மிகவும் கடினம் தான். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகளில் மகிழ்ந்திருக்கும் நேரங்களில் நிறைய பேர் குறைவாக சாப்பிடவும், உடற்பயிற்சி செய்யவும் திட்டமிடுவார்கள். ஆனால் இப்பண்டிகை காலத்தில் செய்யப்படும் வறுத்த ரொட்டிகள், ஆப்பிள் ஃபை, ஜெல்லி டோநட், மற்றும் சாக்லேட் ஆகியவற்றைக் கண்டு அதிகம் சாப்பிட தூண்டப்படுவார்கள். இந்த உணவுகள் சிறிது சாப்பிட்டாலும் இன்னும் சாப்பிட வேண்டும் என்ற சுவையை கொண்டவை. இப்படி இருந்தால் விடுமுறை நாட்களில் எவ்வாறு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது? இத்தகைய செயல்களை காட்டிலும் வேறு முயற்சிகள் ஏதாவது எடுத்தால் உடல் எடை கூடுவதிலிருந்து தப்பிக்கலாம்.

மிகுந்த கொழுப்புள்ள உணவுகளை தவிர்ப்பது உடல் எடை கூடுவதை தவிர்க்க செய்யும் புத்திசாலித்தனமான செயலாகும். விடுமுறை நாட்களில் இவ்வாறு உடல் பருமனை குறைக்கும் வழிகளை பின்பற்றி பண்டிகைகளையும் சிறப்புற கொண்டாடி மகிழ்ந்து சில கிலோ எடை உடலில் ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இங்கே, அதிக அளவு கலோரிகளை உடலில் சேர்க்காமல், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைப்பதற்கான சில வழிகளை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை மீது ஒரு கண்

எடை மீது ஒரு கண்

உணவை கட்டுப்படுத்தும் வேளைகளில் விருந்திற்கு செல்வதை தவிர்கக வேண்டும். தேவையான அளவு சத்தான உணவை சாப்பிட்டு, அதிக அளவு உண்ணும் எண்ணத்தின் தூன்டுதலை தவிர்க்க வேண்டும். மனதை தயார் செய்து எந்த வகையில் சாப்பிட வேண்டும் என்று எண்ணி செயல்படுதல் ஆரோக்கியமான உணவையும் மற்றும் உடல் எடையை குறைக்கும் யுக்தியையும் காட்டும். அது மட்டுமல்லாமல் இச்செயல் உடல் எடையை குறைய வைத்து உங்களையும் மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கும்.

கவனத்தை திசை திருப்புங்கள்

கவனத்தை திசை திருப்புங்கள்

விடுமுறை காலம் என்பது உணவு மற்றும் மது என்றல்லாமல் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் ஒன்று சேர்ந்து இருப்பது தான். உங்களது உணவு கட்டுப்பாடு முறையை விலக்காமல் அனைவருடனும் மகிழ்ந்திருக்கலாம். ஒருவேளை அதிக அளவு கலோரி உணவை உண்ண நேரிட்டால் அந்நாளின் டயட்டை அதற்கேற்ப சரி செய்து கொள்ளுதல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சுறுசுறுப்பாக இருங்கள்

சுறுசுறுப்பாக இருங்கள்

உடல் உழைப்பு மற்றும் உடற் பயிற்சி ஆகியவற்றைத் தவிர வேறு எந்த ஒரு செயலாலும் விடுமுறை நாட்களில் ஆரோக்கியமான வகையில் உடல் எடையை குறைக்க முடியாது. விடுமுறைகள் உங்களை பல வேலைகளில் ஈடுபடுத்தி நாள் முழுவதும் ஏதேனும் ஓரு வேலையில் பிசியாக இருந்தால் நலமாய் இருக்கும். ஜிம், உடற்பயிற்சி, யோகா ஆகிய வகுப்புகளுக்கு செல்ல நேரம் இல்லை என்றால் ஒரு சுறுசுறுப்பான நடை பயணத்தை மேற்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். 15 முதல் 20 நிமிடங்கள் நடப்பது உங்களை கட்டுக்கோப்பாக வைக்க உதவும்.

தேர்ந்தெடுத்து சாப்பிடுதல்

தேர்ந்தெடுத்து சாப்பிடுதல்

அனைத்தையும் உண்டு உடல் ஆரோக்கியத்தை பாழ்படுத்தாதீர்கள். முன் யோசனை இல்லாமல் உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை உண்ண வேண்டாம். ஒரு விருந்திற்கு செல்லும் போது உங்கள் தட்டை நிரப்பும் முன் என்ன உணவை எடுக்க வேண்டும், எதை விட வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள். கொழுப்பு மிக்க உணவை தவிர்ப்பது நலம். சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது எடையை குறைக்க சரியான வழியாகும். சிறிய தட்டை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். இயற்கை காய்கறிகள் மற்றும் பழங்களே இந்நாட்களில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகளாகும்.

தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட வேண்டாம்

தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட வேண்டாம்

தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட வேண்டாம் உணவை கொடுத்தவரை மதிக்கும் வண்ணம் தட்டில் உள்ளவற்றை மேல்படியாக சாப்பிட்டு பறிமாறியவரை மகிழ்விப்பது சிறந்தது. உங்களது எடையை கருத்தில் கொண்டு, நீங்கள் எடுக்கும் முடிவு இது. அனைத்தையும் உண்டு விருந்து கொடுத்தவறை மகிழ்விக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இல்லை என்று திட்டவட்டமாக சொல்லுங்கள்

இல்லை என்று திட்டவட்டமாக சொல்லுங்கள்

வேண்டாம் என்று நாசூக்காகவும் மற்றும் மிக அழுத்தமாகவும் சொல்லுங்கள். விருந்திற்கு நன்றி செல்லுங்கள் ஆனால் நிச்சயம் உணவை வேண்டாம் என்றும் உங்கள் வயிறு நிரம்பியுள்ளது, மீண்டும் சாப்பிடச் சொல்லி கேட்டதற்கு நன்றி என்றும் கனிவுடன், திட்டவட்டமாக கூறுங்கள்.

மன ரீதியாக நம்பிக்கையூட்டுதல்

மன ரீதியாக நம்பிக்கையூட்டுதல்

குறைத்து உண்பது அல்லது தேவைக்கேற்ப உண்பதன் மூலம் நமக்கு சாப்பிடும் ஆசை குறையும். கண்டிப்பான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வந்தால் சாப்பிடத் தூண்டும் தூண்டுதல்கள் குறையும். உங்களது நண்பர்களின் ஊக்கமும் நம்பிக்கையும் உங்களுக்கும் பலனளிக்கும். உங்களுக்கு வெறுப்பாக உள்ள போதும், தன்னம்பிக்கை குறையும் போதும் அவர்கள் துணை நிற்பார்கள். எடை கூடுவதை தவிர்க்க விழிப்புடனும், வைராக்கியத்துடனும் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

மது பானங்களை தவிர்த்தல்

மது பானங்களை தவிர்த்தல்

எந்த ஒரு செயற்கையான பானமாக இருந்தாலும் அது வயிறை உப்பச் செய்யும் திறன் கொண்டதாகவே இருக்கும். அதில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதால் இத்தகைய பானங்களில் காற்று அதிகமாகி நமக்கு வாய்வு தொல்லையை உண்டாக்குகிறது.

விடுமுறை உணவு கட்டுப்பாடு முறைகளை கடைப்பிடிப்பதால் உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்து, அந்நாட்களில் உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியும். மேலே குறிப்பிட்ட முறைகளை செயல்படுத்தி உடலை சிக் கென வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Holiday Tips For Weight Loss

Following a weight loss holiday diet can allow you to eat and celebrate the season without stacking on a few pounds. Here are some tips for weight loss that can help you keep a watch on your weight and save you from piling on the calories.
Story first published: Sunday, December 22, 2013, 17:27 [IST]
Desktop Bottom Promotion