For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைவாக சாப்பிட சில எளிமையான டிப்ஸ்கள்..

By Boopathi Lakshmanan
|

இக்காலத்தில் பலருக்கும் முக்கியமான விஷயமாக ஆரோக்கியம் உள்ளது. மக்கள் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு முனைகின்றனர் மற்றும் பொலிவான தோற்றத்துடனும் கவர்ச்சியாகவும் இருக்க விரும்புகின்றனர். இதற்காக உணவு கட்டுப்பாடுகளையும், ஜிம் போன்றவற்றையும் தேர்ந்தெடுக்கின்றனர். அது பலருக்கும் உபயோகமாக இருந்துள்ளது. எனினும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், திட்டமிட்ட படி உணவை உண்பதும் சிறிது கடினமே. கட்டுப்பாடான உணவு முறை மிக அவசியமானதாகும். சரியான முறையிலும், குறைவாகவும் சாப்பிட வேண்டும்.

சுகாதார மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவரும் கட்டுப்பாடான உணவிற்கு சொல்லும் ஒரே பொதுவான மந்திரம் 'ஒரு சில மணி நேர இடைவெளிகளில் சிறிது சிறிதாக சாப்பிடுங்கள்' என்பதே. தகுந்த பலன் அடைய இந்த வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டும். திட்டமான உணவிற்கு குறைவான உணவை உண்டு அதிகமான தண்ணீரை பருக வேண்டும். இது எடையை குறைப்பதற்கும் மற்றும் எடையை அதிகரிப்பதற்கும் உதவும். சில சமயங்களில் நமக்கு பசி எடுக்கும் வரை நாம் உண்பதில்லை. இச்சமயங்களில் தான் நாம் தேவைக்கு அதிகமான உணவை உண்டும, அதிக கலோரிகளையும், கொழுப்பையும் சாப்பிட்டு விடுகிறோம்.

உண்ணும் முறை என்பது எப்போதும் ஒரே மாதிரியாகவும், அதிக அளவில் இல்லாமலும் கவனித்துக் கொள்ளுதல் வேண்டும். கீழ் வரும் பகுதியில் எவ்வாறு குறைந்த அளவு உணவு உண்ணும் முறையை பின்பற்றுவது எப்படி என்பதை பற்றி சில டிப்ஸ்கள் கொடுத்துள்ளோம்.

Easy Tips To Eat Less

பாத்திரத்தின் அளவை குறையுங்கள்

உங்களுக்கு உணவு பரிமாறும் போது எப்போதும் சிறிய தட்டு அல்லது சிறிய கிண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தவும். எப்போதும் இதை பின்பற்ற வேண்டும். பாத்திரத்தின் அளவு எப்போதும் தேவையான உணவை தாங்கும் வண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். பெரிய அளவு தட்டுகளும் கிண்ணங்களும் உங்களை அதிக அளவு சாப்பாடு எடுக்கவும் உட்கொள்ளவும் தூண்டும். இவ்வாறு செய்வது எளிமையாக உணவை கட்டுபடுத்தும் முறையாகும்.

கவனம் தேவை

சாப்பிடும் போது எப்போதும் எந்த வகையான வேறு வேலைகளை செய்து கொண்டும் சாப்பிடுவதை தவிர்க்கவும். டி.வி. பார்த்துக் கொண்டும், போனில் பேசிக் கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும் உணவை உண்டால் அதிக அளவு உட்கொள்ள நேரலாம். அதுமட்டுமல்ல பசியின் காரணமாகவும் அதிகம் உண்ணலாம். நாம் உணவை கவனிக்காமல் பசியின் மேல் கவனம் செலுத்தும்போது இத்தகைய சம்பவம் நேரலாம். ஆதலால் சாப்பிடும் போது எந்த வித சிந்தனையும் இல்லாமல் வேறு வேலைகளில் கவனம் செலுத்தாமல் சாப்பாட்டில் மட்டும் கவனத்துடன இருக்க வேண்டும்.

தண்ணீர் குடிக்கவும்

பொதுவாக பசி எடுக்கும் போதும், தாகம் எடுக்கும் போதும் ஏதேனும் சாப்பிட்டு விடுவோம். இது வழக்கம் தான் அனைவருக்கும் நடக்கும் விஷயமாகும். ஆதலால் நீங்கள் எப்போதாவது பசித்திருந்தால் ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்கவும். அதன் பிறகும் பசித்தால் உணவு உண்ணவும். உணவு இடைவேளைகளில் அவசியம் தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம். இது உங்களை குறைந்த அளவு சாப்பாடு சாப்பிட வைக்க உதவும். தண்ணீர் குடித்த பின் உணவை உண்டால் குறைவாக உண்ணுவீர்கள்.

மெதுவாக உண்ணுங்கள்

எந்த ஒரு உணவையும் விரைந்து உண்ணுதல் தவறு. இப்படி உண்ணும் போது நம்மையும் மீறி அதிகம் சாப்பிட்டு விடுவோம். எவ்வளவு உண்கிறோம் என்று அளவை கவனிக்க மாட்டோம். மெதுவாகவும், அதிகமாக மென்றும் சாப்பிட வேண்டும். உணவை ஒழுங்காக மென்று சுவைத்த பின், அது செரிப்பதற்கு நன்றாக தயாராகி விடும். இல்லாவிடில் கொழுப்புகள் சிறிதாகவும் எளிதாகவும் உடைபடாமல் செரிமாணத்தை பாதித்துவிடும். ஆதலால் சரியான முறையில் உணவை குறைத்து மற்றும் நன்கு மென்று சாப்பிடுவது பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.

பதப்படுத்திய உணவை தவிர்க்கவும்

பதப்படுத்திய உணவுகளையும், பாக்கெட்டுகளில் கிடைக்கும் சிப்ஸ் போன்ற தின்பண்டங்களையும் தவிர்ப்பது நல்லது. இத்தகைய உணவை சாப்பிட்டால் எவ்வளவு உணவை உண்டோம் என்ற கணக்கு இல்லாமல் போய்விடும். தட்டு, கிண்ணம், மற்றும் நாப்கின்களை சாப்பிடும் போது பயன்படுத்துங்கள். பாக்கெட்டுகள் மற்றும் பெட்டிகளில் அடைக்கப்பட்டு வரும் உணவுகளை அறவே ஒதுக்குவது நல்லது. குறைவாக சாப்பிட்டு டயட்டை கடைப்பிடிக்க இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

குறைவாக உண்பது என்பதற்காக பசியுடன் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. இத்தகைய டையட் டிப்ஸ் நாம் எடுக்கும் உணவு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். தினசரி உடற்பயிற்சியாலும் இத்தகைய டையடிங்காலும் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.

English summary

Easy Tips To Eat Less

For an easy diet, you should eat less and drink a lot of water. It will be beneficial for weight loss as well as weight gain. Diet should be regular and you should avoid eating ample of food. A few easy diet tips for eating less food are given below:
Story first published: Monday, December 9, 2013, 17:46 [IST]
Desktop Bottom Promotion