For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும் வாய்ப்பு உள்ளதாம்!

By Boopathi Lakshmanan
|

நீங்கள் ஐஸ் க்ரீம்களை மிகவும் விரும்புபவரா? ஐஸ் க்ரீம் எவ்வளது அதிகமாக சாப்பிட்டாலும் எடை கூடாது என்று நினைப்பவரா? நீங்கள் அப்படிப்பட்டவராக இருந்தால் கொண்டாட வேண்டிய நேரம் இது!! உங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்லிம் சாக்லெட்டை சாப்பிட்டாலும், உங்களால் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். ஐஸ் க்ரீம்கள் மற்றும் அவற்றின் கலோரிகளை எரிக்கும் திறன் பற்றி ஆய்வுகளில் ஆச்சரியமான தீர்வுகள் கிடைத்துள்ளன. உங்களுடைய பேண்ட் டைட்டாகி விட்டது என்றோ, இடுப்பு பெருத்து விட்டது என்றோ மராத்தான் ஓட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தால், அதை செய்யுங்கள். ஆனால், அவ்வளவு கஷ்டப்படாமலேயே ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே எடையைக் குறைக்கும் சுவையான தீர்வும் உள்ளது.

பலரும் குறிப்பிடுவது போல ஐஸ் க்ரீம் ஒன்றும் மிகவும் மோசமான உணவு இல்லை, அதே சமயம் யாரும் அதனை ஒரு ஆரோக்கியமான உணவு என்றும் சொல்வதில்லை. யாராவது ஒருவர் உங்களை ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை நிறுத்தச் சொன்னாலோ அல்லது ஃப்ரீசரில் ஐஸ் வைக்க வேண்டாம் என்று சொன்னாலோ, உங்கள் செவிகளை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள்.

Does Eating Ice Burn Calories?

உங்கள் எடையைக் குறைக்கும் பொருட்களில் முதன்மையான பொருளாக ஐஸ் க்ரீம் உள்ளது என்றும், உங்கள் உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் தன்மை ஐஸ் க்ரீமுக்கு உண்டு என்றும் ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இப்பொழுது ஐஸ் க்ரீமுடன் உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கான உணவை சாப்பிடத் தொடங்கவும் என்று குறிப்பிட்டால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம். இங்கே ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் கலோரிகளை குறைத்து, அதிக பட்ச கொழுப்பை குறைக்கத் தொடங்குங்கள்!

எடை குறைப்பு ஆசான்களின் கருத்து என்ன?

அதிகபட்ச கொழுப்புகளை குறைக்கும் திறன் ஐஸ் உணவிற்கு உள்ளதால், எடை குறைப்பு ஆசான்கள் அதனை பரிந்துரை செய்கிறார்கள். ஐஸ் சாப்பிட ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவோ உங்களால் உங்களுக்குப் பிடித்த உடையை சிக்கென்று அணிந்து கொள்ள முடியும். ஐஸ் சாப்பிடுவதன் மூலமாகவே உங்களால் எடையைக் குறைக்க முடியும் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லையா? மேலும் சில எடை குறைப்பு ஆலோசகர்கள் முழுமையான ஐஸ் டையட் எடுத்துக் கொள்வதையும் பரிந்துரைக்கிறார்கள். ஐஸ் கொண்டு கலோரிகளைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்.

நீங்கள் ஐஸ் வேண்டாம் என்று சொன்னால்?

ஐஸ் க்ரீம் உங்களுக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், அது உங்கள் இடுப்பின் அளவுகளில் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதில்லை. எனினும், நீங்கள் அதனை ஒரேயடியாக சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஐஸ் க்ரீம்கள் சாப்பிடுவதால் உடனடியாக எடை குறையாத போதும், எடை குறையும் போது ஐஸ் க்ரீமின் பங்கும் முக்கியான அளவில் இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை ஒரேயடியாக தவிர்ப்பதன் மூலம், அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக உங்களுடைய எடை குறைப்பு திட்டம் ஒரு தண்டணை என்றும் கூட உங்களுக்குத் தோன்றும். இதன் காரணமாக மொத்த திட்டமும் பாழாகி விடும். நீங்கள் ஐஸ் கொண்டு கலோரிகளை குறைக்க விரும்பினால், அதனை முழுமையாக சாப்பிடாமல் விட்டு விட வேண்டாம்.

ஐஸ் கொண்டு கலோரிகளை எரித்திடுங்கள்

'ஐஸ் கொண்டு கலோரிகளை எரித்திடுங்கள்' இதுதான் ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் மந்திர வார்த்தைகள். ஐஸ் சாப்பிடுவதால் பெருமளவு எடை வேகமாக குறைந்து விடாமல் போனாலும், ஒரு சில கலோரிகள் குறைய ஐஸ் காரணமாக இருப்பதை மறுத்து விட முடியாது. ஐஸ் சாப்பிடுவதன் மூலமாக உடலின் தசைகளும் சற்றே இயங்கத் துவங்கும். அவ்வாறு இயங்குவதற்கு சிறிதளவு திறன் தேவைப்படும். இது ஐஸ் கொண்டு கலோரிகளை எரிக்கும் வழிகளில் ஒன்றாகும். ஐஸ் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் கலோரிகளை எளிதில் எரித்து, எடையை குறைக்க முடியும்.

ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மட்டுமே அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கான வழி கிடையாது. ஐஸ் சாப்பிடுவதாலும் கலோரிகளை எரிக்க முடியும் என்று பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்.

உணவு கட்டுப்பாடும்... ஐஸ் க்ரீமும்...

உணவு கட்டுப்பாடு என்று வரும் போது ஐஸ் க்ரீம் மோசமான இடத்தையே பிடிக்கிறது. ஐஸ் க்ரீம்களில் பருப்புகள் மற்றும் கொழுப்பு மிக்க பொருட்கள் கலந்திருப்பதனால் தான் இந்த மோசமான இடம். அரை கப் ஐஸ் க்ரீமை, இது போன்ற பருப்புகள் மற்றும் கொழுப்புகளுடன் சாப்பிட்டால், அது 250 கலோரிகளை சாப்பிட்டதற்கு சமமாகும். உங்களுடைய உணவு கட்டுப்பாட்டுத் திட்டத்தில், எவ்வளவு கலோரிகள் உணவை சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு கலோரிகளை வேலை செய்து எரிக்கிறீர்கள் என்றே கணக்கிடப்படும். இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் கணக்கில் கொண்டு உணவு உண்டு, வேலை செய்து வந்தால் எடை குறைப்பது மிகவும் எளிமையான பணி தான்.

English summary

Does Eating Ice Burn Calories?

Are you excited about the fact of enjoying your ice cream and losing weight? If so, then fasten up your seat belts and drive to your nearest ice cream shop and have fun! Here are a few facts about ice cream and burning those extra fats!
Story first published: Tuesday, December 10, 2013, 19:19 [IST]
Desktop Bottom Promotion