For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்பையுரு கருப்பை நோயுடன் எடையை குறைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

பொதுவாகவும் மற்றும் மண வாழ்விலும் பெண்களின் வாழ்வில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாக கருத்தரிக்கும் விஷயம் உள்ளது. PCOS என்று அழைக்கப்படும் பல்பையுரு கருப்பை நோய் பெண்களின் கருத்தரிக்கும் தன்மையை குறைப்பது மட்டுமல்லாமல் முகத்தில் தேவையற்ற முடி வளருதல், அரிப்பு, அதிகமான மன அழுத்தம் மற்றும் எடை ஆகிய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்த நோயினால் எடை கூடும் பிரச்சனை மற்றும் நோய் ஆகியவற்றை எடைய குறைப்பதன் மூலம் திறமையாக குறைக்க முடியும்.

இந்த சவால்களை வெற்றி கொள்வது கடினமான காரியமாக தோன்றினாலும், ஒரு முறை நீங்கள் முயற்சித்து பார்க்க வேண்டியதும் அவசியமாகும். பல்பையுரு கருப்பை நோயுடன் எடைய குறைப்பதற்கு மிகுந்த மன உறுதியும், பலமும் தேவைப்படும். இந்நோயின் விளைவுகளை உடல் மற்றும் வாழ்வில் புரிந்து கொண்டு எதிர்கொள்ள வேண்டும். மரபு வழியாக அதிகம் பரவும் இந்த நோயை, இந்த வழியில் பெறுபவர்கள் 50-50 சதவிகிதம் என்ற அளவில் உள்ளனர். அது மரபு வழியோ அல்லது இடையில் வந்ததோ என எந்த வகையாக இருந்தாலும், இந்த நோயை வெற்றிகரமாக எதிர்த்து போரிட்டு ஆரோக்கியமான கருத்தரிப்பு வாழ்க்கையை வாழ முடியும்.

மாதவிடாய் வயதை முழுவதும் கடந்து விடாமல் இருக்கும் எந்தவொரு பெண்ணையும் இந்த நோய் தாக்கக் கூடும். ஹார்மோன் மற்றும் இன்சுலின் அளவு ஆகியவையும் இதற்கான சில காரணங்களாக உள்ளன. பல்பையுரு கருப்பை நோயின் மிகப்பெரிய இன்னலாக கருதப்படும் எடை கூடும் பிரச்சனையை நீங்கள் சற்றே கடினமாக முயற்சித்தால் சமாளித்து விட முடியும். சரியான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் PCOS நோயின் பிடியிலிருந்து உங்களால் விடுபட்டு விட முடியும். இந்நோயிலிருந்து வெளி வர உதவும் சில வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுக் கட்டுப்பாடு

உணவுக் கட்டுப்பாடு

இந்நோய் தாக்கப்பட்டவர்கள் சாதாரணமாக இருப்பதை விட சற்றே கவனமாக உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். எனவே, உங்களுடைய மருத்துவருடன் கலந்து பேசி, இந்நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலான உணவு முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதன் மூலமாக எடையையும் கட்டுப்படுத்த முடியும்.

உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம்

உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம்

இந்நோய் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான மெல்லிய இறைச்சிகள், வெள்ளை ரொட்டி, காய்கறிகள் போன்றவற்றை நீங்கள் உண்ண வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்குத் போதுமான அளவிற்கு எடை குறைந்து விடும்.

குறைவாக, ஆனால் சத்தாக

குறைவாக, ஆனால் சத்தாக

பல்பையுரு கருப்பை நோயுடன் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் போதுமான அளவு சத்துள்ள, ஆனால் குறைவான உணவை சாப்பிட வேண்டும். மிகவும் அதிகமான கிளைசீமிக் குறியீட்டு மதிப்புள்ள உணவுகளுக்கு சற்றே சிறப்பு கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இவை இன்சுலின் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றன.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

பல்பையுரு கருப்பை நோயுடன் எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரவும். ஏரோபிக்ஸ் மற்றும் கார்டியோவாஸ்குலர் பயிற்சிகளை நீங்கள் செய்து வருவது அதிக அளவு கலோரிகளை நீங்கள் எரிக்க உதவும். மேலும், குறைவான எடை கொண்ட தசை பயிற்சிகளை செய்து, அதிகளவு இருக்கும் சதைகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

மருத்துவ உதவி

மருத்துவ உதவி

பல்பையுரு கருப்பை நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நேரங்களில், இந்த நோய் தொடர்பான மருந்துகளை எடுப்பதற்காக நீங்கள் மருத்துவரின் ஆலோசனைகளையும் பெற வேண்டும். ஹார்மோன் சமநிலையற்ற தன்மை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றை முறையாக கவனித்து, எடை குறைப்பை திறன் மிக்க வகையில் மேற்கொள்ள இந்த மருத்துவ ஆலோசனைகள் நிச்சயம் உதவும்.

தீய பழக்கங்களை தவிர்க்கவும்

தீய பழக்கங்களை தவிர்க்கவும்

புகைப்பழக்கம் மற்றும் கண்டபடி சாப்பிடுதல் போன்ற பழக்கங்களை அறவே கைவிடுவதன் மூலம் நீங்கள் பல்பையுரு கருப்பை நோயை எளிதாக எதிர்கொள்ள முடியும். புகைப்பழக்கம் உடலில் உள்ள இன்சுலின் மற்றும் டெஸ்டோஸ்டிரோன்களின் அளவை அதிகரித்து, அதன் காரணமாக உடல் எடையை அதிகரித்து விடும். மேலும், கலோரி அளவை கடுமையாக பின்பற்றி உங்களுடைய ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உலை வைத்து விடும்.

உணவே மருந்து

உணவே மருந்து

பல்பையுரு கருப்பை நோயுடன் உடல் எடையை குறைக்க விரும்பினால் உணவே மருந்து என்பதை மனதில் கொண்டு உங்களுடைய உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஒரே வகையாக பின்பற்றி வாருங்கள். ஏற்கனவே கடைப்பிடித்து வரும் உணவு கட்டுப்பாட்டு முறையுடன், வேறொரு முறையை பின்பற்ற முற்படுவது உங்களுடைய விளைவுகளில் மாற்றங்களை கொண்டு வந்து விடும்.

குறிப்பு

குறிப்பு

பல்பையுரு கருப்பை நோயை கட்டுப்படுத்துவதோ மற்றும் எதிர்த்து நிற்பதோ மிகவும் கடினமான விஷயமாகும். நீங்கள் மன உறுதி மிக்க மனிதராகவும் மற்றும் கடுமையாக உழைப்பவராகவும் இருந்தால் தான் இந்நோய்க்கு எதிராக நல்ல பலன்களைப் பெற முடியும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள் மற்றும் உங்களுடைய மருத்துவருடன் விவாதித்து பல்பையுரு கருப்பை நோய் தொடர்பான பிரச்சனைகளை முறையாக கவனித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Way To Lose Weight With PCOS

Overcoming challenges is not an easy task, but you need to give it a try at least. In order to lose weight with PCOS, you need determination and strength to understand its effect on your body and life, and face it. Here are some best ways to shed those extra calories for women with PCOS problems.
Desktop Bottom Promotion