For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை அதிகமா இருக்கா? அப்ப கண்டிப்பா இத படிங்க...

By Super
|

உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது உடலை நல்ல கட்டமைப்புடன் வைத்துக் கொள்வது. ஆனால் நாம் பார்க்கும் வேலையை பொறுத்தோ அல்லது உணவுப் பழக்கத்தை பொறுத்தோ, உடல் எடை மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இன்றைய சூழலில் நம்மில் பலர் பார்க்கும் வேலையில், உடம்பை வருத்தி வேலை செய்யும் வாய்ப்பு அமைவதில்லை. அதே போல் தான், இல்லத்தரசிகளுக்கும் வேலை செய்வதற்கு அனைத்து தானியங்கி சாதனங்கள் வந்துவிட்டதால், அவர்களுக்கும் தேவையான உடற்பயிற்சி கிடைப்பதிலல்லை. இதனால் ஆன விளைவு - உடலில் கலோரியின் அளவு அதிகரிப்பது.

கலோரிகளை எரிக்க வேண்டுமானால், முதலில் அனைவரும் செய்வது ஒரு ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது தானே? ஆனால் கலோரிகளை எரிக்க கடுமையான உடற்பயிற்சியோ அல்லது தினமும் வியர்வை சிந்த உடற்பயிற்சி கூடத்தில் நேரத்தை செலவு செய்ய வேண்டிய அவசியமோ இல்லை. ஏனெனில் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், ஒழுக்கமான உடற்பயிற்சியும் அவசியமான ஒன்று. ஆனால் இதில் உடற்பயற்சி என்றால் ஜிம்மில் மட்டுமே ஈடுபடும் நடவடிக்கைகள் கிடையாது.

ஆகவே இப்போது உடம்பில் இருந்து 200 கலோரிகளை எளிதில் எரிப்பதற்கு சில சுவாரஸ்யமான வழிகளைக் கொடுத்துள்ளோம். அவைகளில் விரும்பியதை தேர்ந்தெடுத்து சரியான பாதையில் செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் கயிறு எப்போதும் வீட்டின் அலமாரியில் தூங்கி கொண்டிருக்கிறதா? அப்படியானால் மறந்து விடாதீர்கள். அதனை உபயோகிக்கும் நேரம் வந்து விட்டது. ஆகவே கால்களுக்கு ஏற்ற நல்ல ஷூக்களை அணிந்து, ஸ்கிப்பிங் கயிற்றை பயன்படுத்தி குதிக்க ஆரம்பியுங்கள். ஏனெனில் ஸ்கிப்பிங் செய்வதால், கலோரிகள் எரிக்கப்படுவதுடன், இதயத்துக்கும் மிகவும் நல்லது.

10-15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தால், 200 கலோரிகளை எரிக்கலாம்.

வீடியோ கேம்ஸ்

வீடியோ கேம்ஸ்

கண்களில் கருவளையங்களை ஏற்படுத்தும் வீடியோ கேம்சை நாள் முழுவதும் விளையாட சொல்லவில்லை. நண்பனை வரவழைத்து ஒரு மணி நேரத்திற்கு வீடியோ கேம்ஸ் விளையாடி, பெருவிரல்களுக்கு வேலை கொடுத்து, வியர்வை வடியும் அளவிற்கு குதித்து விளையாடுங்கள்.

50 நிமிடங்கள் வீடியோ கேம்ஸ் விளையாடினால், 200 கலோரிகளை எரிக்கலாம்.

பசுமை வழி

பசுமை வழி

வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் ஒழுங்காக வெட்டப்படாமல் மற்றும் செடிகள் ஒழுங்கான உருவத்தில் வளர்க்கப்படாமல் உள்ளது என்று ஏன் குறை கூற வேண்டும். சில தோட்டக் கருவிகளை எடுத்துக் கொண்டு, தாமே அந்த வேலையை செய்யத் தொடங்கலாமே! ஏனென்றால் வீட்டைச் சுற்றி செடிகளை வளர்ப்பது, மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

அதிலும் 40 நிமிடங்கள் தோட்ட வேலையில் ஈடுபட்டால், 215 கலோரிகளை எரிக்கலாம்.

செல்லப்பிராணியுடன் உடற்பயிற்சி

செல்லப்பிராணியுடன் உடற்பயிற்சி

வீட்டில் செல்லப் பிராணி இருந்தால், அதனை அருகில் இருக்கும் பூங்காவிற்கு எடுத்துச் சென்று சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி செய்யலாம். வேண்டுமெனில் அத்துடன் ஓடியாடி விளையாடவும் செய்யலாம். இதனால் உடற்பயிற்சி செய்தது போன்று இருப்பதோடு, நாய்களும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

25 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், 190 கலோரிகளை எரிக்கலாம்.

கார்களை கழுவுதல்

கார்களை கழுவுதல்

வீட்டில் இருக்கும் காரையோ அல்லது இரண்டு சக்கர வாகனங்களையோ, நாமே கழுவ முடியும் போது ஏன் அதிக செலவு செய்து பழுது பார்க்கும் மையத்தில் கொடுக்க வேண்டும். எனவே இன்றிலிருந்து வீட்டில் உள்ள வண்டியை நாமே கழுவ ஆரம்பிக்கலாம்.

ஏனெனில் வண்டியை கழுவும் வேலையில் 40 நிமிடங்கள் ஈடுபட்டால், 216 கலோரிகளை எரிக்கலாம்.

இறகு பந்தாட்டம்

இறகு பந்தாட்டம்

நம்மில் பல பேரின் வீட்டு பரணில் அல்லது அலமாரியில் இறகு பந்தாட்ட மட்டைகள் தூங்கி கொண்டிருக்கும். அவைகளை எடுத்து நன்கு குதித்து விளையாடினால், அது தசைகளுக்கு நல்ல பயனை அளிக்கும்.

குறிப்பாக 25 நிமிடங்கள் இறகு பந்தாட்டம் விளையாடினால், 218 கலோரிகளை எரிக்கலாம்.

வீட்டை ஒழுங்குப்படுத்துதல்

வீட்டை ஒழுங்குப்படுத்துதல்

வீட்டில் ஒரு மூலையில் அமர்ந்தபடியே இது சரியில்லை, அது சரியில்லை என்று குறை கூறுவது சுலபம். முதலில் அவ்வாறு சொல்வதை தவிர்த்து, உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து வீட்டை சுத்தப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவது, மிகவும் நல்லது.

வீட்டை ஒழுங்குப்படுத்தும் வேலைகளில் 25 நிமிடங்களில் ஈடுபட்டால், 210 கலோரிகளை எரிக்கலாம்.

படிக்கட்டை பயன்படுத்துங்கள்

படிக்கட்டை பயன்படுத்துங்கள்

உடல் எடைஅ திகம் இருப்பவர்கள், எதற்கெடுத்தாலும் லிப்ட்டை பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். ஏனெனில் தினமும் 30 நிமிடங்கள் படிகளில் ஏறி இறங்கினால், 216 கலோரிகளை எரிக்கலாம்.

விளையாட்டு நேரம்

விளையாட்டு நேரம்

இரவு உணவை முடித்து விட்டு, தொலைக்காட்சி பார்த்து விட்டு, நேராக தூங்க செல்கிறீர்களா? அதற்கு பதிலாக ஏன் ஏதாவது கேரம், செஸ் அல்லது சில மகிழ்ச்சி தரும் விளையாட்டிலோ அல்லது புத்தகம் படிப்பதிலோ அல்லது சிறு அரட்டையிலோ ஈடுபடக்கூடாது.

ஏனென்றால் இவ்வாறு 60 நிமிடங்கள் செய்தால், 200 கலோரிகளை எளிதில் எரிக்கலாம்.

கிரிக்கெட் விளையாடுங்கள்

கிரிக்கெட் விளையாடுங்கள்

பகல் நேரத்தில் வீட்டில் சும்மா உட்கார்ந்து கிரிக்கெட் பார்ப்பதை விட, ஏன் நண்பர்களை அழைத்து அருகில் இருக்கும் மைதானத்திற்கு சென்று, உங்களில் இருக்கும் டெண்டுல்கரை வெளிக் கொண்டு வரக்கூடாது? எனவே இனிமேல் சும்மா இருக்கும் போது, கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்ப், கையுறை போன்ற கிரிக்கெட் சம்பந்தபட்ட பொருட்களை எடுத்து விளையாட கிளம்புங்கள். இது நல்ல உடற்பயிற்சியாக அமையும்.

50 நிமிடங்கள் கிரிக்கெட் விளையாடினால், 210 கலோரிகளை எரிக்கலாம்.

நீச்சல்

நீச்சல்

நீச்சல் உடையை அணிந்து, நீச்சல் குளத்தில் குதித்து குளிக்கலாம். நீச்சல் என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உடலைப் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவும்.

அதிலும் 30 நிமிடங்கள் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால், 215 கலோரிகளை எரிக்கலாம்.

சைக்கிள் ஓட்டுதல்

சைக்கிள் ஓட்டுதல்

சைக்கிளை எடுத்து நன்றாக ஊரை சுற்றலாம். அதிலும் காலையிலோ அல்லது மாலையிலோ சிறிது நேரம் ஓட்டினால், நல்ல பலன் கிடைக்கும். சராசரியாக ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 10-12 மைல் தூரம் சைக்கிள் ஓட்டலாம். அதுவே மலை மீது ஓட்டினாலோ அல்லது வேகமாக ஓட்டினாலோ, இன்னும் அதிக அளவு கலோரிகளை எரிக்கலாம்.

30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால், 210 கலோரிகளை எரிக்கலாம்.

சுத்தப்படுத்துதல்

சுத்தப்படுத்துதல்

வண்டி நிறுத்தும் அறையையோ அல்லது அலமாரியையோ சுத்தப்படுத்தலாம். பலர் வீட்டில் இருக்கும் அவைகளை சுத்தப்படுத்தாமல் பல நாள் அப்படியே போட்டு வைத்திருப்போம். ஏன் அவைகளை சுத்தப்படுத்தி கலோரிகளை எரிக்க கூடாது?

சுத்தப்படுத்தும் பணியில் 25 நிமிடங்கள் ஈடுபட்டால், 210 கலோரிகளை எரிக்கலாம்.

மசாஜ்

மசாஜ்

அழுத்தம் மிகுந்த நாளுக்குப் பின், உடல் முழுவதும் நறுமண எண்ணெய் கொண்டு மசாஜ் செய்துக் கொள்ளலாம். அதுவும் 42 நிமிடங்கள் மசாஜ் செய்தால், 200 கலோரிகளை எரிக்கலாம்.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

நாமே சொந்தமாக ஒரு பயிற்சி முகாமை உருவாக்கலாம். அதில் அணி வகுப்பு, குதித்தல், புஷ் அப் போன்றவைகளில் ஈடுபடலாம். அதிலும் இவை ஒவ்வொன்றையும் 2-3 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

இந்த வகை செயல்பாட்டில் 30 நிமிடங்கள் ஈடுபட்டால், 200 கலோரிகளை எரிக்கலாம்.

சுவர்களுக்கு வண்ணம் பூசலாம்

சுவர்களுக்கு வண்ணம் பூசலாம்

வீட்டு அறைகளின் சுவர்களுக்கு பிடித்த வண்ணத்தில் வண்ணம் பூசுவதாலும், உடம்பில் இருந்து சிறிதளவு கலோரிகள் எரிக்கப்படும்.

வர்ணம் பூசும் வேலையை 40 நிமிடங்கள் செய்தால், 208 கலோரிகளை எரிக்கலாம்.

நடனம்

நடனம்

வீட்டில் சில சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடலாம். அதுவும் துணைக்கு நடனமாடுவதற்கு, குழந்தைகளையும் கணவன்/மனைவியையும் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் நடனம் ஆடும் போது கைகளையும், கால்களையும் அசைத்து, நன்றாக குதித்து, வியர்வை சிந்தும் அளவிற்கு நடனம் ஆட வேண்டும்.

40 நிமிடங்கள் நடனம் ஆடினால், 216 கலோரிகளை எரிக்கலாம்.

கால் பந்து

கால் பந்து

எத்தனை நாட்களுக்கு தான் நண்பர்களை காபி கடைகளில் சந்திப்பீர்கள்? அதற்கு பதிலாக, ஏன் அருகில் இருக்கும் மைதானத்திற்கு சென்று கால் பந்து விளையாடக்கூடாது? இது கலோரிகளை எரிப்பதை தவிர, உறவுகளை வளர்க்கவும் உதவும்.

20 நிமிடங்கள் கால் பந்து விளையாடினால், 192 கலோரிகளை எரிக்கலாம்.

ட்ரெட்மில்

ட்ரெட்மில்

ஆரோக்கியத்தை பாதுகாக்க வாங்கி வைத்திருக்கும் ட்ரெட்மில் உதவி புரியும் என்பதை மறந்து விடக்கூடாது. ஆகவே அதனை தினமும் அதில் நடக்க வேண்டும். அதுவும் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 5 மைல் வேகத்தில் நடக்க வேண்டும்.

இவ்வாறு 20 நிமிடங்கள் நடந்தால், 192 கலோரிகளை எரிக்கலாம்.

வீட்டில் தூசி தட்டுதல்

வீட்டில் தூசி தட்டுதல்

இது ஒரு முடிவில்லா வேலை. வீட்டில் தூசி படியும் போதெல்லாம், இந்த வேலையை செய்தே ஆக வேண்டும். இந்த வேலையில் ஈடுபடும் போது, பிடித்த இசையை கேட்டுக் கொண்டு, மூக்கில் ஒரு துணியை சுற்றிக் கொண்டு, ஏற்ற உடையை மாற்றிவிட்டு தூசி தட்ட ஆரம்பிக்கலாம். எவ்வளவு வேகமாக முடிக்க முடியுமோ, அவ்வளவு வேகமாக முடித்தால் தான், இதய துடிப்பு அதிகரிக்கும். அதுவே கலோரிகளையும் எரிக்க உதவும்.

இந்த தூசி தட்டும் வேலையை 40 நிமிடங்கள் செய்தால், 216 கலோரிகளை எரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 ways to burn 200 calories

Burning calories need not be an intensive training ritual or sweating out in the gym every day. It is true that weight loss requires healthy eating practices and a disciplined routine that comprises of various physical activities. But who said that these activities are constricted to a boring gym only!
Desktop Bottom Promotion