For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹார்மோன்களை கொஞ்சம் கவனியுங்க !

By Mayura Akilan
|

Top 5 Tips For Balancing Hormones Naturally
நமது உடலில் இரண்டு முக்கிய கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. அவை நரம்பு உறுப்புகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள். இவை உடல் உறுப்புகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், ஒருங்கிணைந்த இயக்கங்களுக்கும் காரணிகளாக அமைகின்றன. நாளமில்லா சுரப்பிகளின் ரசாயன மூலக்கூறுகளுக்கு ஹார்மோன்கள் என்று பெயர். இவை உடல் நிலையை சீராக வைத்திருக்க உதவியாக இருக்கின்றன.

ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன் சுரப்பு சரியாக இல்லாதவிட்டால் தைராய்டு பிரச்சினை, வளர்ச்சியில் சிக்கல், செக்ஸ் வாழ்க்கையில் மனக்குழப்பம், பெண்களின் மாதவிடாய் சுழற்றியில் பிரச்சினை போன்றவை ஏற்படுகின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் ஹார்மோன்களின் சுரப்பினை சமநிலையில் வைத்திருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது. உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை "ஐசோபிளாவின்' என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.

பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.

ஒமேகா - 3 கொழுப்பு நிறைந்த நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது.

நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும். கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன. இதுவே ஹார்மோன் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் பழங்களை உட்கொள்வதால் ஹார்மோன் சுரப்பை சமநிலை படுத்தலாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

English summary

Top 5 Tips For Balancing Hormones Naturally | ஹார்மோன்களை கொஞ்சம் கவனியுங்க !

However, more and more women are experiencing hormonal problems in our youth — everything from missed periods, low sex drive, cysts in the breasts and ovaries, infertility, and breast cancer. There are many things we can do nutritionally to prevent and reverse these hormonal disorders.
Story first published: Monday, June 18, 2012, 17:17 [IST]
Desktop Bottom Promotion