For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொட்டாசியம் சத்து வேணுமா? உருளைக்கிழங்கு,வாழைப்பழம் சாப்பிடுங்க!

By Mayura Akilan
|

Banana
மனிதர்களுக்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியம். அதுதான் சக்தி அளிக்கிறது. ஆனால் பொட்டாசியம் சத்து குறைபாட்டினால் பெரும்பாலோனோர் அவதிக்குள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சரிவிகித சத்துணவை உண்ணாத காரணத்தினாலேயே பொட்டாசியம் சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் தசைகளில் வலி, உயர் ரத்த அழுத்தம் போனற்வை ஏற்பட வாய்ப்பிருப்பதாக உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் பாதிப்பின்றி இருக்க சரிவிகித உணவு, உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக ஆரோக்கியத்துக்கு ஆதாரமாக இருப்பது அனைத்து வைட்டமின்களும் சத்துகளும்தான். எனினும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால் உருளைக்கிழங்கில் அதிக அளவு பொட்டாசியம் சத்துள்ளதால் இது மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரும் பங்கு வகிப்பதை சமீபத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, காய்கறி, பழங்களிலேயே உருளை கிழங்குதான் ராஜா என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சமீப காலமாக உலகம் முழுவதும் ஏராளமானோர் பொட்டாசியம் சத்து குறைபாட்டால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உருளை கிழங்கு இந்த குறைபாட்டை எளிதாக போக்கும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஒரு நாளைக்கு மனிதனுக்கு சுமார் 4700 மி.கி. பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. காய்கறிகள், பழங்களுடன் ஒப்பிடும் போது உருளையில் இந்த சத்து அதிக அளவு உள்ளது மருத்துவர்களின் அறிவுரைப்படி இதை உண்ணலாம்என்கின்றனர். அதை விட உருளை கிழங்கு சாப்பிடுவதால் பக்க விளைவோ பாதிப்போ இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதேபோல் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமுள்ளது. அதேபோல் கூஸ்பெர்ரி, பீட்ரூட், உருளைக்கிழங்கு, செலரி, மிலன், வெள்ளைப்பூண்டு, புருக்கோலி, கீரைகள், இளநீர், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி போன்ற சைவ உணவுகளில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. அதேபோல் மீன், மட்டன் போன்ற அசைவ உணவுகளிலும், பால் பொருட்களிலும் பொட்டாசியம் காணப்படுகிறது இவற்றை சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியம் சத்தினை சரியான அளவில் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

English summary

Reasons Why You Have Low Potassium Levels | பொட்டாசியம் சத்து வேணுமா? உருளைக்கிழங்கு,வாழைப்பழம் சாப்பிடுங்க !

Potassium is an important nutrients that the body needs everyday. Deficiency in potassium is hard to identify as it doesn't have a specific symptom. Only a blood test can reveal that you are low in potassium.
Story first published: Friday, June 8, 2012, 10:43 [IST]
Desktop Bottom Promotion