உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான படிகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.
இப்போது உடல் எடையை குறைப்பதற்கான படிகள் என்னவென்று பார்ப்போமா!!!
குறைவான உணவு
உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்கான உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.

































