For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினம் ஒரு 'கப்' தக்காளி சூப் – கிடைக்குமே 'சூப்பர் எபெக்ட்'!!

By Mayura Akilan
|

Fertility
ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.

ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

லைகோபின் சக்தி

போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினம் ஒரு கப் தக்காளி சூப் இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஆய்விற்குட் படுத்தப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருந்தது இது ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது.

தினம் ஒரு கப் சூப்

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த" புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..

சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் - அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் - வராம தவிர்க்கலாம்ல..

English summary

Bowl of tomato soup a day 'boosts fertility' | தினம் ஒரு 'கப்' தக்காளி சூப் – கிடைக்குமே 'சூப்பர் எபெக்ட்'!!

A bowl of tomato soup every day can help boost fertility among men, scientists claimed yesterday. They have discovered that lycopene, which gives tomatoes their bright red colouring, can turn sperm into super-sperm.
Story first published: Tuesday, January 31, 2012, 11:35 [IST]
Desktop Bottom Promotion