For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டயட்-ல இருக்கும் போது நட்ஸையும் சேர்த்துக்கோங்க...

By Maha
|

தற்போதைய காலத்தில் உடல் எடை அதிகமாக உள்ளதால், டயட்டில் இருப்போர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஏனெனில் இன்றைய காலத்தில் ஓடியாடி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரின் முன்னாடி உட்கார்ந்து, ஸ்நாக்ஸ் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இவ்வாறு உட்கார்ந்தே அனைத்து வேலைகளையும் செய்வதால், உடல் எதற்கும் வளையாமல், அனைத்து நோய்களும் அழையா விருந்தாளி போல வந்து உடலில தங்கிவிடுகின்றன.

மேலும் அவ்வாறு டயட் மேற்கொள்ளும் போது உண்ணும் உணவிலாவது ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதை சாப்பிடுகிறோமா என்று பார்த்தால், அதுவும் இல்லை. டயட் என்ற பெயரில், நிறைய ஆரோக்கியமற்ற உணவுகளைத் தான் அதிகம் சாப்பிடுகிறோம். ஆகவே உடல் எடையை குறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளில், காய்கறிகள் மற்றும் பழங்களோடு, ஒரு சில உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நட்ஸ்களையும் டயட்டில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

இப்போது அவ்வாறு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நட்ஸ்களில் ஒரு 5 நட்ஸ்களின் பயன்களைப் பார்த்து, அவற்றையும் டயட்டில் சேர்க்கலாமா!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வால்நட்

வால்நட்

வால்நட்டை அதிக அளவில் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இதில் உள்ள ஒமேகா-3 கேட்டி ஆசிட், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். அதிலும் இதனை பெண்கள் மாதவிடாயின் போது சாப்பிட்டால், அந்த நேரத்தில் மாதவிடாயினால் மனநிலை சற்று சோர்ந்திருப்பது சரியாகிவிடும்.

முந்திரி

முந்திரி

முந்திரிப்பருப்பில் அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் உள்ளது. இது மூளையின் சக்தியை அதிகரிக்கும். எப்படியெனில் இதில் உள்ள இரும்புச்சத்து மூளைக்கு இரத்தத்தை சீராக செலுத்தும். அதுமட்டுமல்லாமல், முந்திரி இரத்த சம்பந்தமான நோயை சரிசெய்யும்.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கு விரைவில் புற்றுநோய் வரும். ஆகவே அத்தகையவர்கள் பிரேசில் நட்ஸை சாப்பிட்டடு வந்தால், அதில் உள்ள செலீனியம் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை எதிர்த்து போராடி, அவற்றை உடலில் வராமல் தடுக்கும். முக்கியமாக புரோடெஸ்.ட புற்றுநோயை வராமல் தடுக்கும்.

பாதாம்

பாதாம்

எப்போதுமே இளமையுடன் காட்சியளிக்க வேண்டும் என்று இருப்பவர்கள், பாதாமை சாப்பிட்டால் இளமையுடன் காட்சியளிக்கலாம். ஏனெனல் பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை டயட்டில் சேர்த்தால், குடலியக்கம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

ஹேசில் நட்ஸ்

ஹேசில் நட்ஸ்

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நட்ஸ் என்றால் அது ஹேசில் நட்ஸ் தான். இதன் நறுமணம் காபி போன்ற இருப்பதோடு, நிறைய பலன்களையும் உள்ளடக்கியுள்ளது. ஏனெனில் இதில் உள்ள அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு, மாரடைப்பு, தசைபிடிப்பு போன்றவற்றை சரிசெய்யும் தன்மையுடையது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Nuts To Have In Your Diet | டயட்-ல இருக்கும் போது நட்ஸையும் சேர்த்துக்கோங்க...

If you want to go on a nuts diet then just include these healthy nuts in your food chart. Here are 5 different types of nuts and the special nutritional benefits of them.
Story first published: Monday, October 22, 2012, 17:54 [IST]
Desktop Bottom Promotion