For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை கட்டுப்படுத்தும் பீர் – ஆய்வில் தகவல்!

By Mayura Akilan
|

Drink Beer Lose Weight
பீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பீரானது உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு, நீரிழிவு மற்றும் இதயநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக அந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

மது உடலுக்கு கேடு என்று விளம்பரம் செய்யப்படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி பருகும் உற்சாக பானமான பீர் உடல் எடையை குறைப்பதோடு நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கிறதாம்.

ரத்த அழுத்தம் இல்லை

ஸ்பானிஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 57 வயதிற்கு மேற்பட்ட 1249 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தினமும் மிதமான அளவு பீர் உட்கொண்டவர்கள் உடல் எடை குறைவாகவும், குண்டாகமலும் இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் தாக்கப்படாமல் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

உடல் எடை குறைகிறது

20000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் மிதமாக பீர் குடித்த பெண்களின் உடலில் கொழுப்பு சேராமல் உடல் பிட்டாக இருந்தது தெரியவந்தது. குண்டாக இருந்த பெண்கள், பீர் குடித்த பின்னர் உடல் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதயநோய் பாதிப்பு

அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ஒயின் மற்றும் பீர் குடிக்கும் 2 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் மிதமான அளவு பீர் குடித்து வருபவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு குறைந்து இருந்தது. அதாவது 31 சதவீதம் பேர் இருதய நேய் பாதிப்பு ஏற்படாமல் இருந்தனர். இதற்கு ரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் நோய் ஏற்படாததே காரணம் என கூறப்படுகிறது.

அதிகம் குடித்தால் ஆபத்து

பீர் பானத்தில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. இதனால் அதை குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலை உடல் குறைந்த அளவில் மட்டும் எடுத்து கொள்கிறது. இதனால் குறைந்த அளவில் பீர் குடித்தால் இருதய நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால் பாதிப்பு ஏற்படும் என மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுக்காக, பெரிய 'பீர்பாலாகி' விடாதீர்கள், தொப்பை எக்குத்தப்பாக வந்து விடும்!

English summary

Drink beer lose weight | உடல் எடையை கட்டுப்படுத்தும் பீர்!

Beer is good for a whole lot of reasons and now we are about to learn beer is the solution to losing weight as well. It's the best excuse ever to drink more beer: Suds can help you to lose weight. It's not exactly a beer-based diet, but a new study finds that people who enjoy a couple of brews a day (or night) as part of a healthy lifestyle aren't more likely to gain weight.
Story first published: Wednesday, December 21, 2011, 17:27 [IST]
Desktop Bottom Promotion