For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுகர் ஃப்ரீ மாத்திரைகளால் உண்டாகும் பக்கவிளைவுகளைப் பற்றி தெரியுமா?

|

சர்க்கரை வியாதி உள்ளவர்களும், உடலை கட்டுக்கோப்போடு வைக்க நினைப்பவர்களும் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்துக் கொள்வார்கள்.

இது குறைவான சக்தியை கொடுப்பதாலும், குளுகோஸின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யாது என்பதற்காகவும்தான் இந்த செயற்கை இனிப்பை பயன்படுத்துகிறார்கள்.ஆனால் அதன் பக்கவிளைவுகளைப் பற்றி சமீப காலமாக நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள்.

Side effects of artificial sweetener

கூடுதலாக, அந்த மாத்திரைகளை சாப்பிடுவதால், இன்னும் பசியை தூண்டு, உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறுகின்றார்கள் மருத்துவர்கள்.

சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட்டால், நமது மூளை அமைப்பு, இது போதிய சக்தை உடலுக்கு தரவில்லையென, ஹார்மோன்களை தூண்டி, பசியெடுக்கச் செய்கிறதாம்.

இதனை சோதனை எலிகளுக்கும், பறக்கும் பூச்சிகளுக்கும் நடத்தப்பட்டது. இதில் சுகர் ஃப்ரீ மாத்திரைகளிலுள்ள செயற்கை தயாரிப்பான சுக்ரலோஸ் என்ற இனிப்பு, எலிகளுக்கு பசியை அதிகம் தூண்டியிருக்கிறது.

இதனால் இவைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக உணவை உட்கொண்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக் கழகத்திலுள்ள உதவி பேராசிரியர் க்ரேக் நீலி கூறியிருக்கிறார்.

கலோரி அளவினை கூட்டும் சர்க்கரையின் அளவு குறைவதால் , சக்தி குறைகிறது. இதனால் தனிச்சையாக மூளை சக்தி கிடைப்பதற்காக அதிக உணவை உண்ணச் சொல்லி பசியை தூண்டுகிறது என்ரு மேலும் நீலி கூறுகிறார்.

இனிப்பிற்கும் சக்திக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் இந்தசுகர் ஃப்ரீ மாத்திரைகள் இந்த இரண்டிலும் சம நிலை செய்யத் தவறுவதால்தான் , கலோரி அளவை மூளையானது அதிகரிக்கச் செய்கிறது.

பறக்கும் பூச்சிகளுக்கும் அந்த வகையில் இந்த செயற்கை இனிப்புகளை கலந்து 5 நாட்களுக்கு உண்ண கொடுக்கப்பட்டது. பின் இயற்கையான இனிப்பு வகைகளை உண்ண அளிக்கும்போது, அவை வழக்கத்திற்கு மாறாக 30 % அதிகமான கலோரி கொண்ட உணவுகளை உண்டதாக ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் எலிகளுக்கும் இதே முறையில் செயற்கை 7 நாட்களுக்கு கொடுத்தார்கள். பறக்கும் பூச்சிகளைப் போலவே இவைகளும் மிக அதிகமாக உணவுகளை உன்ண ஆரம்பித்தது.

மேலும் இந்த ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், செயற்கையான இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், இன்சோம்னியா என்ற தூக்கமின்மை வியாதி ஏற்பட வாய்ப்புண்டு மற்றும் ஹைபர் ஆக்டிவிட்டியை தூண்டும். இதனால் போதிய சக்தி குறைந்து பலஹீனம் ஏற்படும்.

English summary

Side effects of artificial sweetener

Side effects of artificial sweetener
Story first published: Tuesday, July 19, 2016, 18:33 [IST]
Desktop Bottom Promotion