For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் நலனுக்காக புதிய ஆட்டத்தை துவங்கியிருக்கும் சச்சின்!

|

கிரிக்கெட்டில் இருந்து விடைப்பெற்றாலும் கூட இன்றளவும் ரசிகர்களின் மனதைவிட்டு ஒருநாளும் சச்சின் விடைப்பெற்றது இல்லை. தன் ரசிகர்களுடனும், தான் விரும்பும் கிரிக்கெட்டை விட்டும் விலகிவிடக் கூடாதென, கிரிக்கெட் ஸ்டார்களை இணைத்த புதிய தொடரை துவக்கினார் சச்சின்.

ஆனால், இப்போது பொதுமக்களின் உடல்நலத்தின் மீது அக்கறைக் கொண்டு அவர் களமிறங்கி இருக்கும் மைதானம் மருத்துவம். இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்க தான், தன் கையை உயர்த்தியுள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் சச்சின்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவை அழிக்க

நீரிழிவை அழிக்க

உலக அளவில் மிக பயங்கரமான ஒன்றாக மாறி வருகிறது நீரிழிவு நோய். மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் உணவுமுறை மாற்றங்கள் தான் இதற்கு பெரும் காரணியாக இருக்கிறது.

நீரிழிவு பாதுகாப்பு நிறுவனம்

நீரிழிவு பாதுகாப்பு நிறுவனம்

நோவோ நார்டிஸ்க் (Nova Nordisk) என்ற உலகின் முன்னணி நீரழிவு பாதுகாப்பு நிறுவனத்தோடு இணைந்து "நீரிழிவை அகற்றுவோம்" (Changing Diabetes) என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பிராண்டு அம்பாசிடராக நியமனம் ஆகியுள்ளார் சச்சின்.

6.9 கோடி

6.9 கோடி

சென்ற ஆண்டு நடத்திய ஆய்வின் படி ஐந்து கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கு காண்பிக்கப்பட்டது. ஆனால், இது இப்போது 6.9 கோடியை எட்டியுள்ளது என தெரிய வருகிறது.

சாதனையா, வேதனையா?

சாதனையா, வேதனையா?

கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுப்பது தான் சாதனை. நீரிழிவு பாதிப்பில் அதிகம் ஸ்கோர் எடுப்பது வேதனையானது. மக்கள் தங்கள் உடல்நலம் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இனியும் நேரம் தாழ்த்துவது நல்லதல்ல.

சச்சின் பேசுகையில்...

சச்சின் பேசுகையில்...

தன் மனைவி ஒரு மருத்துவர் என்பதால், அவர் அடிக்கடி மக்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சனை பற்றி கலந்துரையாடுவார். இப்போதுள்ள பெரும்பாலான மக்களுக்கு தங்கள் உடல்நலத்தின் மீது பெரிதாக அக்கறை இல்லை என்று தான் கூற வேண்டும்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மக்கள் நல்வாழ்வு குறித்த இப்படி ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் என்னை இணைத்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக இறங்கி வந்து சேவை செய்ய நான் மனம் மகிழ்கிறேன் என்றும் சச்சின் கூறினார்.

மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்

மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்

நல்வாழ்வு என்பது நோயற்ற வாழ்க்கை தான். எனவே, மக்கள் அவ்வப்போது உங்கள் உடல்நலன் குறித்து பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தை விட நீங்கள் பெரியதாய் அக்கறை செலுத்த வேண்டியது வேறொன்றும் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் சச்சின் கூறினார்.

நீரிழிவு பாதிப்புகள்

நீரிழிவு பாதிப்புகள்

மூளை மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும், கண்பார்வை குறைபாடு, சிறுநீரக செயல்திறன் குறைபாடு மற்றும் நரம்பு மண்டலம் வலுவிழப்பு என நீரிழிவு நோயால் நிறைய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sachin Bats On New Pitch

Former Indian cricket batsman Master Blaster Sachin now pads up to bats on new pitch for public awareness.
Desktop Bottom Promotion