For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கண்பார்வை இழக்க நேரிடுகிறது?

|

டயாபடிக் ரெடினோபதி என்ற கண் பார்வை கோளாறைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது பாத்திருப்பீர்கள் அல்லது சந்தித்திருப்பீர்கள். கண்களில் திசுக்கள் வளர்ந்து அதனால் கண்பார்வை இழக்கவும் நேரிடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களில் ஒரு சிறிய புரோட்டின் உருவாகி கண்களில் இருக்கும் இரத்தக் குழாயை பாதிக்கச் செய்கிறது. விளைவு கண்பார்வை பறிபோதல்.

 A protein causes for blindness for Diabetic

உலகளவில் சர்க்கரைவியாதியால் கண்பார்வையற்றவர்கள் 1 சதவீதம் உள்ளார்கள். அதுவும் 40 வயதிலுள்ளவர்களுக்கும் இந்த ரெட்டினோபதியும், கூடவே குளுகோஸ் அளவு ஏற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று அமெரிக்காவிலுள்ள இண்டியான ஆப்தோமெட்ரி பக்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் தாமஸ் கூறியுள்ளார்.

கண்களிலுள்ள சிறிய நாளங்கள் ரெட்டினாவிற்கு ஆக்ஸிஜனை அனுப்புகின்றன. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நாளங்கள் பாதிப்படைந்து, ஆக்ஸிஜனை கசிகின்றன.

இதனால் ரெட்டினாவை சுற்றியுள்ள திரவபகுதிகள் வீக்கமடைந்து பார்வை திறனை குறைக்கின்றன. இதனால்தான் டயாபடிக் ரெட்டினோபதியின் அறிகுறி இருப்பவர்களுக்கு சரியாக படிக்க முடிவதில்லை.

பொதுவாக நாளங்கள் பாதிப்படைந்தால், ஆக்ஸிஜன் போதிய அளவு ரெட்டினாவிற்கு அனுப்பப்படுவதில்லை. ரத்த ஓட்டம் குறைவதால், உடனே VEGF என்ற புரோட்டின்உற்பத்தி ஆகிறது.

இது கண்களிலுள்ள நாளங்களை ரிப்பேர் செய்து, பாதிப்பை சீர் செய்பவை. ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சீர் செய்வதற்கு பதிலாக அந்த புரொட்டின் திசு அங்கேயே தங்கி, வளர்கிறது. இதுவே கண்பார்வையை குறைக்கிறது.'

ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு , கண்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், VEGF என்ற திசு உற்பத்தி அதிகமாகி, நாளங்களில் வளர்கிறது. இதான் கண்பார்வைத் திறன் இழக்க நேரிடுகிறது.

English summary

A protein causes for blindness for Diabetic

A protein causes for blindness for Diabetic
Story first published: Wednesday, July 27, 2016, 9:28 [IST]
Desktop Bottom Promotion