சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா?

Subscribe to Boldsky

வேர்க்கடலை விலை மட்டும்தான் குறைவானது. ஆனால் அதிலுள்ள சத்துக்கள் அபாரமானது. நிறைய புரதம் நிறைந்த ஒரு உணவுப் பொருள்.

பொதுவாக வேர்க்கடலை அதிக கொழுப்பு உள்ளது. எனவே உடல் பருமனாகிவிடும். சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது என சொல்வார்கள். இதைப் பற்றி உண்மை என்ன என தெரிந்து கொள்ளலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதய நோய்?

வேர்க்கடலையில் நல்ல கொழுப்புகள் தான் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் இதய நோய் அல்லது ரத்த அழுத்தம் அதிகமாகும் என பரவலாக சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையில் வேர்க்கடலை சாப்பிட்டால் இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் வருவது குறைக்கப்படுகிறது என ஜாமா ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சியை சமர்ப்பித்துள்ளது.

 

சர்க்கரை வியாதி :

வேர்க்கடலை சாப்பிடுவதால் குளுகோஸ் அளவு ரத்தத்தில் அதிகமாவதில்லை. மிகக் குறைவாகவே குளுகோஸ் அளவு அதிகரிக்கிறது.

அதோடு இதில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டால் நன்மைகளே தருகிறது.

 

ரத்த அழுத்தம்?

பொதுவாக உணவு சாப்பிட்டபின் குளுகோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால் வேர்கக்டலை சிறிது சாப்பிட்டால், உணவிற்கு பின்னும் குளுகோஸ் அளவு குறையச் செய்ய முடியும். அதோடு சோடியம் அளவையும் கட்டுப்படுத்துவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

உடல் எடை குறையும் :

வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது என ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷன் என்ற மருத்துவ இதழ் கூறியிருக்கிறது.

அதோடு பசியின்மையை ஏற்படச் செய்யும். குறைவாக சாப்பிட்டாலெ வயிறு நிறைந்துவிடும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்வை சாப்பிட தூண்டாது.

இதனை ஸ்நேக்ஸாக குழந்தைகளுக்கு தரும்போது உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

 

புற்று நோய் :

வேர்க்கடலை புற்று நோய் உருவாவதை தடுக்கிறது. மார்பக புற்று நோய், மலக் குடல் ஆகியவற்றை வராமல் காக்கின்ரன. புற்று நோய் செல்களையும் அழித்து மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் ஆற்றலுள்ள உயிர் வேதிப் பொருட்கள் வேர்க்கடலையில் உள்ளது.

வேர்க்கடலையை எப்படி சாப்பிடலாம் :

வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து சாப்பிட வேண்டாம். அதனை அவித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.அதேபோல் அதிலுள்ள சன்னமான தோலை நீக்காமல் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அதில்தான் அதிக சத்துக்கள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Health benefits of pea nut

health benefits of eating peanuts for diabetes
Story first published: Thursday, September 29, 2016, 14:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter