For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை வியாதிக்கு சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

|

40 வயதிற்கு மேல் என்றாலே முந்தைய காலத்தில் கண்ணாடி போடுவது போல், இப்போது டைப்- 2 சர்க்கரை வியாதியும் வருவது சகஜமாகி விட்டது. கண் பார்வையை விட மிக மோசமானது இந்த மரபு மாற்ற வியாதி.

Foods to eat for Type 2 Diabetes

டைப் 2 சர்க்கரை வியாதியில் இன்சுலின் ஹார்மோன் போதுமான அளவு சுரக்காமல் இருக்கும் அல்லது சரியான நிலையில் இயக்கப்படாமல் இருக்கும். இது டைப்- 2 டயாபடிஸ் என்று கூறப்படுகிறது. இன்சுலின் சுரப்பை தூண்டும் வகையில் உணவினை உட்கொள்ள வேண்டும். அது போல் அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை வியாதி ஆபத்தான வியாதிதான். பல பிரச்சனைகளை கொண்டு வரும். ஆனால் சர்க்கரையின் அளவை கட்டுக்கோப்போடு வைத்துக் கொண்டால் ஆரோக்கியத்தோடு வாழலாம். அதனை உணவினை கொண்டு மட்டுமே கட்டுக்குள் வைக்க முடியும் . என்னென்ன உணவு என பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்பிட வேண்டியவை உணவுகள் :

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

வெங்காயம் :

முருங்கைக் கீரையின் தினமுமுணவில் சாப்புட்டு வரலாம். வெங்காயம் இன்சுலினை தூண்டி விடும் பணியை செய்கிறது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

பாகற்காய் :

பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

வெந்தயம் :

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப் படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

நீர்சத்து காய்கறிகள் :

கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கி, புடலங்காய், பலாக்காய்,காலிபிளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை சாப்பிடலாம்

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

சாப்பிட வேண்டியவை உணவுகள் :

பழங்கள் :

ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரிப் பழம், கொய்யாப் பழம் ஆகியவை சாப்பிடலாம்.

 சாப்பிடக்கூடாத உணவுகள் :

சாப்பிடக்கூடாத உணவுகள் :

வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால் குளுகோஸின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

 சாப்பிடக்கூடாத உணவுகள் :

சாப்பிடக்கூடாத உணவுகள் :

பழங்கள் :

பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த திராட்சை போன்ற உலர் பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா, சீதா பழம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

 சாப்பிடக்கூடாத உணவுகள் :

சாப்பிடக்கூடாத உணவுகள் :

மது, சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், கற்கண்டு, முந்திரி ஆகியவற்றையும் சாப்பிடக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods to eat for Type 2 Diabetes

Foods to eat for Type 2 Diabetes
Story first published: Wednesday, September 7, 2016, 16:04 [IST]
Desktop Bottom Promotion