உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா என அக்குள் பகுதியை பார்த்து எப்படி தெரிந்து கொள்வது?

சர்க்கரை வியாதி ஆபத்தான ஒர் மரபணு கோளாறு. இது பலவகையில் உயிருக்கு ஆபத்தை தரும் நோயாகும். வராமல் காக்க, இங்கிருக்கும் பல வழிகளை முன்னெச்சிரிக்கையாக எடுத்துக் கொண்டு பின்பற்றுங்கள்.

Written By:
Subscribe to Boldsky

இந்தியாவில் அதிகம் தாக்கப்படும் வியாதி எது தெரியுமா? சர்க்கரை வியாதிதான். அதுவும் 40 வயது ஆரம்பத்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது.

சர்க்கரை வியாதி ஒருமுறை வந்தால் அவ்வளவுதான். இறுதி வரை குணப்படுத்த முடியாது. அது மட்டுமல்லாமல் இது தொடர்சங்கிலி போல.

8 common risk factors of Type 2 Diabetes

பல ஆபத்தான நோய்களான இதய நோய்கள், பக்க வாதம், போன்றவ்ற்றிற்கு காரணமாகிறது. ஆகவே வருமுன் காத்திடுங்கள். உங்களை சர்க்கரை வியாதி தொடாமல் இருக்க இந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும்??

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும்??

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை வியாதி இருக்கிறதா என முதலில் கேட்டு தெரிந்து கொள்வதுதான் முதல் பணி. அதன் பின் நீங்கள் உங்களுக்கு வராமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? முன்னெச்செரிக்கையாக உங்கள் உணவில் கட்டுப்பாடு கொண்டு வருவதுதான்.

உங்கள் வயது என்ன?

உங்கள் வயது என்ன?

உங்களுக்கு வயது 40 ஐ தொடங்கி விட்டதா? அப்படியென்றால் உங்கள் வாழ்க்கை முறையை கட்டாயம் இப்போதிருந்து மாற்ற வேண்டும்.

உடல் உழைப்பு, காய்கறிகள், நேரம் தவறாமல் சாப்பிடுவது என இருந்தால் சர்க்கரை வியாதி உங்களிடம் நெருங்காது. குறிப்பாக அதிக இனிப்பு துரித உணவுகளை கைவிடுங்கள்.

கர்ப்பத்தின் போது சர்க்கரை வியாதியா?

கர்ப்பத்தின் போது சர்க்கரை வியாதியா?

கர்ப்ப காலத்தில் உங்களுக்கு சர்க்கவியாதி வந்திருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உங்களுக்கு ஜீன் குறைபாடு இருக்கிறது. மீண்டும் நிரந்தரமாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெரிய குழந்தை பிறந்ததா?

பெரிய குழந்தை பிறந்ததா?

உங்களுக்கு பிறந்த குழந்தை 4. 5 கிலோவிற்கும் அதிகமாக பிறந்தால் , பிற்காலத்தில் உங்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என் மருத்துவம் கூறுகின்றது.

ஹைபோதைராய்டு :

ஹைபோதைராய்டு :

தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அதனை சுரக்க தூண்டும் ஹார்மோன் -TSH அளவு அதிகமாக இருக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உள்ள பிரச்சனை கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தைராய்டு குறைபாடு இருப்பாவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் உண்டு.

PCOS எனப்படும் கருப்பை நீர்க்கட்டி :

PCOS எனப்படும் கருப்பை நீர்க்கட்டி :

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, மாதவிடாயையும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனிலும் சீரற்ற நிலையை உண்டாக்கும். இதன் காரணமாக சர்க்கரை வியாதி உருவாக வாய்ப்புகள் உண்டு.உடனடியாக இந்த பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

அக்குள் பகுதி :

அக்குள் பகுதி :

உங்கள் அக்குள் பகுதியில் கருப்பாக மடிப்புகள் இருந்தால் அவை சர்க்கரை வியாதியின் அறிகுறியாகும். இது ஒரு சரும கோளாறு. அக்குள் பகுதில் உருவாகும்.

அக்குள் பகுதியில் உள்ள அந்த கருப்பு மடிப்பு வெல்வெட் போல் மிருதுவாகவும் கெட்டியாகவும் இருக்கும்.

குளுடன் அலர்ஜி :

குளுடன் அலர்ஜி :

சிலருக்கு கோதுமையிலுள்ள குளுடன் அலர்ஜியை உண்டாக்கும். அவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 common risk factors of Type 2 Diabetes

8 common risk factors of Type 2 Diabetes
Story first published: Wednesday, December 14, 2016, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter