சர்க்கரைவியாதி இருப்பவர்கள் ஏன் வருடத்திற்கு ஒருமுறை சிறு நீரக பரிசோதனை செய்ய வேண்டுமென தெரியுமா?

சிறுநீரகம் இல்லையென்றால் உண்மையில் உங்கள் அருகில் எவரும் நிற்க முடியாது. காரணம் கழிவுகள் உடலிலேயே தங்கி விடும். நாளடைவில் உடல் உறுப்புகள் அழுகிவிடும். சிறுநீரகம் செயலிழப்பதன் அறிகுறிகள் தெரியுமா?

Subscribe to Boldsky

சிறு நீரகம் உங்கள் கழிவுகளை, கொடிய நச்சுக்களை, கிருமிகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. உடலுக்கு தேவையான கால்சியம் சோடியம் ஆகிவற்றை வெளியேற்றாமல் உடலுக்குள் மீண்டும் மறு சுழற்சிக்கு அனுப்புகிறது.

6 signs that your kidney might be failing

சர்க்கரைவியாதி மற்றும் அதிக உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிறு நீரகம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குதான் சிறு நீரகம் பழுதடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடல் வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு :

யூரியா மற்றும் பல கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றபடவில்லையென்றால், உடலிலேயே தங்கிவிடும். இதனால் அவை திசுக்களில் தங்கி பாதம் மற்றும் உடலில் வீக்கத்தை உண்டாக்கி விடும். உடல் எடையும் அதிகரிக்கும்.

வழக்கத்தை விட சிறு நீர் குறைவாக வெளியேறுதல் :

உடலிலுள்ள திரவம் அடர்த்தி அதிகமாகிவிடுவதால் அவற்றை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீர் சிறிது சிறிதாக வெளிப்படும்.

சோர்வாக காணப்படுதல் :

சிறு நீரகம் ஹீமோ குளோபின் அளவை சரியாக ஓழுங்குபடுத்தும். ஆனால் சிறு நீரக செயலிழப்பிற்கு பிறகு ரத்த சோகை உண்டாகி, எப்போதும் சோர்வாகவும், தூக்கம் வருவது போலவும் இருக்கும்.

பசியின்மை, குமட்டல் :

உடலில் வளர்சிதை மாற்றமும், ஜீரண மண்டலமும் பாதிக்கப்படுவதால் பசி உண்டாகாது. அதோடு குமட்டலும் உண்டாகும்.

ரத்தக் கொதிப்பு :

சிறு நீரக செயலிழந்த பின் ரத்தக் கொதிப்பை கட்டுக் கொண்டு வைக்க முடியாது. உடலில் ஒரு ஒழுங்கின்மை உண்டாகி, ரத்த கொதிப்பு அதிகமாகிவிடும்.

இதய துடிப்பு :

ரத்த கொதிப்பு அதிகமாகும்போது இதய துடிப்பு அதிகமாகிவிடும். இதயத்திற்கு தேவையான ரத்தம் சரியாக பம்ப் செய்ய திண்றும்போது, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

6 signs that your kidney might be failing

signs you must know that your kidney might be failure
Please Wait while comments are loading...
Subscribe Newsletter