For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???

By John
|

இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் பரம்பரை நோய் என்றும், தாய் தந்தைக்கு இருந்தால் தான் குழந்தைகளுக்கு ஏற்படும் என்றும் கருதப்பட்டு வந்த நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய், இன்று பரவலாகவும், மிக சாதாரணமாகவும் ஏற்படும் நோய் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

இதற்கு உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் டயட் தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆயினும் கூட உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியருக்கு மட்டும் பெருமளவில் இதன் பாதிப்பும், அபாயங்களும் இருப்பது ஏன்???

இந்திய ஆண்கள் 20 வயதை கடக்கும் போது பெண்களிடம் அதிகம் விரும்பும் சில விஷயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக மக்களோடு ஒப்பிடுகையில்

உலக மக்களோடு ஒப்பிடுகையில்

உலகின் வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் நடுத்தர மக்களுக்கு தான் அதிக அளவில் டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறதாம். இது மட்டுமின்றி, இதயக் கோளாறுகள், உடல் பருமனும் கூட இந்திய நடுத்தர மக்களுக்கு தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்று ஓர் சமீபத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செல் மெட்டபாலிசம் (Cell Metabolism) ஆய்வு பத்திரிக்கை

செல் மெட்டபாலிசம் (Cell Metabolism) ஆய்வு பத்திரிக்கை

செல் மெட்டபாலிசம் எனும் ஆய்வு பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அறிக்கையில், வரும் 2030 ஆண்டுகளில் உலகிலுள்ள மொத்த நீரிழிவு நோய் சதவீதத்தில் 70% பேர் வளரும் நாடுகளில் வாழும் தனி நபர்களாக தான் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

 உலக சுகாதார அமைப்பின் கருத்து

உலக சுகாதார அமைப்பின் கருத்து

உலக சுகாதார அமைப்பான WHO தனது கருத்தில், "வரும் 2030 ஆண்டில், உலகில் மொத்தம் 80 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று கூறியிருக்கிறது. இதில் 70% பேர் வளரும் நாடுகளில் வாழும் தனி நபர்களாக இருப்பார்கள்.

சிட்னி பல்கலைகழகம்

சிட்னி பல்கலைகழகம்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிட்னி பல்கலைகழகம், " நமது முன்னோர்களிடத்தில் இருந்த அளவு ஊட்டச்சத்து, தற்போதைய மக்களிடையே இல்லாததே இதற்கு காரணம்" என்று கூறியிருக்கிறது.

 புனேவின் மருத்துவ கல்லூரி

புனேவின் மருத்துவ கல்லூரி

மற்றும் புனேவில் இருக்கும் டி.ஒய்.பி மருத்துவ கல்லூரியும், " நமது முன்னோர்கள் இடத்தில் இருந்த அளவு ஊட்டச்சத்து, நமது உடலில் இல்லை என்றும், இதற்கு காரணம் நமது உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் டயட். வளரும் நாடுகளில் இருக்கும் மக்களுக்கு போதுமான அளவு ஊட்ச்சத்து கிடைப்பதில்லை, இதனால் ஏற்படும் வாழ்வியல் முறை மாற்றங்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களும் இதற்கு காரணமாக இருக்கிறது" என அவர்கள் கூறியிருக்கின்றனர்.

உணவுப் பழக்கங்களில் மாற்றம்

உணவுப் பழக்கங்களில் மாற்றம்

வளரும் நாடுகளில் செழிப்பும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திடீரென அவர்களது உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்களும், அவர்கள் டயட்டில் செய்யும் மாற்றங்களும் இதற்கு காரணமாக இருக்கிறது. அதாவது, நம் பூமியில் காய்க்கும் காய்கறி, பழங்கள் தான் நம் உடலுக்கு உகந்தது. திடீரென, வெளிநாட்டுள் பழங்கள், இறக்குமதி செய்த உணவுகள் போன்றவற்றை உட்கொள்ளும் போது இந்த விளைவுகள் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

உடல் பருமன்

உடல் பருமன்

இந்த உணவுப் பழக்க மாற்றத்தினால் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. மற்றும் இதன் விளைவினால் நீரிழிவு நோய் பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகமாகிறது என்று கூறுகிறார்கள்.

12 வருட ஆய்வு

12 வருட ஆய்வு

சிட்னி பல்கலைகழகத்தில் ஆனந்வர்தன் ஹர்டிகர் என்பவர் தனது குழுவுடன் நடத்திய 12 வருடங்கள் இரண்டு பிரிவாக நடத்திய ஆய்வில், முதல் பிரிவினருக்கு ஐம்பது தலைமுறையாக ஒரே உணவுப் பழக்கத்தில் இருந்து கடைசி இரண்டு தலைமுறையில் உணவுப் பழக்க மாற்றம் கண்டவர்கள். இரண்டாம் பிரிவினர் 52 தலைமுறைக்கும் ஒரே உணவுப் பழக்கத்தை கொண்டவர்கள் என ஆய்வு செய்துள்ளார்.

ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

திடீரென ஊட்டச்சதில் மாற்றம், அதிகப்படியான ஊட்டச்சத்து மற்றும் உடல் பருமன் அதிகரிப்பவர்களுக்கு (முதல் பிரிவினர்) இருதயக் கோளாறுகள், நீரிழிவு, வளர்சிதை மாற்றம் போன்றவை பாதிக்கப்படுகிறதாம்.

ஊட்டச்சத்துகள்

ஊட்டச்சத்துகள்

குறைந்த அளவு வைட்டமின் பி12, மற்றும் அதிகப்படியான ஃபோலேட் அளவுகள் போன்றவை தான் டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்க காரணம் என்று மருத்துவர் ஹர்டிகர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Are Indians At Higher Risk Of Diabetes

Do you know why Indians at higher risk of diabetes? read here.
Desktop Bottom Promotion