For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?

By Maha
|

சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை. ஆனால் சர்க்கரை நோய் வந்த பின்னர் சர்க்கரையை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் நீரிழிவு நோய் வந்துவிட்டால், ஒருசில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்யது அவசியம். ஆனால் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மிகவும் கடுமையானவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. சரி, அப்படியெனில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?

உண்மையை சொல்லப்போனால் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லதல்ல. அப்படி சர்க்கரை முற்றிலும் தவித்தாலும் பல்வேறு தீவிரமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே சர்க்கரை நோய் வந்துவிட்டால், உணவுகளுக்கு முற்றிலும் கட்டுப்பாடுகளை விதிக்காமல், சரியான உணவுகளை சரியான அளவில் சரியான நேரத்தில் உட்கொண்டு வர வேண்டும்.

மேலும் சர்க்கரை நோய் வந்துவிட்டால், அவர்கள் வாழ்க்கை முறையில் மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால், சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம். இங்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசியுடன் இருக்காதீர்கள்

பசியுடன் இருக்காதீர்கள்

நீரிழிவு நேரய் உள்ளவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது சர்க்கரைன் அளவை முற்றிலும் குறைத்து, ஆபத்தை விளைவிக்கும். ஆகவே எப்போதும் தங்களின் பையில் சாப்பிடுவதற்கு வைத்திருக்க வேண்டும். மேலும் மூன்று வேளை சாப்பிடுவதோடு, அவ்வப்போது சிறுசிறு அரோக்கியமான ஸ்நாக்ஸ்களையும் உட்கொண்டு வர வேண்டும்.

சீரான இடைவெளியில் சாப்பிடவும்

சீரான இடைவெளியில் சாப்பிடவும்

எப்படி பசியுடன் இருக்கக்கூடாதோ, அதேப்போல் சீரான இடைவெளியில் தவறாமல் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கலாம்.

புரோட்டீன் உட்கொள்ளவும்

புரோட்டீன் உட்கொள்ளவும்

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலில் போதிய அளவில் புரோட்டீன் இருக்க வேண்டும். ஆகவே அவ்வப்போது புரோட்டீன் உணவுகளையும் எடுத்து வர வேண்டும். இது மிகவ்ம முக்கியமானது.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்து வரை வேண்டும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் மூலம் குளுக்கோஸ் உடையாமல் நீண்ட நேரம் ஆரோக்கியமாக செயல்பட முடியும்.

இனிப்புக்களை வைத்திருக்கவும்

இனிப்புக்களை வைத்திருக்கவும்

சில நேரங்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது மிகவும் குறைந்துவிடும். இந்த நிலையில் சிறிது இனிப்பான பொருட்களை உட்கொண்டால், தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படுவது நீங்கி, சீராக செயல்பட முடியும். இப்போது சொல்லுங்கள் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? கண்டிப்பாக இல்லை தானே!

உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சி அவசியம்

முக்கியமாக நல்ல ஆரோக்கியமான உணவுகளுடன், தினமுடம் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் மற்றும் குளுக்கோஸ் கரையும். இதனால் உடலில் குளுக்கோஸின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Should Diabetics Avoid Sugar Completely?

With minor changes in lifestyle and habits, you can bounce back to life and live with health and happiness. Keep these things in mind concerning a diabetic diet.
Story first published: Friday, January 30, 2015, 19:07 [IST]
Desktop Bottom Promotion