For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் இடர்பாட்டை அதிகரிக்கக்கூடிய 5 பழக்கவழக்கங்கள்!!!

By Super
|

இதய நோய்கள் போலவே சர்க்கரை நோயும் கூட இன்றைய நவீன சமுதாயத்தில் அதிகமாக வரக்கூடிய நோயாகும். மரபு ரீதியாக மட்டுமே வருவதல்ல சர்க்கரை நோய்; ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளும் கூட இதற்கு காரணமாக உள்ளது.

நீரிழிவு நோயை பற்றிய 10 வதந்திகள்!!!

உண்ணும் பழக்கவழக்கங்களை மாற்றினால், சர்க்கரை நோயை தடுக்கும் வழிகளில் அது ஒன்றாக அமையும். சர்க்கரை நோய் வருவதற்கான சில பழக்கவழக்கங்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிப்பூட்டப்பட்ட பானங்கள்

இனிப்பூட்டப்பட்ட பானங்கள்

இனிப்பூட்டப்பட்ட பானங்களில் கலோரிகளும், சர்க்கரையும் அதிகளவில் இருக்கக்கூடும். அதனால் சோடா மற்றும் இதர பாட்டில் பானங்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பூட்டப்பட்ட பானங்கள் குடிப்பதை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் பருமனும், சர்க்கரை நோயும் வந்து சேரும்.

தாமதமாக உண்ணுதல்

தாமதமாக உண்ணுதல்

நீங்கள் தாமதமாக உண்ணுபவரா? சர்க்கரை நோய் வருவதற்கான ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களில் இதுவும் ஒன்றாகும். தாமதமாக உண்ணுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பாதிக்கப்படும். அதனால் சர்க்கரை நோய் ஏற்படும் இடர்பாடு அதிமாகும்.

நார்ச்சத்து குறைபாடு

நார்ச்சத்து குறைபாடு

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அரிதாக சாப்பிடுவதால் உங்கள் செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது செரிமானத்தை பாதிப்பதோடு சர்க்கரை நோய் இடர்பாட்டையும் அதிகரிக்கும்.

நடு இரவில் நொறுக்குத்தீனியை உண்ணுதல்

நடு இரவில் நொறுக்குத்தீனியை உண்ணுதல்

இரவில் தூங்க நீங்கள் கஷ்டப்பட்டால், அந்த நேரத்தில் அதிக கலோரிகள் உள்ள நொறுக்குத்தீனியை உண்ண வேண்டும் என்றில்லை. மேலும் இது சர்க்கரை நோயை ஏற்படுத்தும் உண்ணும் பழக்கங்களில் ஒன்றாகும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மரபு ரீதியாக உங்கள் குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால், மன அழுத்தத்தை பராமரிப்பது உங்களுக்கு மிகவும் முக்கியமாகும். அதற்கு காரணம், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை பாதிக்கக்கூடும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய சில பழக்கவழக்கங்கள் சர்க்கரை நோய் வருவதற்கான சில காரணங்களாகும். அதனால் அளவுக்கு அதிகமான சர்க்கரை பண்டங்களை உண்ணுதல் அல்லது இரவு நேரத்தில் நொறுக்குத் தீனிகளை உண்ணுதல் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளை தவிர்க்கவும். நீங்கள் உங்கள் குடும்பத்தை விரும்புவதால் உங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Habits That Can Increase Risk Of Diabetes

Here are some of the habits that can increase the risk of diabetes. Read more to know about.
Desktop Bottom Promotion