For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும் உணவுகள்!!!

By Ashok CR
|

நீங்கள் டைப் 2 வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அல்லது உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுகளில் ஏதோ பிரச்சனை உள்ளது.

இரத்தத்தில் உள்ள க்ளுகோஸை பராமரிப்பதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம். இதனால் பல விதமான உடல்நல பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்பட்டு வருவீர்கள். ஆனால் இதை எண்ணி கவலை கொள்ளாதீர்கள்! உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க பல உணவுகள் உதவும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க அவ்வகையான உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பது சுலபமாகி விடும்.

ஆகவே இப்போது இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவுகளை பராமரிக்க உதவும் சில சிறந்த உணவுகளை பற்றி பார்க்கலாமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிலோன் இலவங்கப்பட்டை

சிலோன் இலவங்கப்பட்டை

ஓட்ஸ் அல்லது ஒயின் போன்ற உணவில் இலவங்கப்பட்டையை சேர்க்கும் போது கண்டிப்பாக அவை சுவையாக இருக்காது. ஆனால் இதில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சிலோன் இலவங்கப்பட்டை சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க இது சிறந்த உணவாக செயல்படுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸில் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் இதிலும் அடங்கியுள்ளது. நார்ச்சத்து உங்கள் உடலின் உறிஞ்சும் வீதத்தை குறைக்கும். இதனால் கார்போஹைட்ரேட் மிக மெதுவாக க்ளுகோஸாக மாறும். கூடுதலாக, ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுகன் இன்சுலின் உணர்ச்சி அளவை மேம்படுத்தும்.

வெந்தயம்

வெந்தயம்

இது பொதுவான உணவு இல்லை தான். ஆனாலும் கூட உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும். டைப் 1 மற்றும் டைப் 2 வகை சர்க்கரை நோய்களை கொண்டவர்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க இது உதவும். இதெற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த விதையில் உள்ள அளவுக்கதிகமான நார்ச்சத்தே.

சால்மன்

சால்மன்

சால்மன் மீனில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமே உள்ளது என நினைத்துள்ளீர்களா? அது தான் இல்லை! இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் டி அதில் உள்ளது. வைட்டமின் டி குறைபாடு, டைப் 2 வகையிலான சர்க்கரை நோயுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. அதனால் வைட்டமின் டி அளவை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் கூட உங்களை இதய நோயில் இருந்து பாதுகாத்து, இன்சுலின் எதிர்ப்பினால் ஏற்படும் வீக்கத்தை குறைய வைக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டு என்பது பல உடல் நல பயன்களை அளிப்பது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அதனோடு சேர்த்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை பிரச்சனையை போக்கவும் அது உதவும். முயல்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பூண்டு சிறப்பாக உதவுகிறது என்பதை பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்களுக்கும் சல்ஃபருக்கும் தான் நாம் நம் நன்றியை தெரிவிக்க வேண்டும்.

போனஸ்: பூண்டை போலவே வெங்காயமும் நல்லது.

பாதாம்

பாதாம்

வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ள உணவு தான் பாதாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் க்ளுகோஸை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பாதாமில் காணப்படும் அதிக நார்ச்சத்து, நீங்கள் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக செரிக்க வைக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் அது உதவும்.

வெண்ணெய்ப்பழம்

வெண்ணெய்ப்பழம்

வெண்ணெய்ப்பழத்தில் மோனோசேச்சுரேட்டட் கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த இது உதவும். க்ளுகோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாது மெட்டபாலிக் சிண்ட்ரோம் இடர்பாட்டையும் குறைக்கும் இந்த பழம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி வளமையாக இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவற்றில் பெக்டினும் கூட வளமையாக உள்ளது. பெக்டின் என்பது ஒரு வகை நாராகும். இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை என இரண்டையும் கட்டுப்படுத்தும். ஆரஞ்சுகளில் ஜி.ஐ. குறைவாக இருக்கும். அதனால் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என்ற பயமில்லாமல் அதனை உண்ணலாம்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

இவை சிறியதாக இருந்தாலும் கூட, இவற்றில் புரதம், நார்ச்சத்து, கனிமங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் போன்ற அட்டகாசமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உடல் பருமனாக உள்ளவர்களின் உணவில் ப்ளூபெர்ரி சேர்க்கப்பட்ட ஒரு ஆய்வு 2010 ஆம் ஆண்டு நடந்தது. அதன் படி, 6 வார காலத்திற்கு, தினமும் ப்ளூபெர்ரி ஜூஸ் குடித்து வந்த நிலையில் அவர்களின் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை அதிகரித்தது தெரிய வந்தது.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆரோக்கியமான உணவு வகைகளில் புகழ் பெற்ற உணவாக விளங்கி வருகிறது ஆப்பிள் சிடர் வினிகர். தண்ணீருடன் கலக்கப்பட்ட ஆப்பிள் சிடர் வினிகரை சாப்பிடும் முன் குடித்தால் நல்ல பலனை தருகிறது என சர்க்கரை டையாபடிஸ் கேர் வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க இது உதவுகிறது. அதேப்போல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Foods to Manage Blood Glucose Levels

There are a lot of foods that can help you get your glucose under control. They contain nutrients for managing blood sugar levels, making it easy for you to stay healthy and keep your blood sugar stable. Check out the foods below, all filled with nutrients for managing blood sugar levels:
Desktop Bottom Promotion