For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த அன்றாடம் பின்பற்ற வேண்டிய 8 பழக்கங்கள்!

By Viswa
|

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? அப்படி என்றால் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை ஒன்றே ஒன்று தான், அது என்னவெனில் நல்ல பழக்கங்களை பின்பற்றுவது மட்டுமே ஆகும். முக்கியமாக உங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

இதுப்போலவே நாம் இன்னும் நமது அன்றாட வாழ்வில் தூக்கம், நடைப்பழக்கம், மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போன்று பின்பற்ற வேண்டியவை ஏராளம் உள்ளன. அதில் முக்கியமான சிலவன பற்றி நாம் தெரிந்துக் கொள்ளலாம். இதோ நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான நேரத்திற்கு உறக்கம்

சரியான நேரத்திற்கு உறக்கம்

உறக்கமின்மை பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்னவெனில் நல்ல உடல் நலத்திற்கு நல்ல உறக்கம் தேவை. அதாவது, சரியான நேரத்திற்கு போதுமான அளவு நன்கு உறங்க வேண்டும். நல்ல உறக்கம் இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாது நல்ல உடல்நல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

முடிந்த அளவு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், குறைந்தப்பட்சம் வாரம் ஒரு முறையாவது. ஏனெனில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் கரைக்கப்படுவதினால் அவை இரத்தத்தில் தங்காது போய்விடுகிறது. அதனால், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.

கேளிக்கைகளில் ஈடுபடுங்கள்

கேளிக்கைகளில் ஈடுபடுங்கள்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அல்லவா... அதேப்போல இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் அடங்கும். சர்க்கரை நோயாளிகளின் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையில், நன்கு சிரித்து வாழ்பவர்களின் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

தினசரி நடைப்பயிற்சி

தினசரி நடைப்பயிற்சி

பொதுவாகவே நடைப்பயிற்சி ஆரோக்கியமானது அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் இதய நோய்கள் வராது தடுக்கவும் உதவுகிறது. ஆகவே தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

ஒரு கப் ஒயின்

ஒரு கப் ஒயின்

தினமும் இரவு உணவில் ஒரு கப் ஒயின் சேர்த்துக் கொள்வது நல்லது என ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவருகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம் மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் இது கட்டுப்படுத்துகிறது.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்ளுங்கள். அதிலும் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நார்ச்சத்து மிகுந்த உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. பழ வகைகளில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி போன்றவை சிறந்ததாகும். காய்கறிகளில் சோளம், கீரை போன்றவை நல்ல நார்ச்சத்து உடையவை ஆகும். இவை எல்லாம் உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

யோகா

யோகா

மன அழுத்தத்தினாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே யோகா செய்வது நல்லது ஆகும் இதன் மூலம் உடலும் மனமும் அமைதி அடைவதினால் உடல் நலம் ஆரோக்கியம் அடையும் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் வராது குறைக்க இயலும்.

இனிப்பை ஒதுக்குங்கள்

இனிப்பை ஒதுக்குங்கள்

இயன்ற வரை முற்றிலுமாக உணவில் இனிப்பை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்திவிடும் மற்றும் சுகர்-ப்ரீ காபிகளை எடுத்துக் கொள்வது சிறப்பு. ஏன் என்றால் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Healthy Habits For Maintaining The Blood Sugar Level

This article is about to know how to control your blood sugar level and some habits you should follow regularly to control your blood sugar level.
 
Story first published: Tuesday, February 3, 2015, 15:34 [IST]
Desktop Bottom Promotion