For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைக்காவிடில் சந்திக்கக்கூடிய பெரும் ஆபத்துக்கள்!!!

By Maha
|

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சனை தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய். சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகம் இருப்பதாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதற்கான அறிகுறிகள் உடலில் தென்படும். அதில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகப்படியான தாகம், எடை குறைவு, அதிகப்படியான சோர்வு போன்றவை பொதுவான அறிகுறிகள்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

இத்தகைய அறிகுறிகள் தென்படும் போதே, அதனை கட்டுப்பாட்டுடன் வைக்க முயற்சிக்க வேண்டும். அப்படி சீரியஸாக முயற்சியில் இறங்காவிடில், உடலில் உள்ள திசுக்களானது பாதிக்கப்பட்டு, பின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதுடன், உயிருக்கே உலை வைக்கும் பல்வேறு நோய்களில் பாதிக்கப்படக்கூடும்.

சர்க்கரை வியாதி இருக்கா?.. இருந்தாலும் சந்தோஷமா வாழ சில ஈஸியா வழிகள்!

அதிலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரித்துவிட்டால், அதன் தீவிரமானது பார்வையை இழப்பது மற்றும் ஊனம் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இதுப்போன்று இன்னும் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

இங்கு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுடன் இல்லாமல் தீவிரமாக இருந்தால், சந்திக்கக்கூடிய ஒருசில பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதுப்போன்று வேறு: சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான சில டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரடைப்பு

மாரடைப்பு

சர்க்கரை நோய் வந்தால், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தமும் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' போல் வந்துவிடும். இதனால் தமனிகளானது பாதிக்கப்பட்டு, விரைவில் மாரடைப்பு வரக்கூடும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இறப்பதற்கு முக்கிய காரணமும், இது தான்.

சிறுநீரக நோய்

சிறுநீரக நோய்

டைப்-1 நீரிழிவினால் பாதிக்கப்பட்ட முன்றில் ஒரு பங்கு மக்களுக்கு நீரிழிவு நெப்ரோபதி என்னும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்தைக் கூட சந்திக்க நேரிடும். மேலும் இந்த நிலையில் டைப்-1 நீரிழிவு உள்ளவர்களுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது அவ்வப்போது இரத்தத்தை சுத்தப்படுத்தும் டையாலிசிஸ் என்னும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

நரம்பு பாதிப்பு

நரம்பு பாதிப்பு

இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது கட்டுப்பாட்டுடன் இல்லாமல் தீவிரமடைந்தால், உடலில் உள்ள நரம்புகளானது பாதிக்கப்படும். இதற்கு நீரிழிவு நியூரோபதி என்று பெயர். அதிலும் இதனால் உடலின் எந்த பகுதியில் உள்ள நரம்புகள் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். இப்படி நரம்புகள் பாதிக்கப்பட்டால், அவை ஒரு கட்டத்தில் ஊனத்தை ஏற்படுத்திவிடும். மேலும் இந்த பிரச்சனையானது டைப்-1 நீரிழிவு உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் தான் அதிகம் பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே மூட்டுகள் மற்றும் கால்களில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அதனை உடனே குணமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், ஊனம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

நீரிழிவு விழித்திரை

நீரிழிவு விழித்திரை

சர்க்கரை நோயானது கண்களில் கூட பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். எப்படியெனில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கும் போது, இரத்த நாளங்களின் சுவர்களில் சர்க்கரையானது படிகங்களாக தங்கி அடைப்புக்களை ஏற்படுத்தும். இப்படி அந்த அடைப்புகளானது கண்களுக்கு செல்லும் இரத்த நாளங்களில் ஏற்பட்டால், அவை விழித்திரையில் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வையை இழக்கச் செய்துவிடும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் சர்க்கரை நோயானது தீவிரமாக இருந்தால் தான் ஏற்படக்கூடும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறி தென்பட ஆரம்பித்தால், அதனை கட்டுப்பட்டுத்தும் முயற்சியில் உடனே இறங்குங்கள். இல்லாவிட்டால், உயிரையே இழக்க நேரிடும். மேலும் இந்த பிரச்சனைகள் டைப்-1 நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், அவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Take Care Of Diabetes To Avoid Complications

When diabetes isn't well managed, it can lead to problems like amputation and heart disease. Learn how to avoid diabetes complications.
Desktop Bottom Promotion