For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயை உண்டாக்கும் உணவு பழக்கவழக்கங்கள்!!!

By Ashok CR
|

நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் என்பது அவர்களது தவறான உணவு பழக்கவழக்கங்களால் தற்போது அதிகரித்து வருகிறது. பாதி சமைக்கப்பட்ட உணவு பொருள்கள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் மல்டிநேசனல் கம்பெனிகளால் ஊக்குவிக்கப்பட்டு அனைத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றி, அவர்களுக்கு நீரிழிவு நோய் போன்ற வியாதிகளை ஏற்படுத்துகிறது. இதில் தற்பொழுது குறைந்த வயதுள்ளவர்கள் உடல் எடை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான உடல் எடை நீரிழிவு நோய் மற்றும் இருதய சம்மந்தமான நோய்களையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீரிழிவு நோயை தவிர்க்க சரியான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

DID YOU KNOW ABOUT: Bad Habits To Quit For A Healthy Life

நம் உணவுகளை சரி செய்து விட்டால் சர்க்கரை நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். க்ளைசீமிக் இன்டெக்ஸ் உணவுகளை (வேகமாக குளுக்கோஸாக மாறக் கூடிய உணவுகள்) அதிகமாக உட்கொண்டால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும். பாஸ்தா, வெள்ளை ரொட்டி, குளிர்பானங்கள், சுத்தம் செய்யப்பட்ட மாவுப்பொருட்கள் இதனை உட்கொள்வதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

பால் மற்றும் அசைவ பொருட்களில் பூரிதக் கொழுப்பு அடங்கியுள்ளது. இதனை ட்ரான்ஸ் கொழுப்பு என்றும் அழைக்கலாம். இவைகள் அடைத்து வைத்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றில் அதிகமாக இருக்கும். சிகப்பிறைச்சி, பால் பொருட்கள் மற்றும் ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய் அடங்கிய பொருட்கள் எல்லாம் உடலுக்கு தீங்கானவை. நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சரியான அளவில் இல்லாத போது தான் சர்க்கரை நோய் உண்டாகிறது. இன்றைய சூழலில் அமைந்திருக்கும் நமது சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் மன அழுத்தமும் நம்மை ஒழுங்காக சாப்பிட வைப்பதில்லை. அதனால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. காலை உணவை தவிர்த்தல் போன்றவைகளால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சமமின்மையோடு விளங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை உணவை தவிர்த்தல்

காலை உணவை தவிர்த்தல்

காலை உணவை நிறைய மக்கள் தவிர்க்கின்றனர். இதனால் சர்க்கரையின் அளவு குறைந்து அதிகமான பசியை ஏற்படுத்துகிறது.

க்ளைசீமிக் இன்டெக்ஸ் உணவுகளை அதிகமாக உண்ணுதல்

க்ளைசீமிக் இன்டெக்ஸ் உணவுகளை அதிகமாக உண்ணுதல்

இவ்வகை உணவுகளில் நார்ச்சத்து இருப்பதில்லை. மேலும் வேகமாக செரிமானமாகி சீக்கிரமே பசியை தூண்டும். அதே போல் அளவுக்கு அதிகமான குளுக்கோசும் வேகமாக வெளியேறிவிடும். அதனால் சர்க்கரை நோய் வருவதற்கான இடர்பாடுகள் அதிகமாக உள்ளது.

தேவையில்லாத கொழுப்புகளை எடுத்துக் கொள்ளுதல்

தேவையில்லாத கொழுப்புகளை எடுத்துக் கொள்ளுதல்

அனைத்து வகையான கொழுப்புகளும் தவறானது அல்ல, சில நல்ல கொழுப்புகளும் உள்ளது. மீன் மற்றும் ஆலிவ் எண்ணெய்யில் இது உள்ளது. இருப்பினும் எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், பாதி சமைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், பாஸ்ட் புட் உணவுப்பொருட்கள் போன்றவற்றில் தேவையில்லாத கொழுப்புகள் அதிகமாக உள்ளது. இது உடல் நலத்தை கெடுக்கிறது.

நலத்திற்கு கேடு விளைவிக்ககூடிய நொறுக்குதீனிகள்

நலத்திற்கு கேடு விளைவிக்ககூடிய நொறுக்குதீனிகள்

நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் கூட நொறுக்குத் தீனிகளின் மீதான காதல் குறைவதில்லை. அப்படி உண்ண ஆசை வரும் நேரத்தில் பழங்கள் அல்லாத செயற்கையான இனிப்பு உணவுகள், சமோசா போன்ற எண்ணெய் பலகாரங்கள் நீரிழிவு நோய்களுக்கு வழி ஏற்படுத்துகிறது.

காற்று கலந்த குளிர்பானங்கள்

காற்று கலந்த குளிர்பானங்கள்

காற்று கலந்த குளிர்பானங்கள்

பழங்களையும், காய்கறிகளையும் தவிர்த்தல்

பழங்களையும், காய்கறிகளையும் தவிர்த்தல்

ஊட்டச்சத்துகள் மற்றும் நார்ச் சத்துக்கள் பழங்களில் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள சர்க்கரையை சரியான அளவில் வைத்து செரிமானத்தையும் சீர்பட நடத்தும். இதை தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

தேவையில்லாத நேரத்தில் நொறுக்குதினிகள் சாப்பிடுதல்

தேவையில்லாத நேரத்தில் நொறுக்குதினிகள் சாப்பிடுதல்

சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதால் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.

அதிகமாக சாப்பிடுதல்

அதிகமாக சாப்பிடுதல்

பரபரவென இருக்கும் இன்றைய நேவீன உலகத்தில் மன ரீதியான அழுத்தத்திற்கு பலரும் உள்ளாகின்றனர். அதனால் நம்மை அதிகமாக உண்ணத் தூண்டும். இதனால் உடல் எடை அதிகரித்து உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

உணவிற்கு பின்னால் சாப்பிடும் இனிப்புகள்

உணவிற்கு பின்னால் சாப்பிடும் இனிப்புகள்

உணவருந்திய பின் இனிப்பு பண்டங்களையும் ஐஸ் கிரீம்களையும் வழங்குவது பெரிய பாவமாக அமையும். உணவின் போது அதிகமாக சர்க்கரை உடலில் செல்வதால் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து விடும். அதனால் உணவிற்கு பின்பு டெசெர்ட் எடுத்துக் கொண்டால் கலோரிகள் எரிக்கப்படுவது குறைந்து விடும். அதனால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating habits that cause diabetes

Irregular eating habits due to stressful and busy lifestyle increase risk of diabetes. Habits such as skipping breakfast results in imbalance of sugar level in your body resulting in sugar cravings and hunger pangs.
Desktop Bottom Promotion