For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயாளிகளுக்கான வெஜிடேரியன் டயட்...

By Ashok CR
|

மன போராட்டம் மற்றும் பரபரப்பான வேலை சூழல் நிறைந்துள்ள இன்றைய வாழ்க்கையில் போதிய உணவு பழக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகி விட்டது. அதற்கான டயட் திட்டங்களும் அனைவருக்காகவும் பல உள்ளது. டயட் என்பது வெறுமனே எடை குறைவுக்காக மட்டும் கிடையாது. அது நம் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் மெட்டபாலிசத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்காகவும் உதவும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், சர்க்கரை நோயாளிகள் சீரான டயட் முறையையும் உணவு உட்கொள்ளுதளையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் மற்றும் எந்த நேரம் உண்ணுகிறார்கள் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் ஒன்று தயார் செய்ய வேண்டுமானால், அது சைவ டயட்டாக இருப்பது தான் நல்லது. அதுவே ஆரோக்கியமாக அமையும். சர்க்கரை நோயாளிகளுக்கென பல சைவ டயட் வகைகள் உள்ளது. அவைகளில் பல வகை திறம்பட விளங்கும் என்று விஞ்ஞான பூர்வாமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சைவ டயட்டை உண்ணும் போது, அவை காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் கலவையாக இருக்க வேண்டும். அது ஆரோக்கியமானதாகவும் சர்க்கரை நோயாளிகள் உண்ணக் கூடிய உணவு வகைகளாகவும் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இப்படி ஒரு சைவ டயட் வகையை அமெரிக்கன் ஹெல்தி புட்ஸ் விளக்கியுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களின் கலவையாக விளங்கும் இந்த டயட் மிகவும் சிறப்பாகவும் சரியான நிலைபாட்டுடன் செயல்படுகிறது. இது 7 நாள் டயட் திட்டமாகும். இதனை பின்பற்றினால் வளமையான புரதம் மற்றும் சர்க்கரை குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். இந்த திட்டத்தில் உள்ளதை தவிர இதர காய்கறிகள் மற்றும் அதி முக்கிய உணவுகளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ணலாம். அந்த திட்டம் இது தான்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாள் 1

நாள் 1

காலை உணவு: சோயா பாலுடன் ஓட்ஸ், பட்டை மற்றும் கிஸ்மிஸ்

மதிய உணவு: ஹம்மஸ், காய்கறிகள் மற்றும் நற்பதமுள்ள பழ சாலட்

இரவு உணவு: அதிக காய்கறிகளுடன் ப்ரவுன் பாஸ்தா

நாள் 2

நாள் 2

காலை உணவு: டோஃபு (சோயா பாலில் செய்யப்படுவது) மற்றும் கோதுமை ரொட்டி

மதிய உணவு: முழு தானியத்தில் செய்த பிஸ்கட் உடன் காய்கறி சூப்

இரவு உணவு: மிளகாய் கலந்த கைக்குத்தல் அரிசியால் செய்யப்பட்ட சாதத்துடன் சுண்ட வைத்த சாலட்

நாள் 3

நாள் 3

காலை உணவு: முழு தானிய டோஸ்ட் மற்றும் வெள்ளரிப்பழம்

மதிய உணவு: சல்சா சாஸ் சேர்த்த பீன் பாஸ்தா, காய்கறிகள் மற்றும் காய்கறி சூப்

இரவு உணவு: முழு கோதுமை பிரட் மற்றும் சாலட்

நாள் 4

நாள் 4

காலை உணவு: முழு தானிய புட்டு அல்லது நற்பதமுள்ள பழங்களுடன் வாபிள்.

மதிய உணவு: கிரில் செய்த காய்கறி கலந்த சாண்ட்விச்

இரவு உணவு: காய்கறி சூப், சுண்டச் செய்த சாலட் மற்றும் பீட்டா பிஸ்கட்ஸ்

நாள் 5

நாள் 5

காலை உணவு: சோயா பாலுடன் தானியங்கள் மற்றும் நறுக்கிய ஆப்பிள்

மதிய உணவு: கேரட் அல்லது ரஸ்க் உடன் தக்காளி சூப்

இரவு உணவு: கீரையுடன் ஸ்பகட்டி மற்றும் காளான்.

நாள் 6

நாள் 6

காலை உணவு: முழு தானியங்களுடன் சோயா பால்

மதிய உணவு: தண்ணீர்விட்டான் கிழங்குடன் கௌஸ்கௌஸ், பட்டாணி மற்றும் முள்ளங்கி

இரவு உணவு: கீறிய சோயாவுடன் சாலட்

நாள் 7

நாள் 7

காலை உணவு: பழச்சாறு

மதிய உணவு: கொண்டைக்கடலையுடன் கோதுமை சாலட் மற்றும் காய்கறிகள்

இரவு உணவு: தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் காளான் ரிசொட்டோ மற்றும் சுண்ட வைத்த சாலட்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetic Diet For Vegeterians

The 7 Day Plan for the Diabetic Diet gives a proper distribution of protein rich and low sugar food intake. Apart from the Plan, a Diabetic patient can consume vegetables and other essential foods every 2 hours. It will help maintain their sugar level. The Plan is as follows:
Story first published: Monday, December 2, 2013, 19:17 [IST]
Desktop Bottom Promotion